உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும் மைக்ரோசாப்ட் நிறுவனருமான பில்கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா தங்களது 30 வருடத் திருமண உறவை முறித்துக்கொள்வதாகக் கடந்த ஆண்டு மே மாதம் தம்பதியாகத் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து இருவரும் முறைப்படி விவாகரத்து பெற்றனர். விவகாரத்து செய்து கொண்ட பின்பும் அவர்கள் இணைந்து உருவாக்கிய அறக்கட்டளைக்காக மட்டும் இருவரும் ஒன்றாக பணியாற்றி வருகின்றனர்.
சமீபத்தில் பிரபல பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி அளித்தபோது தனது முன்னாள் மனைவி மெலிண்டாவை மீண்டும் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக பில்கேட்ஸ் மனம் திறந்து பேசியுள்ளார்.
அந்த பேட்டியில் அவர் கூறியது:
கொரோனா காலகட்டத்தில் வாழ்க்கையில் சில மாற்றங்கள் நிகழ்ந்ததாகத் தெரிவித்த அவர், மெலிண்டாவை விவாகரத்து செய்தாலும் எங்களின் திருமணம் சிறந்த திருமணம் என்றும்,
தொடர்ந்து அறக்கட்டளையில் மெலிண்டா பணியாற்றுவதை அதிர்ஷ்டமாக உணர்கிறேன் என்றார்.
மேலும் அவர், "நான் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள மாட்டேன். ஆனால் மெலிண்டாவை மீண்டும் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். ஆனால், மெலிண்டா என்னை மீண்டும் திருமணம் செய்து கொள்வாரா என்பது எனக்குத் தெரியாது" என்றார். பில்கேட்ஸ் மற்றும் மெலிண்டா தம்பதிக்கு ஜென்னர், ரோரி மற்றும் போபே ஆகிய 3 பிள்ளைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn: https://www.newssensetn.com/
Nalam360 : https://www.newssensetn.com/health
Newsnow: https://www.newssensetn.com/wow-news
Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu