Guinness: 11 நாட்கள், 13,500 கி.மீ - இடைவிடாது பறந்து கின்னஸ் சாதனை படைத்த பறவை - எங்கே?

காட்விட் பறவை கடந்த தூரம் சுமார் 8,4365 மைல்கள் (13,574 கிலோமீட்டர்). இந்த பறவை இடைவிடாத மிக நீண்ட பயணத்திற்கான கின்னஸ் சாதனையை படைத்துள்ளது.
bar-tailed Godwit
bar-tailed GodwitCanva
Published on

இடைவிடாமல் 13,000 கிலோமீட்டர் தூரம் பறந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது bar-tailed Godwit என்ற பறவை.

வடக்கு அமெரிக்காவின் அலாஸ்காவிலிருந்து ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியாவுக்கு காட்விட் பறவை இடம்பெயர்ந்து சென்றுள்ளது.

காட்விட் பறவை கடந்த தூரம் சுமார் 8,4365 மைல்கள் (13,574 கிலோமீட்டர்). இந்த பறவை இடைவிடாத மிக நீண்ட பயணத்திற்கான கின்னஸ் சாதனையை படைத்துள்ளது.

11 நாட்கள், உணவுக்காகவோ, அல்லது ஓய்வெடுக்கவோ எங்கும் தனது பயணத்தை நிறுத்தாமல் பறந்து சென்றுள்ளது.

கின்னஸ் உலக சாதனைகளின் அறிக்கையின் படி, இந்த காட்விட் பறவை, கடந்த அக்டோபர் 13, 2022 அன்று தன் பயணத்தை தொடங்கியது.

bar-tailed Godwit
உலகின் நீண்ட முத்தம்: 58 மணி நேரம் முத்தமிட்ட தம்பதி; 8 வருடங்களாக தொடரும் கின்னஸ் சாதனை!

இந்த பறவை கடந்த தூரமானது லண்டனிலிருந்து நியூயார்க்கிற்கு இரண்டரை முறை சென்று வரும் தூரமாகும். 234684 என்ற எண் கொண்ட 5ஜி டேக் காட்விட் பறவையின் மேல் பொருத்தப்பட்டிருந்தது.

அதிலிருந்து சேகரிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில், இந்த பறவை 11 நாட்கள் மற்றும் ஒரு மணி நேரம் இடைவிடாமல் பறந்துள்ளது.

இரவு பகலாக பறவை மேற்கொண்ட இந்த பயணத்தின் விளைவாக அதன் உடல் எடை பாதிக்கும் மேல் குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும், வழக்கமாக நியூசிலாந்துக்கு புலம்பெயர்ந்து செல்லும் இந்த காட்விட் வகை பறவை, இந்த முறை ஆஸ்திரேலியாவுக்கு வந்துள்ளது.

இதற்கு முன்னர் இதே காட்விட் இனத்தை சேர்ந்த மற்றொரு பறவை, கடந்த 2020 ஆம் ஆண்டு 217 மைல்கள் இடைவிடாமல் பறந்து கின்னஸ் சாதனை படைத்திருந்தது.

bar-tailed Godwit
FIFA WC : 44 ஆண்டுகள், 11 உலகக்கோப்பை தொடர்கள்! கின்னஸ் சாதனை 75 வயது நபர் - எங்கே?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com