இது வரை ராஜினாமா செய்த லண்டன் அமைச்சர்களின் பெயர்களை எண்ட் கார்டாக பயன்படுத்தியுள்ளது பிபிசி நிகழ்ச்சி ஒன்று.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இவரது பதவி விலகலுக்கு முன், இவர் மீது போடப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மனத்தினால் நிதியமைச்சர் பதவியில் இருந்து ரிஷி சுனக், சுகாதார அமைச்சர் பதவியில் இருந்து சாஜித் ஜாவித் என ஒருவர் பின் ஒருவராக பதவி விலக்கிகொண்டிருந்தனர்.
அடுத்த 48 மணி நேரத்தில் அமைச்சர்கள், உயர் அதிகாரிகளென 50க்கும் மேற்பட்டோர் ராஜினாமா செய்தனர். இதனால் ஜான்சனுக்கு அரசியல் அழுத்தம் அதிகரித்தது.
இதுஒரு பக்கம் இது மிகப் பெரிய பிரச்னையாக போய்க்கொண்டிருக்க, இங்கிலாந்து மக்கள், அரசியல் தலைவர்கள், மேலும் உலகம் முழுவதிலிருந்தும் பலர் லண்டன் பிரதமரை திட்டித் தீர்த்தனர்.
இந்நிலையில், பிபிசியில் ஒளிபரப்ப பட்ட ஒரு இசை நிகழ்ச்சியில், எண்ட் கார்டுக்கு பதிலாக இதுவரை அந்த நாட்டில் பதவி விலகியுள்ள அமைச்சர்களின் பெயர்களைப் பயன்படுத்தியுள்ளனர்.
நியூஸ்நைட் என்ற நிகழ்ச்சியில் ஒளிபரப்ப பட்ட Bittersweet Symphony என்ற பாடலின் முடிவில் தான் இந்த எண்ட் கார்ட் பயன்படுத்தப்பட்டுள்ளது. கிட்டத் தட்ட பன்னிரண்டு பேருக்கும் மேற்பட்ட பதவி விலகியவர்களின் பெயர்கள் ஸ்க்ரால் ஆன நிலையில், இறுதியில், "Boris Johnson - Prime Minister?" என்று கேள்விக்குறியுடன் முடித்திருந்தனர்.
இந்த நிகழ்ச்சி, ஜான்சன் பதவி விலகுவதற்கு முன் ஒளிபரப்பானது. இதை ஒருவர் தன் டிவிட்டர் பக்கத்தில் பகிரவே, தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust