பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சமீப காலங்களாக மிகவும் சர்ச்சைக்குரிய பிரதமராக இருக்கிறார். இருப்பினும் மூன்று வருடங்களுக்கு முன்பு அவர்தான் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு மிகப் பெரிய வெற்றிக்கு தலைமை தாங்கினார். இந்த வெற்றி என்பது 1987க்கு பிறகு நடந்த மிகப்பெரிய வெற்றியாகும்.
தற்போது பிரதமர் ஜான்சன் தனது சொந்தக் கட்சி எம்பிக்களின் ஆதரவையே இழந்து நிற்கிறார். அதனால் ராஜிமானா செய்யவும் இருக்கிறார். இது எப்படி நடந்தது?
ஜூன 29 புதன் கிழமை அன்று எம்பியாகவும் கன்சர்வேடிவ் கட்சியின் துணைத் தலைமைக் கொறடாவாகவும் உள்ள கிரிஸ் பின்ஞ்சர் இலண்டனில் உள்ள ஒரு தனியார் கிளப்பிற்குச் சென்றார். அவரது வார்த்தைகளில் சொல்வதாக இருந்தார் அவர் "அதிகமாக குடித்தார்" மற்றும் "தான் வெட்கப்படுமளவு" நடந்து கொண்டார்.
மேலும் அவர் இரண்டு ஆண்களை "பிடித்துக்" கொண்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டார். இது சில வருடங்களுக்கு முன்பே அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை பின்தொடர்வதாக இருந்தது. அநேகமாக அவர் பாலியல் நோக்கில் இரு ஆண்களை தொந்தரவு செய்திருக்க வேண்டும். இந்த நடவடிக்கை ஒரு சங்கிலித் தொடர் போல பிரதமரின் வீழ்ச்சிக்கு வழி வகுத்து விட்டது.
முதலில் டவுணிங் தெருவில் (பிரதமர் வீடு இருக்கும்தெரு) பேசும் போது திரு ஜான்சன் திருவாளர் பின்ஞ்சர் குறித்த குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் பற்றி அறிந்திருக்கவில்லை என்று பிப்ரவரி மாதம் கூறினார். அதாவது அவரை துணைத் தலைமைக் கொறடாவாக நியமிப்பதற்கு முன்பு இந்தக் குற்றச்சாட்டு அவருக்கு தெரியாதாம். ஆனால் இது உண்மை இல்லை. ஏனெனில் ஜான்சனுக்கு இது பற்றி முன்பே தெரியும்.
ஜூலை 4 அன்று பிபிசி ஊடகம் பிரதமர் ஜான்சன் மேற்கண்ட பிஞ்சர் குறித்த முறையான புகாரை அறிந்திருப்பதாக அறிவித்தது. மேலும் ஒரு முன்னாள் அரசு ஊழியரான மெக்டொனால்ட் பிரபு மேற்கண்ட புகாரை பிரதமரிடம் நேரில் கூறியதாக கூறினார்.
இறுதியில் திரு ஜான்சன் தன்னிடமும் மேற்கண்ட புகார் கூறப்பட்டதாக ஒப்புக் கொண்டார். மேலும் திரு பிஞ்சரை துணைத் தலைமைக் கொறடாவாக நியமித்ததற்கு மன்னிப்பும் கேட்டார்.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஜூன் 2020 இல் தனது பிறந்த நாளில் ஒரு கூட்டத்தில் பிரதமர் கலந்து கொண்டார். இது கோவிட் பொது முடக்க விதிகளை மீறியது என பிரதமருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஏற்கனவே கோவிட் பொது முடக்கத்தின் போது பிரதமர் வசிக்கும் டவுனிங் தெரு தோட்டத்தில் மது விருந்து நடத்தியதற்காகவும் ஜான்சன் மன்னிப்பு கேட்டார். இதில் கலந்து கொண்ட 83 பேருக்கு இலண்டன் பெருநகர காவல்துறை அபாரதங்களை விதித்தது.
மூத்த அரசு ஊழியரான சூ கிரேவின் இத்தகைய கோவிட் பொது முடக்க விதிகளை மீறிய அரசியல் தலைமையின் தவறுகளை அறிக்கையாக வெளியிட்டுள்ளார். இதற்கு அரசியல் தலைமை பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஊரெல்லாம் மக்கள் பொது முடக்கத்தில் இருக்கும் போது பிரதமர் தலைமையில் பெரும் விருந்து நடைபெற்றது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடந்த டிசம்பரில் திரு ஜான்சன் காமன்ஸ் எனப்படும் பாராளுமன்றத்தில் தனது வீட்டில் பொது முடக்க விதிகள் முறையாக பின்பற்றப்பட்டது என்று பொய்யாகக் கூறினார். அவர் தெரிந்தே பாராளுமன்றத்தை தவறாக வழி நடத்தினார் என்பது குறித்து இப்போது பாராளுமன்ற கமிட்டியால் விசாரிக்கப்படுகிறார்.
2022இல் பணவீக்கம் கடுமையாக உயர்ந்தது. தற்போது அது 9.1%ஆக உள்ளது. நாட்டின் பல நிலமைகள் போரிஸ் ஜான்சனின் கட்டுப்பாட்டில் இல்லை. சான்றாக உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு காரணமாக பிரிட்டனில் எரிபொருள் விலை மற்றும் உணவு விலை உயர்ந்தது.
அரசாங்கம் எரிபொருள் வரியை லிட்டருக்கு 5 பென்ஸ்கள் குறைத்தாலும் ஏப்ரலில் வரி உயர்ந்தது. தேசிய காப்பீடு திட்டமும் 1.25 பென்ஸ் உயர்ந்து விட்டது.
இந்த வரி உயர்வால் வரும் வருமானம் மக்களின் பொது நலம் மற்றும் சமூகப் பாதுகாப்புக்கு செலவழிக்கப்படும் என்று அரசாங்கம் கூறியது. ஆனால ஆண்டுக்கு 34,000 பவுண்டுகள் சம்பாதிக்கும் எவரும் அதிகமாக வரி செலுத்த வேண்டியதாக இருந்தது. இது நடுத்தர வர்க்கத்திதற்கு பெரும் நெருக்கடியை தோற்றுவித்தது.
பல பத்தாண்டுகளாக மிக மோசமான வாழ்க்கைச் செலவு நெருக்கடிகளின் மத்தியில் உழைக்கும் மக்கள் மீதான வரிகளை அரசாங்கம் அதிகரிக்கிறது என தொழிலாளர் கட்சி தலைவர் சர் கீர் ஸ்டார்மர் கூறினார்.
அக்டோபர் 2021இல் காமன்ஸ் சபைக் குழு அப்போதைய கன்சர்வேடிவ் எம்பி ஓவன் பேட்டர்சனை 30 நாள் இடை நீக்கம் செய்ய பரிந்துரைத்தது. அவருக்கு பணம் கொடுத்த நிறுவனங்களுக்கு பயனளிக்கும் வகையில் அவர் விதிகளை மீறியதாக கமிட்டி கூறியது.
ஆனால் பிரதமர் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சியினர் அவரது இடைநீக்கத்தை எதிர்த்து வாக்களித்தனர். மேலும் விசாரணை எப்படி நடந்தது என்பதை அறிய புதிய குழுவையும் நியமித்தனர்.
பிறகு ஒரு வழியாக பேட்டர்சன் ராஜினாமா செய்தார். திரு ஜான்சன் பின்னர் இந்த வழக்கை தவறாக கையாண்டதாக ஒப்புக் கொண்டார்.
போரிஸ் ஜான்சன் ஒரு தெளிவான கொள்கையின் பின்னணியில்தான் தனது தேர்தலில் அபாரமாக பெரும்பான்மையுடன் வென்றார். அதன் மூலமாகவே ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறிய பிரக்சிட் நிகழ்வு நடந்தேறியது.
அப்போதிருந்தே பிரதமரின் அலுவலகத்தில் கவனமின்மை மற்றும் ஆலோசனைகளுக்கு பற்றாக்குறை நிலவியதாக ஜான்சனது விமர்சகர்கள் தெரிவித்தனர். பிரதமரது முன்னாள் தலைமை ஆலோசகரான டொமினிக் கம்மிங்ஸ் என்பவரே பிரதமரை கடுமையாக விமரிசிக்கும் ஆளாக மாறினார். ஜூன் மாதம், கன்சர்வேடிவ் கட்சி எம்பியும் முன்னாள் அமைச்சருமான ஜெர்மி ஹன்ட் திரு ஜான்சனுக்கு ஒருங்கிணைக்கும் திறன், திறமை மற்றும் தொலை நோக்கு இல்லை என்று வெளிப்படையாகவே குற்றம் சாட்டினார்.
இதன் பிறகு கன்சர்வேடிவ் கட்சிக்கு இடைத்தேர்தலில் தோல்விகள் வந்து கொண்டே இருந்தன. சமீபத்திய சர்ச்சைகளைப் பார்த்தால் ஜான்சன் ஒரு அடிப்படை மாற்றத்திற்கு உட்பட மாட்டார் என்றே தெரிகிறது. அந்த அளவுக்கு அவரது தவறுகள் அதிகரித்து விட்டன.
இப்போது போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்யப் போகிறார். ஆனால் இது கன்சர்வேடிவ் கட்சி எம்பிக்களின் பிரச்சினை அல்ல. பிரதமரின் பிரச்சனை.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust