உக்ரைன் ரஷ்யா போர் : 'இந்த மக்களின் வீரம் வியப்பில் ஆழ்த்துகிறது' - போரிஸ் ஜான்சன்

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கீவ் நகரில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியைச் சந்தித்துள்ளார்.இது தொடர்பான வீடியோ, புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
செலென்ஸ்கி மற்றும் போரிஸ் ஜான்சன்
செலென்ஸ்கி மற்றும் போரிஸ் ஜான்சன் Twitter
Published on

போர் சூழலில் இருக்கும் உக்ரைன் நாட்டிற்குச் சென்று அதிபர் செலென்ஸ்கியுடன் உரையாடினார் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்.

உக்ரைன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பு தாக்குதல் பிப்ரவரி 24ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. ஆரம்பத்திலிருந்து பலத்த சேதங்களைச் சந்தித்து வந்தாலும் ரஷ்யாவுக்கு அடி பணியப்போவதில்லை என்பதில் உக்ரைன் உறுதியாக இருந்து வருகிறது. உக்ரைனுக்குள் ஊடுருவி அதன் முக்கிய நகரங்களைக் கைப்பற்ற ரஷ்யா முயன்று வருகிறது. பல நாட்கள் போராடியும் உக்ரைனின் தலைநகரான கீவ் நகரைக் கைப்பற்ற முடியாமல் திணறி வருகிறது ரஷ்ய இராணுவம்.

பொது மக்கள் கொலை

பல இடங்களில் பின் வாங்கிய ரஷ்ய இராணுவம் உக்ரைன் பொது மக்களையும் கொன்று வருவதாக உக்ரைன் அரசு குற்றம் சாட்டியுள்ளது. இதனால் ஐநா சபையிலிருந்து ரஷ்யா இடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறது. லட்சக்கணக்கான உக்ரைன் மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்குச் சென்றுள்ளனர். மீதமிருக்கும் மக்கள் ரஷ்யா இராணுவத்திற்கு அஞ்சி வீடுகளிலிருந்து வருகின்றனர். இந்த நிலையில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கீவ் நகரில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியைச் சந்தித்துள்ளார்.இது தொடர்பான வீடியோ, புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தலை வணங்குகிறேன்

பிரிட்டன் செய்தித்தொடர்பாளர் ஒருவர் இது தொடர்பாகக் கூறும் போது, "உக்ரைன் மக்களுடன் நாங்கள் என்றும் இருப்போம் என்பதை வெளிக்காட்டும் வகையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை நேரில் சந்திக்கப் பிரதமர் உக்ரைனுக்குச் சென்றுள்ளார். உக்ரைன் நாட்டில் இப்போது இருக்கும் நிலைமை குறித்து இருவரும் தனியாக ஆலோசனை நடத்தினர்’’ என்றார்.

இதுகுறித்து போரிஸ் ஜான்சன் கூறும்போது, "உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் உறுதியான தலைமை, உக்ரைன் மக்களின் வீரம் மற்றும் தைரியத்திற்குத் தலை வணங்குகிறேன்’’ என்றார். சமீபத்தில், உக்ரைன் ரயில் நிலையத்தில் ரஷ்யப் படைகள் குண்டு வீசிய நிகழ்வைத் தொடர்ந்து, உக்ரைனுக்கு 100 மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான ஆயுதங்கள் வழங்கப்படும் என போரிஸ் ஜான்சன் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செலென்ஸ்கி மற்றும் போரிஸ் ஜான்சன்
உக்ரைன் ரஷ்யா: புச்சா நகரத்தில் கொத்து கொத்தாக கொல்லப்பட்ட மக்கள், பதற வைக்கும் செய்தி

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com