கொரோனா காலகட்டத்திற்குப் பின் பல நிறுவனங்கள் அதிரடி நடவடிக்கைகளை பிறப்பித்து, ஊழியர்களை வேலை வாங்கி வருகிறது. சில நிறுவனங்கள் ஊழியர்களின் நலன் கருதியும் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
Wakefit' என்ற அந்த நிறுவனம், தங்களின் ஊழியர்கள் அனைவருக்கும், "Announcing Your Right to Nap" எனக் குறிப்பிட்டு, மெயில் ஒன்றை அனுப்பி உள்ளது. இந்த மெயிலில், ஊழியர்கள் அனைவரும் மதியம் உணவருந்திய பின்னர் 30 நிமிடங்கள் வேலை நேரத்தில் தூங்கிக் கொள்ளலாம் என்று குறிப்பிட்டது. இந்த செய்தி ஊழியர்களின் காதில் தேனாகப் பாய்ந்தது. அதற்குள் வேறு நிறுவனம் அறிவித்துள்ள அறிவிப்பு அனைவரையும் கோபமடையச் செய்துள்ளது.
அந்த எச்சரிக்கை அறிக்கையில் அலுவலகத்தில் பணிபுரியும் நேரத்தில் எந்த ஊழியரும் சாப்பிடக் கூடாது. வேலை நேரத்தில் சாப்பிடுவது தடைசெய்யப்பட்டிருக்கிறது. சக ஊழியர்கள் சாப்பிடுவதை நிறுவனத்துக்குத் தெரிவிப்பவருக்கு 20 டாலர் சன்மானமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வேலை நேரத்தில் சாப்பிடும் நபருக்கு மூன்று எச்சரிக்கைகள் வரை வழங்கப்படும். 4-வது முறையும் வேலை நேரத்தில் சாப்பிட்டதாகப் புகாரளிக்கப்பட்டால், அவர் பணியிலிருந்து நீக்கப்படுவார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தக் கடிதம் இணையத்தில் வைரலானதை அடுத்து இணையவாசிகள் பலரும் இத்தகைய அறிவிப்புக்கு எதிராகத் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn: https://www.newssensetn.com/
Nalam360 : https://www.newssensetn.com/health
Newsnow: https://www.newssensetn.com/wow-news
Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu