Ola E- Scooter
Ola E- ScooterTwitter

Ola E - Scooter : 1,400 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை திரும்பப் பெற ஓலா நிறுவனம் முடிவு

இ- வாகனங்கள் தீப்பற்றிக் கொள்வதன் எதிரொலியால் 1,400க்கும் மேற்பட்ட மின்சார ஸ்கூட்டர்களை திரும்பப் பெற ஓலா நிறுவனம் முடிவு செய்துள்ளது.
Published on

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மின்சார வாகனங்களின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது.

சமீபகாலமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்சார வாகனங்கள் தீப்பிடித்து எரியும் சம்பவம் நடந்து வருகிறது. மின்சார ஸ்கூட்டர்கள் அடிக்கடி தீப்பிடித்து எரிவதால் வாடிக்கையாளர்கள் அச்சமடைந்துள்ளனர். இது போன்ற விபத்துக்கள் ஏற்பட என்ன காரணம் என்று கண்டறியக் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்தது.

மின்சார ஸ்கூட்டர்களை தயாரிக்கும் நிறுவனங்கள் தரக்கட்டுப்பாடுகளை உறுதி செய்து வேண்டும், இல்லாவிடின் பெருந்தொகை அபராதமாக விதிக்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி எச்சரித்திருந்தார்.

Ola E- Scooter
நெல்லை : பெண் எஸ்.ஐ-யை தாக்கி கைதான குற்றவாளி கழிவறையில் விழுந்து கை எலும்பு முறிவு
 E- Scooter
E- ScooterTwitter

இதையடுத்து ஒகினவா நிறுவனம் 3,000 மின்சார ஸ்கூட்டர்களையும், பியூர் ஈ.வி நிறுவனம் 2,000 மின்சார ஸ்கூட்டர்களையும் திரும்பப் பெறப்போவதாக அறிவித்தன.

கடந்த மாதம், ஓலா நிறுவனத்தின் எஸ் ஒன் புரோ மின்சார ஸ்கூட்டர் ஒன்று புனேவில் தீப்பிடித்து எரிந்து விபத்து ஏற்பட்டது.

இது குறித்து ஓலா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

புனேவில் கடந்த மார்ச் 26 ஆம் தேதி மின்சார ஸ்கூட்டர் தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதே பேட்சில் தயாரிக்கப்பட்ட 1,441 ஸ்கூட்டர்களையும் திரும்பப் பெற்று முழுப் பரிசோதனைக்கு உட்படுத்தப் போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Ola E- Scooter
ஆந்திரா : மின்சார ஸ்கூட்டர் பேட்டரி வெடித்து ஒருவர் பலி - 3 பேர் பலத்த காயம்
logo
Newssense
newssense.vikatan.com