நாம் வாழ்ந்த வீடு எப்போதும் நம் மனதிற்கு நெருக்கம்தான். வாழ்ந்த வீட்டை விட்டு செல்லும்போது மனமே உடைந்துபோகும். படையப்பா படத்தில் சிவாஜி, கடைசியாக தூணை கட்டிப்பிடித்துக்கொண்டு உயிரை விடும் தருணம் தான் நம் மனங்களிலும் ஓடும்.
இப்படியாக பிரிட்டன் நாட்டை சேர்ந்த நிக் விஸ்னியுஸ்கி என்பவர், தனது வீட்டை காலி செய்து வேறு இடத்திற்குச் செல்ல மறுக்கிறார். இவர், வடக்கு லனார்க்சையர், ஸ்டாநோப் பிலேஸ் என்ற இடத்தில் வசிக்கிறார். அந்த பகுதியிலுள்ள மொத்தம் 128 வீடுகளில், 127 வீட்டார்கள் வேறு இடத்திற்கு 2020 டிசம்பர் மாதத்துடன் இடம் பெயர்ந்து சென்றுவிட்டனர். இவர் மட்டும் இன்னும் அங்கேயே வசித்து வருகிறார்.
இந்த பகுதியிலுள்ள குடியிருப்புகளை தகர்க்கவுள்ளனர் என்று தெரிந்தும் நிக் அவ்விடத்தை விட்டு வெளியேறவில்லை. கவுன்சில் அதிகாரிகள் நிக்கிற்கு மாற்று வீடு வாங்க 35 ஆயிரம் பவுண்ட் அளித்தது மட்டுமல்லாமல், இரண்டு வருடங்கள் இலவசமாக வசிக்கவும் வசதிகள் செய்து தர தயாராக இருந்துள்ளனர். ஆனாலும் விடாக்கொண்டனாக, வீட்டை காலி செய்ய மறுக்கிறார் நிக்.
நிக் இந்த வீட்டை 2017ல் சொந்தமாக வாங்கியுள்ளார். இந்த வீடு அவரது மனதிற்கு மிகவும் நெருக்கமான ஒன்று. சுற்றி மற்ற வீடுகளில் குடியிருந்தவர்கள் வெளியேறிக்கொண்டிருந்த போதும் இவருக்கு மனம் மாறவில்லை. சமயங்களில் தனிமையை உணர்வதாகக் கூறும் நிக், அது நிரந்தமற்றது என்று பெரிதாக ஏற்றுக்கொள்வதில்லை என்று கூறுகிறார். அதனால் தான் என்ன நடந்தாலும் காலி செய்யப்போவதில்லை என்கிறார்.
பல நேரங்களில் வெளியாட்கள் யாராவது வந்து காலியாக இருக்கும் வீடுகளின் ஜன்னல்களை உடைப்பது போன்ற வன்முறைகளில் ஈடுபடுவார்கள் என்று தெரிவித்த நிக், தனக்கு இதுவரை எந்த ஆபத்தும் நடந்தது இல்லை என்றார்.
வீட்டை சுற்றி செடி கொடிகள், காடு போல் வளர்ந்திருப்பதாகவும் கவுன்சில் அதிகாரிகள் தன்னை அங்கிருந்து வெளியேற்றுவதற்காக இதை செய்கிறார்கள் என்றும் அவர் கூறினார்
என்ன முயற்சித்தாலும் தன் வீட்டை விட்டுக்கொடுப்பதாக இல்லை என்று திடமாக இருக்கிறார் நிக்!
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust