இனி சமுக வலைதளங்களின் மீது பெற்றோர்கள் புகார் கொடுக்கலாம் - எங்கு தெரியுமா?

18 வயதிற்குக் கீழே உள்ள குழந்தைகள் எந்த ஒரு சமூக ஊடக நிறுவனத்தினாலோ உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ பாதிக்கப்பட்டால் மற்றும் தாங்கள் விரும்பினாலும் அதிலிருந்து குழந்தைகளால் வெளிவர முடியாத நிலை ஏற்பட்டாலோ அதனை “சமூக வலைத்தள அடிமை நிலை” என்று வரையறுக்கிறது.
Social Media
Social MediaTwitter
Published on

இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டாக் போன்ற சமூக வலைத்தளங்கள் மீது பெற்றோர்கள் வழக்கு தொடர அனுமதிக்கும் சட்ட மசோதாவை கலிபோர்னியா அரசு நிறைவேற்றி இருக்கிறது. கடந்த திங்களன்று மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு மசோதாவின் கீழ், குழந்தைகளுக்குத் தீங்கு விளைவிக்கும் சமூக ஊடக நிறுவனங்கள், விதிமுறைகளை மீறினால் USD25,000 வரை அபராதம் செலுத்த வேண்டும்.

அந்த மசோதாவின் படி, 18 வயதிற்குக் கீழே உள்ள குழந்தைகள் எந்த ஒரு சமூக ஊடக நிறுவனத்தினாலோ உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ பாதிக்கப்பட்டால் மற்றும் தாங்கள் விரும்பினாலும் அதிலிருந்து குழந்தைகளால் வெளிவர முடியாத நிலை ஏற்பட்டாலோ அதனை “சமூக வலைத்தள அடிமை நிலை” என்று வரையறுக்கிறது.

Social Media
கூகுள் நிறுவனம் எப்படி பணம் ஈட்டுகிறது தெரியுமா? - இந்தக் கட்டுரையை படியுங்கள்!

இந்த மசோதா நிறைவேறினால், சமூக ஊடக நிறுவனங்கள் சட்ட ஆபத்தை எதிர்கொள்வதை விட, கலிபோர்னியாவில் குழந்தைகளுக்கான செயல்பாடுகளை பெரும்பாலும் நிறுத்திவிடும் என்று வணிக நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.

Social Media
Social MediaTwitter

கடந்த ஆண்டில் குறைந்தபட்சம் 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மொத்த வருவாயைப் பெற்ற சமூக ஊடக நிறுவனங்களுக்கு மட்டுமே இந்த முன்மொழிவு பொருந்தும். சந்தையில் ஆதிக்கம் செலுத்தக் கூடிய Facebook போன்ற சமூக ஊடக நிறுவனங்களைக் குறிவைத்து இந்த மசோதா கொண்டுவரப் பட்டிருக்கிறது.

Netflix மற்றும் Hulu போன்ற நிறுவனங்களுக்கும், இன்னும் பிற மெயில் சேவை தொடர்பான நிறுவனங்களுக்கும் இந்த சட்ட மசோதா பொருந்தாது.

Social Media
உக்ரைன் போர் : ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் தடை - இதுதான் ரஷ்யா எடுத்துள்ள புதிய நடவடிக்கை

இந்த மசோதா சட்டமானால், ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும். ஏப்ரல் 1 ஆம் தேதிக்குள் குழந்தைகளை அடிமையாக்கும் அம்சங்களை அகற்றும் நிறுவனங்கள் நடவடிக்கைகளை எதிர்கொள்வதிலிருந்து தப்பிக்கும்.

மேலும், குழந்தைகளுக்கு அடிமையாக்கக்கூடிய அம்சங்களைக் கண்டறிவதோடு, தொடர் கண்காணிப்பு மற்றும் தொடர் தணிக்கை ஆகியவற்றை வழக்கமாகக் கொள்ளும் நிறுவனங்களும் இதிலிருந்து விடுபடும்.

Social Media
Amala Shaji : பிரியங்கா மோகனை விட அதிக Followers; யார் இந்த 2K கிட்ஸ்லின் Reels க்ரஷ் ?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com