துருக்கி நிலநடுக்கத்தில் இருந்து மீட்கப்பட்ட பூனைகள் - சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ

இஸ்தான்புல் நகரில் வசிக்கும் 15 மில்லியன் மக்களிடையே சுமார் 125,000 பூனைகள் வாழ்கின்றன என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
Cats rescued from Turkey earthquake
Cats rescued from Turkey earthquake Twitter
Published on

பிப்ரவரி 6 ஆம் தேதி காலை துருக்கி மற்றும் சிரியா பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. இதில் துருக்கியின் 10 மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இதனால் துருக்கியில் 34,000 க்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கத்தின் மீட்பு பணிகள் முழுமையாக நிறைவடையும் முன்னரே துருக்கி மற்றும் சிரியாவில் மீண்டும் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது.இது நாட்டின் வரலாற்றில் மிக மோசமான பேரழிவாக கருதப்படுகிறது.

மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மனிதர்களை மட்டுமில்லாமல், பூனைகளையும் அதிகாரிகள் மீட்டு வருகின்றனர். இது தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோக்கள் பயங்கரமான நிலநடுக்கங்களால் இடிபாடுகளுக்கு அடியில் இருந்து பூனைகளை மீட்பதைக் காட்டுகிறது.

Cats rescued from Turkey earthquake
துருக்கி - சிரியா : கோவையில் நிலநடுக்கம் ஏற்படும் அச்சம் - அதிகாரிகள் கூறுவதென்ன?

2019 நியூயார்க் டைம்ஸ் அறிக்கையின்படி, இஸ்தான்புல் நகரில் வசிக்கும் 15 மில்லியன் மக்களிடையே சுமார் 125,000 பூனைகள் வாழ்கின்றன என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

Cats rescued from Turkey earthquake
பூனை வளர்ப்பவரா நீங்கள்? : பூனைகளுக்கு உணவளிப்பது பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 5 உண்மைகள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com