World Post Day: உலகின் வித்தியாசமான தபால் நிலையங்கள் - இந்தியாவில் என்ன இருக்கிறது?

தபால்களை அனுப்பி வைக்க தபால் அலுவலகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. உலகில் வித்தியாசமான தபால் அலுவலகங்கள் இருக்கின்றன. இதில் கவனிக்கப்படவேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த தபால் அலுவலகங்கள் இன்றளவும் செயலில் உள்ளன. மக்களுக்கு தனித்துவமான அனுபவங்களை வழங்குகின்றன
World Post Day: இந்தியாவில் இருக்கிறதா உலகின் இரண்டாவது உயரமான தபால் நிலையம்?
World Post Day: இந்தியாவில் இருக்கிறதா உலகின் இரண்டாவது உயரமான தபால் நிலையம்?canva

இன்று உலக அஞ்சல் தினம் கொண்டாடப்படுகிறது. செல்ஃபோன் போன்ற மின்னணு சாதனங்கள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு, மனிதர்களின் தகவல் தொடர்புக்கு உதவியாக இருந்தது தபால்கள் தான்.

போஸ்ட் கார்ட், டெலிகிராம், கடிதங்கள் என தொலைதூரத்தில் இருந்தவர்களுடன் நம்மை எப்போதும் இணைத்து வைத்திருந்தது இந்த அஞ்சல்கள்.

தபால்களை அனுப்பி வைக்க தபால் அலுவலகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. உலகில் வித்தியாசமான தபால் அலுவலகங்கள் உள்ளன

இதில் கவனிக்கப்படவேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த தபால் அலுவலகங்கள் இன்றளவும் செயலில் உள்ளன. மக்களுக்கு தனித்துவமான அனுபவங்களை வழங்குகின்றன

அவற்றை குறித்து இந்த பதிவில் காணலாம்

ஹிக்கிம் போஸ்ட் ஆபீஸ், இந்தியா

இமாச்சல பிரதேசத்தில் லாஹவுல் - ஸ்பிட்டி மாவட்டத்தில் அமைந்திருக்கிறது இந்த அலுவலகம். இது தான் உலகின் இரண்டாவது உயரமான தபால் நிலையம்.

இது கடல்மட்டத்தில் இருந்து 14,567 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது.

இந்த அலுவலகத்தின் வடிவமே தபால் பெட்டி போல தான் இருக்கிறது

ஜே.டபுள் யூ. வெஸ்ட்காட் II, அமெரிக்கா

இது ஒரு மிதக்கும் தபால் அலுவலகம். மெயில் போட் ஆஃப் தி கிரேட் லேக்ஸ் என்று அழைக்கப்படும் இது, டெட்ராயிட் நதியின் மேல் கடக்கும் கப்பல்களுக்கு தபால்களை வழங்குகிறது.

இது தான் உலகின் ஒரே மிதக்கும் அஞ்சல் அலுவலகம்

ஓச்சோபி தபால் நிலையம், அமெரிக்கா

இது தான் உலகின் மிகவும் சிறிய போஸ்ட் ஆஃபீஸ். இதன் அளவு வெறும் 61.3 சதுரடி தான். ஒரு சிறிய ஷெட்டுக்குள் அமைந்திருக்கும் இந்த அஞ்சல் அலுவலகம், அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் இருக்கிறது.

இந்த கட்டிடம் அருகில் உள்ள தக்காளி பண்ணையின் நீர்ப்பாசன குழாய்களுக்கான சேமிப்பு குடோனாக இருந்தது.1953 ஆம் ஆண்டில், காண்ட் கம்பெனி ஸ்டோரில் அமைந்துள்ள ஓச்சோபியின் முந்தைய தபால் நிலையம் தீயில் அழித்த பிறகு, இந்த கட்டடம் தபால் நிலையமாக மாற்றப்பட்டது.

World Post Day: இந்தியாவில் இருக்கிறதா உலகின் இரண்டாவது உயரமான தபால் நிலையம்?
16,000 அடியில் ATM, உயரமான மலைகள், முதல் நீதிபதி- பாகிஸ்தான் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்

சுவோமென்லினா தபால் அலுவலகம், ஃபின்லாந்து

இந்த போஸ்ட் ஆபீஸில் கடிகாரமே இல்லை. சூரியன் உதிக்கும் நேரத்தை வைத்து தான் இந்த அலுவலகம் தொடங்குகிறது, மறையும் நேரம் அலுவலம் மூடப்படுகிறது.

ஹெல் போஸ்ட் ஆபீஸ், நார்வே

நார்வேவில் உள்ள ஹெல் என்ற கிராமத்தை பற்றி முன்பே கூறியிருந்தோம். இந்த கிராமத்திலும் ஒரு தபால் அலுவலகம் இருக்கிறது. இந்த கிராமத்தின் பெயருக்காகவே இந்த தபால் நிலையம் பெயர்பெற்றதாக இருக்கிறது.

மக்கள் இதனை, Mail from Hell, அதாவது நரகத்தில் இருந்து வரும் தூது என்று சொல்கின்றனர்

World Post Day: இந்தியாவில் இருக்கிறதா உலகின் இரண்டாவது உயரமான தபால் நிலையம்?
உலகின் அதிகமாக விவாகரத்து பெறும் நாடுகள் - இந்தியாவின் இடம் என்ன?

சான்குஹார் தபால் நிலையம், ஸ்காட்லாந்து

இது தான் உலகின் பழமையான தபால் நிலையமாக கருதப்படுகிறது. 1712ஆம் ஆண்டில் இருந்து (300 ஆண்டுகளாக) செயல்பட்டு வரும் இந்த தபால் அலுவலகத்தில் இதுவரை 17 பேர் போஸ்ட் மாஸ்டர்களாக பணியாற்றியுள்ளனர்

நீருக்கடியில் தபால் நிலையம், வனாட்டு

தெற்கு பசிபிக் கடலில் அமைந்திருக்கிறது இந்த நீருக்கடியில் தபால் நிலையம். இங்கு வாட்டர் ப்ரூஃப் தபால்களை நாம் அனுப்பலாம்.

தண்ணீரில் இருந்து மூன்று மீட்டர்கள் கீழே அமைந்திருக்கும் இந்த தபால் அலுவலகம், மார்ச் 2003ல் தொடங்கப்பட்டது.

இந்த தபால் நிலையம் மூலமாக அஞ்சல்கள் அனுப்ப நினைக்கும் மக்கள், water proof கார்டுகளை வாங்கி, தண்ணீரில் நீந்திச் சென்று தங்கள் தபால்களை போஸ்ட் செய்கின்றனர்.

உள்ளூர் மற்றும் சர்வதேச தபால்கள் இந்த அலுவலகத்தில் ஏற்றுக்கொள்ளபடுகின்றன

World Post Day: இந்தியாவில் இருக்கிறதா உலகின் இரண்டாவது உயரமான தபால் நிலையம்?
தங்க ஏடிஎம் டு உலகின் உயரமான கட்டிடம்: துபாய் குறித்த 10 சுவாரஸ்ய தகவல்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com