சார்லஸ் ஹென்றி : 3000 தலைகளை வெட்டிய மரணதண்டனைக்காரர் - ஓர் உண்மையான ரத்த சரித்திரம்!

பிரஞ்சு புரட்சி காலத்தில் வாழ்ந்த இவர் தனது வாழ்நாளில் 3000த்துக்கும் மேற்பட்டவர்களின் உயிரை தொழில்நிமித்தம் பறித்துள்ளார். கில்லட்டினால் துண்டாகி விழுந்த தலைகளில் மன்னர் 16ம் லூயிஸினுடையதும் அடங்கும்.
சார்லஸ் ஹென்றி : 3000 தலைகளை வெட்டிய மரணதண்டனைக்காரர் - ஓர் உண்மையான ரத்த சரித்திரம்!
சார்லஸ் ஹென்றி : 3000 தலைகளை வெட்டிய மரணதண்டனைக்காரர் - ஓர் உண்மையான ரத்த சரித்திரம்!Twitter
Published on

"தி கிரேட் சான்சன்" ஏழு தலைமுறைகளாக பிரஞ்சு அரசு வழங்கும் மரண தண்டனைகளை நிறைவேற்றும் பதிவியில் இருந்த குடும்பத்தின் நான்காவது தலைமுறையைச் சேர்ந்தவர்.

கத்தியிலிருந்து கில்லட்டினால் மரணதண்டனை வழங்க முன்னேறியிருந்த காலகட்டம் 18ம் நூற்றாண்டு.

1739 பிப்ரவரி 15ம் தேதி பிறந்தார் சார்லெஸ் - ஹென்றி சான்சன். கில்லட்டின் மூலம் மரணதண்டனை வழங்கிய முதல் நபரோ அல்லது கடைசி நபரோ இல்லை. ஆனால் இவரை குறிப்பிட்டு இந்த கட்டுரையை எழுத பல காரணங்கள் இருக்கின்றன.

1778 டிசம்பர் 26ம் தேதி தனது தந்தைக்கு பிறகு அரசின் மரணதண்டனை நிறைவேற்றுபவராக பதவியேற்றார் சார்லஸ்.

இவர் தனது வாழ்க்கையில் 3000த்துக்கும் மேற்பட்டவர்களின் உயிரை தொழில்நிமித்தம் பறித்துள்ளார். கில்லட்டினால் துண்டாகி விழுந்த தலைகளில் மன்னர் 16ம் லூயிஸினுடையதும் அடங்கும்.

மன்னரையே கொன்று புதிய சாகாப்தத்தை தொடக்கி வைத்த இவருக்கு மரணதண்டனை வழங்குவது உண்மையில் மகிழ்ச்சியளிக்கவில்லை. அது சுய வெறுப்பையே ஏற்படுத்தியது.

குடும்பங்கள் சந்தித்த வேதனை

மரணதண்டனை வழங்குவது என்பது திருத்திக்கொள்ள முடியாத குற்றத்தை செய்வது. ஒரு உயிரை முற்றிலுமாக உலகை விட்டு அனுப்பிவிடுவது. இந்த தொழிலை தனது தந்தை மூலமே கற்றுக்கொண்டார் சார்லஸ்.

மரணதண்டனை வழங்கும் குடும்பங்கள் சமூகத்திலிருந்து முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்தனர். இந்த குடும்பங்களை Les Bourreaux என அழைத்தனர்.

அவர்களின் பிள்ளைகளை பள்ளிகள் சேர்த்துக்கொள்ளவில்லை.

நகருக்கு வெளியில் ஒதுக்கப்பட்டே அவர்கள் வாழ்ந்தனர்.

அவர்களுக்காக வழங்கப்படும் ரொட்டிகள் மற்றவற்றிடம் இருந்து பிரித்து வைக்கப்பட்டிருந்தது.

மரணதண்டனை வழங்கும் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மற்ற குடும்பங்களை சேர்ந்தவர்களை திருமணம் செய்துகொள்ள சர்ச் அனுமதிக்கவில்லை.

1981ம் ஆண்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மரணதண்டனை வழங்குவது தடை செய்யப்பட்டது. அதுவரை இந்த குடும்பங்கள் பிரஞ்சு சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்களாகவே இருந்தனர்.

"பேரரசர்கள், அரசர்கள், சர்வாதிகாரிகள் எல்லாம் நிம்மதியாக உறங்கும் போது ஒரு சாதாரண மரணதண்டனை விதிப்பவனால் முடியாதா?" - சார்லஸ் ஹென்றி

கில்லட்டின் போன்ற சாதனத்தை பயன்படுத்தி அரசு கூறும் யாவரையும் கொன்று குவிப்பது ஒரு வீடியோ கேம் விளையாட்டைப் போல எளிதானதல்ல. தினசரி இரத்தம் தெறிப்பதையும் உடல்கள் துடிப்பதையும் பார்க்க வேண்டும்.

ஆரம்பத்தில் இந்த வேலைக்கு ஆட்கள் கிடைப்பது மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது. கொலை தொழில் எப்போதும் விரக்தியை மட்டுமே அழிப்பதாக இருந்தது.

இதனால் கைதிகள் மரணதண்டனையை நிறைவேற்றும் வேலையில் ஈடுபடுத்தப்பட்டனர். ஏதாவது ஒரு கைதி நிறைவேற்ற மறுத்தால் அடுத்ததாக வெட்டப்படுவது அவரது தலையாக தான் இருக்கும்.

சார்லஸ் ஹென்றி : 3000 தலைகளை வெட்டிய மரணதண்டனைக்காரர் - ஓர் உண்மையான ரத்த சரித்திரம்!
தேச துரோகி முத்திரை, மரண தண்டனை: சூழ்ச்சியால் கொல்லபட்ட விஞ்ஞானியை ரஷ்யா கொண்டாடுவது ஏன்?

முதல் கில்லட்டின் மரணம்

சார்லஸ் ஹென்றி வரலாற்றில் இன்றும் நினைவுகூறப்பட்டாலும் அவர் மீது திணிக்கப்பட்டிருந்த பணியை அவர் ஏன் அவ்வளவு வெறுத்தார் என்பதை மேற்கண்ட விஷயங்கள் மூலம் அறிந்திருப்பீர்கள்.

1792 ஏப்ரல் 25ம் தேதி அவரது காலத்தில் தான் முதன்முறையாக கில்லட்டின் அறிமுகப்படுத்தப்பட்டது.

பாரிஸில் உள்ள டி க்ரீவ் என்னும் இடத்தில் மக்களின் ஆராவாரத்துடன் முதல் கில்லட்டின் மரண தண்டனை வழங்கப்பட்டது. சார்லஸ் ஹென்றி, நிக்கோலஸ் ஜாக்குஸ் பெல்லிடைர் என்பவரின் தலையை கொய்தார்.

திருடர்கள், தீங்கிழைப்பவர்கள் மட்டுமின்றி பிரஞ்சு புரட்சியில் ஈடுபட்ட போராளிகளையும் சார்லஸ் கில்லட்டின் மூலம் வெட்டி எறிந்தார்.

மன்னரின் தலை துண்டிக்கப்பட்டது

ராபர்ட் ஃப்ராங்கோசிஸ் டாமியன் என்பவர் மன்னர் லூயிஸை கொலை செய்ய முயன்ற போது பிடிபட்டார். அப்போது சிறிய காயத்துடன் தப்பிய மன்னர் அவருக்கு மரணதண்டனை விதித்தார்.

தொடர்ந்து சார்லஸ் ராபர்ட் டாமியனுக்கு மரண தண்டனை வழங்கினார். காலம் கடந்து மன்னருக்கும் மரணதாண்டனை வழங்கும் தருணம் வந்தது.

1793 ஜனவரி 21ம் தேதி பிரஞ்சு புரட்சியின் விளைவாக உருவான சீர்திருத்தங்களை ஏற்றுக்கொண்டு தன் பதவியை கைவிட தயாராக இல்லாததால் மன்னர் 16ம் லூயிஸ் சார்லஸ்ஸால் கில்லட்டின் மூலம் கொல்லப்பட்டார்.

ராணி மேரி ஆன்டோனெட் உயிர் கில்லட்டின் வழியாக பறிக்கப்பட்டபோது கூட்டத்தில் ஒருத்தராக நின்று வேடிக்கை பார்த்தார் சார்லஸ். அந்த கொலையை அரங்கேற்றியது அவரது மகன் ஹென்றி.

சார்லஸ் ஹென்றி : 3000 தலைகளை வெட்டிய மரணதண்டனைக்காரர் - ஓர் உண்மையான ரத்த சரித்திரம்!
வியட்நாம் போர் வரலாறு - "அமெரிக்காவின் பயங்கரவாதம்" | பகுதி - 1

பிரஞ்சு புரட்சியும் கில்லெட்டின் உருவாக்கமும்

கில்லட்டினுக்கு முன்னர் வாள் மற்றும் கோடாரியைப் பயன்படுத்தி மரண தண்டனை வழங்கினர்.

சார்லஸ் பிரஞ்சு புரட்சி காலத்தில் பணியாற்றியதால் 3000 பேரை அவரது பணிக்காலத்தில் கொலை செய்துள்ளார்.

ஒரே நாளில் பலரை கொலை செய்ய வேண்டியது இருந்ததால் வாள், கோடாரியை விட உறுதியான மற்றும் பயங்கரமான ஆயுதங்கள் தேவைப்பட்டன.

இதனால் அன்டோனி லூயிஸ் என்பவர் வடிவமைத்த கில்லட்டினைக் கோரினார் சார்லஸ்.

மற்ற ஆயுதங்கள் எளிதில் மழுங்கிவிடும். கில்லட்டினோ மிகவும் உறுதியானதாக இருந்தது.

வைக்கோல், செம்மறி ஆடு மற்றும் மனித உடல்கள் என படிப்படியாக சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு இறுதியாக கில்லட்டின் அறிமுகப்படுத்தப்பட்டது.

அதன் தோற்றமும் செயல்பாடும் மக்களை அச்சுறுத்தியது. சார்லஸும் அச்சுறுத்தலின் ஒரு பகுதியாக இருந்தார்.

பிரஞ்சு புரட்சி
பிரஞ்சு புரட்சி

நெப்போலியனுடன் ஒரு சந்திப்பு

சார்லஸ் ஹென்றி பேரரசர் நெப்போலியன் போனபர்ட்டை சந்திக்கும் நிகழ்வு மிகவும் பிரபலமாக பேசப்பட்டது.

அந்த சந்திப்பில் பேரரசர், "இத்தனை உயிர்களை கொன்று விட்டு உங்களால் எப்படி உறங்க முடிகிறது?" எனக் கேட்டுள்ளார்.

அதற்கு சார்லஸ் "பேரரசர்கள், அரசர்கள், சர்வாதிகாரிகள் எல்லாம் நன்றாக உறங்கும் போது ஒரு சாதாரண மரணதண்டனை விதிப்பவனால் முடியாதா?" என பதிலாளித்தாராம்.

சார்லஸ் ஹென்றி : 3000 தலைகளை வெட்டிய மரணதண்டனைக்காரர் - ஓர் உண்மையான ரத்த சரித்திரம்!
Doomsday: வருடம் ஒருமுறை மட்டுமே நகரும் கடிகாரம் - உலக அழிவுக்கும் இதற்கும் என்ன தொடர்பு?

1975ம் ஆண்டு வரை மரணதண்டனை வழங்கிய சார்லஸ் பணியை அவரது மகனிடம் அளித்த பின்னர் ஓய்வு பெற்றார்.

வரலாற்றில் அதிக கில்லட்டின் கொலைகள் நிறைவேற்றியவராக திகழ்கிறார் சார்லஸ்

உடல்நலமும் மனநலமும் குன்றிப்போய் 1806ம் ஆண்டு மரணித்தார். அவரைத் தொடர்ந்து இரண்டு தலைமுறையாக அவரது குடும்பம் அந்த பணியை செய்தது.

இறப்புக்கு பின்னான வாழ்வு ஒருவேளை இருந்தால், தான் கொலை செய்த 3000 ஆத்மாக்கள் முன் தலைகுனிந்து நிற்பார் சார்லஸ்!

சார்லஸ் ஹென்றி : 3000 தலைகளை வெட்டிய மரணதண்டனைக்காரர் - ஓர் உண்மையான ரத்த சரித்திரம்!
'உலகின் தனிமையான வீடு' இதுதான்! - ஏன் கட்டப்பட்டது? பின்னணியில் உள்ள உண்மை என்ன தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com