அதிபரை சுற்றி சைக்கிள் ஓட்டிய சூப்பர் மேன், வேடிக்கை பார்த்த பாதுகாவலர்கள் - வைரல் வீடியோ

முக்கிய தலைவர்கள் பேசுகையில், அரங்கத்தில் ஒழுக்கமும், மரியாதையும் எதிர்பார்க்கப்படும். நாட்டின் அதிபரே உரையாற்றுகிறார் என்றால், அனைத்திலும் கவனம் சற்று அதிகமாகவே இருக்கும்
அதிபர் கேப்ரியல் போரிக்
அதிபர் கேப்ரியல் போரிக்டிவிட்டர்
Published on

சிலி நாட்டு அதிபர் மேடையில் பேசிக்கொண்டிருக்கையில், சிறுவன் சூப்பர் மேன் வேடமணிந்து அவரை சுற்றி சைக்கிள் ஓட்டிய வீடியோ ஒன்று இணையத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.

குழந்தைகளுக்கு எப்போதும் எதை பற்றிய கவலையும் இருக்காது. இதனால் அவர்களின் சில செயல்கள் மிக முக்கியமான நேரங்களில் கூட நம்மை சிரிக்கவைத்து விடும்.

இங்கும் ஒரு சிறுவனின் செயல் அப்படி தான் இருக்கிறது. சிலி நாட்டின் அதிபர் கேப்ரியல் போரிக். இவர் உரையாற்றிக் கொண்டிருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் கவனம் ஈர்த்தது.

அவர் பேசிக்கொண்டிருக்கும் மேடையில் ஒரு சிறுவன் சூப்பர்மேன் வேடமணிந்துகொண்டு சைக்கிளில் வருகிறான். அதிபரின் பின்புறமாக வந்து, பேசிக்கொண்டிருப்பவரை சிறிது நேரம் பார்க்கிறான். பார்த்துவிட்டு மீண்டும் தன் சைக்கிளை எடுத்துக்கொண்டு வட்டமிட துவங்குகிறான்.

ஆனால், இதை பற்றி அதிபர் சற்றும் கவலைகொள்ளாமல் உரையாற்றி வந்தார். அதிபரின் பாதுகாவலர்கள், மேடையிலிருந்த மற்ற அதிகாரிகள் யாரும் அச்சிறுவனை தடுக்கவில்லை.

முக்கிய தலைவர்கள் பேசுகையில், அரங்கத்தில் ஒழுக்கமும், மரியாதையும் எதிர்பார்க்கப்படும். நாட்டின் அதிபரே உரையாற்றுகிறார் என்றால், அனைத்திலும் கவனம் சற்று அதிகமாகவே இருக்கும். ஆனால், இந்த வீடியோவில் சிறுவனின் செயல் அனைவரது மனத்தையும் கவர்ந்து, நகைக்க செய்திருக்கிறது.

அதிபர் கேப்ரியல் போரிக்
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி : போருக்கு மத்தியில் போட்டோ ஷூட் - வலுக்கும் எதிர்ப்பு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com