Vogue - வோக் என்பது அமெரிக்காவிலிருந்து வெளிவரும் மாதாந்திர ஃபேஷன் மற்றும் லைஃப்ஸ்டைல் பத்திரிகையாகும். இப்பத்திரிகை 1892ஆம் ஆண்டில் ஒரு வாரப் பத்திரிகையாகத் துவங்கியது. பல ஆண்டுகளுக்குப் பிறகு மாத இதழாக மாறியது.
இந்த இதழின் அட்டைப் படத்தில் ஏராளமான நடிகர்கள், இசைக் கலைஞர்கள், மாடல்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பிற முக்கிய பிரபலங்கள் இடம் பெற்றுள்ளனர். தற்போது இந்த இதழ் 26 சர்வதேச பதிப்புகளைக் கொண்டிருக்கிறது.
தற்போது இந்தப் பத்திரிகை ஒரு சர்ச்சையில் சிக்கியது. உண்மையில் சர்ச்சையில் சிக்கியது உக்ரைன் அதிபர் செலன்ஸ்கிதான். உக்ரைனில் பிப்ரவரி 24 முதல் ரஷ்யா கொடூரமாகத் தாக்கி வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான உக்ரைன் மக்கள், இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். போர் துவங்கியதிலிருந்து உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி மேற்கத்திய நாடுகளின் பாராளுமன்றங்களில் உரையாற்றி ஆதரவு கேட்டு வருகிறார்.
சரி இப்படி உலக மக்களிடம் ஆதரவு கேட்டவர் தனது மனைவியோடு வோக் பத்திரிகையில் எதற்கு ஒரு போஸ் கொடுத்து அட்டைப் படத்தில் இடம் பெறவேண்டும்? இதற்காக அவரை டிவிட்டரில் ட்ரோல் செய்து மக்கள் கோபத்துடன் கலாய்த்துத் தள்ளிவிட்டனர்.
உக்ரைனின் முதல் பெண்மணியும் அதிபர் வோலோடிமிர் செலன்ஸ்கியும் சமீபத்தில் வோக் உடன் போட்டோ ஷூட்டிற்கு போஸ் கொடுத்தது சமூக ஊடக தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போரில் சிக்கித் தவிக்கும் அந்நாட்டு அதிபர் ஃபேஷன் பத்திரிக்கையில் வந்திருப்பதால் நெட்டிசன்கள் கொதிப்படைந்துள்ளனர்.
இதனால் அதிபர் மற்றும் மனைவி ஒலேனா ஜெலென்ஸ்காவை ட்ரோல் செய்து மக்கள் டிவிட்டரைப் பரபரப்பாக்கினர்.
ஒரு டிவிட்டர்வாசி எழுதுகையில், "ஒவ்வொரு நாளும் பெருமளவிலான உக்ரேனிய வீரர்கள் இறக்கின்றனர், அதிபர் செலன்ஸ்கியோ வோக்கில் வேறு ஒரு ஷூட்டிங்கை நடத்துகிறார்” என்று எழுதினார்.
மற்றொருவர், "நாங்கள் ஏன் உக்ரைனுக்கு 54 பில்லியன் டாலர்களை அனுப்பினோம்? அதை வைத்து செலன்ஸ்கியும் அவரது மனைவியும் வோக்கிற்கு போஸ் கொடுக்கவா பணம் அனுப்பினோம்? நீங்கள் போருக்கு மத்தியில் இருக்கிறீர்கள், புகைப்படம் எடுப்பதற்கு உங்களுக்கு நேரம் எப்படி கிடைத்தது?",என்று கோபமாக எழுதியிருக்கிறார்.
பேபி பிரான் என்பவர், "அமெரிக்கா உக்ரைனுக்கு பில்லியன் கணக்கான டாலர்களை அனுப்புகிறது. ஆனால் உக்ரைன் நாட்டின் அதிபரோ வோக் புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கிறார். எல்லாம் வேடிக்கையாக இருக்கிறதா?” என்று கொதித்திருக்கிறார்.
இந்த மக்கள் (அதிபரும் மனைவியும்) நாங்கள் எல்லாம் வேஸ்ட், குடிகாரர்கள் என்று நினைக்கிறார்களா? என்று லாரன் போபர்ட் என்பவர் எழுதியிருக்கிறார்.
மற்றொருவர் உக்ரைன் மக்களின் வரிப்பணம் வோக் ஃபோட்டோ ஷூட் நடத்தவா பயன்பட்டிருக்கிறது என்று எழுதியிருக்கிறார்.
செலன்ஸ்கி உக்ரைனில் "தனது உயிருக்குப் போராடுகிறார்" ஆனால் ஹாலிவுட் பிரபலங்கள் மற்றும் ஊழல் அரசியல்வாதிகளைச் சந்திக்க அவருக்கு நேரம் உள்ளது. வோல் பத்திரிகையில் சுற்றுச்சூழல் குறித்து பிரச்சாரம் செய்கிறேன் என்ற பெயரில் ஃபோஸ் கொடுக்கிறார். இவர் ஃபோட்டோவுக்கு ஃபோஸ் கொடுக்கும் போது உக்ரைனில் போர் நிற்குமா? எல்லாம் மோசடியாக இருக்கிறது?” என்று ஒருவர் கேட்கிறார்.
போருக்கு முன்னாடி அதிபர் செலன்ஸ்கியின் செல்வாக்கு உக்ரைன் நாட்டு மக்களிடம் வெகுவாக சரிந்திருந்தது. ஆனால் போரின் போது அவரது செயல்பாடுகள் உக்ரைன் நாட்டு மக்களிடம் மட்டுமல்ல, ரஷ்யாவை எதிர்க்கின்ற அனைத்து நாட்டு மக்களிடமும் பெரும் பாராட்டைப் பெற்றிருந்தன. அதைக் கெடுக்கும் விதமாக அதிபர் செலன்ஸ்கி தற்போது வோக் பத்திரிகைக்கு போஸ் கொடுத்து நடந்து கொண்டிருக்கிறார்.
ரோம் பற்றி எரிகையில் நீரோ மன்னன் பிடில் வாசித்தான் என்று சொல்வார்கள். அது போல அதிபர் செலன்ஸ்கியும் நடந்து கொண்டார் என்று சொன்னால் அது மிகையில்லை.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust