சீனா : 2400 ஆண்டுகள் பழமையான 'Flush Toilet' கண்டுபிடிப்பு!

சீன தொல்லியல் துறையின் ஆராய்ச்சியாளர் லியு ருய், "இதைக் கண்டறியும் போது எல்லோருமே அதிச்சியடைந்தோம். பின்னர் வெடித்துச் சிரிக்கத் தொடங்கினோம்" என கூறியுள்ளார்.
சீனா : 2400 ஆண்டுகள் பழமையான 'Flush Toilet' கண்டுபிடிப்பு!
சீனா : 2400 ஆண்டுகள் பழமையான 'Flush Toilet' கண்டுபிடிப்பு!Twitter
Published on

சீனாவைச் சேர்ந்த தொல்லியல் நிபுணர்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முந்தைய ஃப்ளஷ் டாய்லெட்டை கண்டுபிடித்துள்ளனர்.

இது தான் உலகிலேயே மிகப் பழமையான ப்ளஷ் டாய்லெட்டாக இருக்கக் கூடும் என்றும் கணித்துள்ளனர்.

சீனாவின் ஷான்ஸி மாகாணத்தில் உள்ள யூயாங் நகரத்தில் தொல்லியல் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

இது கி.மு 4ம் நூற்றாண்டில் சீனாவை ஆண்ட குன் வம்சத்தினரால் அல்லது ஹன் ராஜ வம்சத்தின் முதல் தலைமுறையினரால் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனக் கருதுகின்றனர்.

சீனாவில் நடந்த அகழ்வாராய்ச்சிகளில் முதன்முதலாக கண்டறியப்பட்ட ப்ளஷ் டாய்லெட் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சீன தொல்லியல் துறையின் ஆராய்ச்சியாளர் லியு ருய், "இதைக் கண்டறியும் போது எல்லோருமே அதிச்சியடைந்தோம். பின்னர் வெடித்துச் சிரிக்கத் தொடங்கினோம்" என கூறியுள்ளார்.

சீனா : 2400 ஆண்டுகள் பழமையான 'Flush Toilet' கண்டுபிடிப்பு!
வயாகரா, சிப்ஸ் : விபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த 15 கண்டுபிடிப்புகள் குறித்து தெரியுமா?

மேலும் அவர், "புதிய கண்டுபிடிப்புகள் சீனாவின் பண்டைய மக்கள் சுகாதாரத்தில் எவ்வளவு கவனமாக இருந்துள்ளனர் என்பதை புதிய கண்டுபிடிப்புகள் கூறுகின்றன" என்றும் கூறியுள்ளார்.

மேலும் இது அரசர்கள் மற்றும் அரச குடும்பத்தினரால் மட்டுமே உபயோகப்படுத்தப்பட்டிருக்கும் என்றும் அவர் கணித்துள்ளார்.

இந்த கண்டுபிடிப்புக்கு முன்னர் 16ம் நூற்றாண்டில் ஆங்கிலேய அரச குடும்த்தினரான ஜான் ஹாரிங்டனின் ராணி எலிசபெத்க்காக கண்டுபிடிக்கப்பட்டதாக நம்பப்பட்டது.

ஆனால் இப்போது சீனாவில் மிகப் பழமையான டாய்லெட் கிடைத்திருப்பதால் இதனை "மேற்கத்திய கழிவறை" (Western Toilet) என அழைக்க வேண்டியதில்லை தானே...

சீனா : 2400 ஆண்டுகள் பழமையான 'Flush Toilet' கண்டுபிடிப்பு!
இதுவல்லவா காதல்! ஹாரி முதல் எட்வர்ட் வரை- காதலுக்காக பட்டத்தை துறந்த அரச குடும்பத்தினர்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com