இதுவல்லவா காதல்! ஹாரி முதல் எட்வர்ட் வரை- காதலுக்காக பட்டத்தை துறந்த அரச குடும்பத்தினர்

தேவசேனாவுக்காக பாகுபலி அரியணையையும் மணி முடியையும் துறப்பைப் பார்த்து மெய் சிலிர்த்திருப்போம். ஆனால் அதையெல்லாம் விட நிஜத்திலேயே பல தியாகங்களைச் செய்திருக்கிறனர் இந்த அரச குடும்பத்தினர். காதலுக்காகப் பட்டங்களையும் பதவியையும் அந்தஸ்தையும் பொருளையும் தியாகம் செய்த அரச குடும்பத்தினர் இவர்கள் தான்!
ப்ரின்ஸ் ஹாரி
ப்ரின்ஸ் ஹாரிTwitter

காதலித்த அனைவருமே அதற்காக ஏதோவொரு தியாகத்தைச் செய்கின்றனர். உண்மையில் வாழ்க்கையின் பெரும்பாலானவற்றை இழந்து மீதி வாழ்க்கைக்குக் காதல் மட்டும் போதும் என்ற முடிவுக்கு மனிதர்கள் வந்து விடுகின்றனர்.

சாதாரண குடும்பங்களிலேயே காதல் பல கலவரங்களை உருவாக்கிவிடும். எனில், அரசு குடும்பங்களைப் பற்றிச் சொல்லவா வேண்டும்?

அமெரிக்கா என்றாலும் ஆண்டிபட்டி என்றாலும் காதல் பண்ணா குத்தம் சொல்ல ஊரே வருதுடா... என விவேகா எழுதியது எத்தனை உண்மை! பல எதிர்ப்புகளைக் கடந்து காதலுக்காக அரச பட்டத்தையே துறந்த அரச வம்சத்தினர் குறித்து இந்தக் கட்டுரையில் காண்போம்.

இளவரசர் ஹாரி

இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்க்லே
இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்க்லேTwitter

பிரிட்டிஷ் அரச குடும்பத்தைச் சேர்ந்த சார்லஸின் மகன் இளவரசர் ஹாரி மேகன் என்ற பெண்ணைத் திருமணம் செய்வதற்காக அரச பட்டத்தைத் துறந்தார்.

சக்செஸின் டியூக் மற்றும் டச்சஸ் என அறியப்படும் இவர்கள் திருமணத்துக்குப் பல தடைகள் ஏற்பட்டன. அமெரிக்காவில் வாழ்க்கையைத் தொடங்கியதால் HRH எனப்படும் அரசப்பட்டத்தைத் துறந்தார் இளவரசர் ஹாரி.

இப்போது இவர்களுக்கு லிலிபெட் என்ற பெண் குழந்தை உள்ளது.

ப்ரின்ஸ் பிலிப்

ராணி எலிசபெத் - ப்ரின்ஸ் பிலிப்
ராணி எலிசபெத் - ப்ரின்ஸ் பிலிப்Twitter

கிரேக்கம் மற்றும் டென்மார்க் என இரண்டு அரச குடும்பங்களின் இளவரசராகப் பிறந்த பிலிப் தனது காதலைப் பற்றிக்கொண்டமையால் கடைசி வரை மன்னராகவே இல்லை.

இங்கிலாந்து ராணியைத் திருமணம் செய்வதற்காகத் தனது கிரேக்க மற்றும் டென்மார்க் அரச பட்டங்களைத் துறந்தார் பிலிப். இங்கிலாந்து அரச விதிகளின் படி அரச குடும்பத்து ஆண் ஒரு பெண்ணைத் திருமணம் செய்தால் அந்த பெண் ராணி என அழைக்கப்படுவார். ஆனால் அரச குடும்பம் அல்லாத ஒருவர் அரச குடும்பத்து பெண்ணை திருமணம் செய்துகொண்டால் அவருக்கு அரச பட்டம் வழங்கப்படமாட்டாது. இதனை ஏற்றுக்கொண்டு ராணி எலிசபெத்தைக் கரம் பிடித்தார் பிலிப்.

பின்னாட்களில் தனது அதிகாரத்தின் மூலம் பிலிப்புக்கு டியூக் ஆஃப் எட்டின் பெர்க் என்ற பட்டத்தை பெற்றுக்கொடுத்தார் எலிசபெத்.

இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவராக இருந்தும் கடைசி வரை இளவரசர் என்றே அழைக்கப்பட்டார் பிலிப்.

ப்ரின்ஸ் ஹாரி
செளதி அரசர் முதல் இங்கிலாந்து ராணி வரை: உலக அரச குடும்பங்களின் சொத்துமதிப்பு இவ்வளவா?

மன்னர் எட்டாம் எட்வர்ட்

மன்னர் எட்டாம் எட்வர்ட் - வாலிஸ்
மன்னர் எட்டாம் எட்வர்ட் - வாலிஸ்Twitter

இங்கிலாந்தின் புகழ்பெற்ற ராணி விக்டோரியாவின் கொள்ளுப் பேரன் தான் மன்னர் எட்வர்ட். இவர் மன்னராக முடி சூட்டப்பட்ட கொஞ்ச நாட்களிலேயே தான் காதலித்த பெண்ணுக்காக அரியணையைத் துறந்தார்.

எட்வர்ட் இளவரசராக இருந்த போது தான் தன் காதலியான வாலிஸை சந்தித்தார். ஸ்பென்சர் என்பவரை மணந்து விவாகரத்து செய்தவர் வாலிஸ். பின்னர் சிம்சன் என்ற செல்வந்தரை மணந்துகொண்டார். சிம்சனின் குடும்பம் பெரிய கப்பல் கம்பெனி நடத்தி வந்தனர். அந்த நிறுவனத்தின் லண்டன் கிளையை சிம்சன் நிர்வகித்து வந்தார்.

வாலிஸ் சிம்சனின் மனைவியாக இருந்த போதும் எட்வர்ட் அவரை காதலித்தார். வாலிஸும் எட்வர்டின் காதலை புரிந்துகொண்டு அவரைத் திருமணம் செய்ய சம்மதித்து சிம்சனை விவாகரத்து செய்தார்.

பல தடைகளை மீறி இவர்களது திருமணம் நடந்தது. வாலிஸ் ஏற்கெனவே திருமணம் ஆனவர் என்பதனால் எட்வர்ட் தனது அரச பட்டத்தைத் துறக்க நேரிட்டது.

ஜப்பான் இளவரசி மாகோ

 இளவரசி மாகோ - கீ கோமுரோ
இளவரசி மாகோ - கீ கோமுரோTwitter

ஜப்பானின் 125-வது பேரரசர் அகிஹிட்டோவின் பேத்தியான மகோ, 2012-ம் ஆண்டு தான் கல்லூரியில் படித்த போது தன்னுடன் படித்த கீ கோமுரோ என்னும் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த நண்பருடன் நட்பாகப் பழக ஆரம்பிக்க, பின்னர் இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்துள்ளது. 2017-ம் ஆண்டு இருவரும் தங்களது திருமண அறிவிப்பை வெளியிட்டனர்.

ஜப்பான் அரசு வழக்கப்படி, இளவரசி சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த நபரைத் திருமணம் செய்து கொண்டால் அவர் தனது அரச பட்டத்தைத் துறக்க வேண்டும்.

காதலனை கைப்பற்றுவதற்காக தனது அரச பட்டத்தைத் துறந்ததுடன், அரசு நிதியுதவியும் வேண்டாம் எனத் தெரிவித்தார் இளவரசி.

கடந்த அக்டோபர் மாதம் மாகோ மற்றும் கீ கோமுரோ திருமணம் நடைபெற்றது.

ப்ரின்ஸ் ஹாரி
ஜெய்ப்பூர் மகாராஜா முதல் தாய்லாந்து இளவரசி வரை : உலக அளவில் வசீகரமான 11 அரச குடும்பத்தினர்

ஜப்பான் இளவரசி சயாகோ

சயாகோ - யோஷிகி குரோடா
சயாகோ - யோஷிகி குரோடா Twitter

இளவரசி மாகோவுக்கு முன்னோடியாக இருந்தது அவரது அத்தை சயாகோ, இவர் மன்னர் அகிஹிட்டோவின் ஒரே மகள். எனினும் யோஷிகி குரோடா என்ற சாதாரண மனிதரைக் காதலித்து அவருக்காக அரச குடும்பத்தை விட்டு வெளியேறினார்.

இவர்களது திருமணம் கடந்த 2005ம் ஆண்டு நடந்தது.

இளவரசர் ஃப்ரிசோ

இளவரசர் ஃப்ரிசோ -  மேபிள் விஸ்ஸே ஸ்மித்
இளவரசர் ஃப்ரிசோ - மேபிள் விஸ்ஸே ஸ்மித் Twitter

டச் இளவரசர் தனது முடியை துறந்ததற்கு வித்தியாசமான பின்னணி இருந்தது. மேபிள் விஸ்ஸே ஸ்மித் என்ற பெண்ணைக் காதலித்து வந்தார் ஃப்ரிசோ. தொழில்முனைவோரான ஸ்மித்தின் குடும்பம் போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு வைத்திருந்ததற்காக இந்த திருமணத்தை அரச குடும்பம் எதிர்த்தது,

தனது பதவியை இழக்க நேரிடும் என்று அறிந்திருந்தும் ஃப்ரிசோ, 2004ம் ஆண்டு மேபிள் விஸ்ஸே ஸ்மித்தை திருமணம் செய்துக்கொண்டார்.

திருமணத்துக்கு பிறகும் அரச குடும்ப உறுப்பினராகவே இருந்தார் ஃப்ரிசோ. எனினும் அரண்மனையில் அவருக்கு இடம் கொடுக்கப்படவில்லை.

கடந்த 2013ம் ஆண்டு பனிச்சரிவில் சிக்கி எதிர்பாராத விதமாக மரணித்தார் ஃப்ரிசோ.

ப்ரின்ஸ் ஹாரி
எலிசபெத் ராணியை பின்னுக்குத் தள்ளிய இந்திய பெண்மணி: யார் இந்த அக்சதா மூர்த்தி?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com