சீனா: பெண்கள் உள்ளாடை விளம்பரங்களில் மாடலாக நடிக்கும் ஆண்கள் - என்ன காரணம்?

பெண்கள் அணியும் உள்ளாடைகளை சந்தைப்படுத்த லைவ்ஸ்ட்ரீம் விளம்பரங்களுக்கு பெண்களுக்கு பதிலாக ஆண் மாடல்களை களமிறக்கியுள்ளன. இந்த வீடியோ சீனாவின் டிக் டாக் தளமான டொயின்-ல் படுவைரலாகி வருகிறது
சீனா: பெண்கள் உள்ளாடை விளம்பரங்களில் மாடலாக நடிக்கும் ஆண்கள் - என்ன காரணம்?
சீனா: பெண்கள் உள்ளாடை விளம்பரங்களில் மாடலாக நடிக்கும் ஆண்கள் - என்ன காரணம்?ட்விட்டர்

பெண்கள் அணியும் உள்ளாடை விளம்பரங்களில் நடிக்க சீனா பெண்களுக்கு தடைவிதித்துள்ள நிலையில், விளம்பரங்களில் ஆண்கள் நடித்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்துள்ளன.

சீனாவில் ஆபாசமான விஷயங்களை ஆன்லைனில் பரப்புவதற்கு எதிரான சட்டத்தின் படி, ஆன்லைன் உள்ளாடை விளம்பரங்களில் பெண்கள் மாடலிங் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக நியூயார்க் போஸ்ட்டின் அறிக்கை தெரிவிக்கிறது. இந்த கட்டுப்பாட்டை கையாளவே, சீன லைவ்ஸ்ட்ரீம் ஃபேஷன் நிறுவனங்கள் புதிய யுக்தி ஒன்றினை பின்பற்றுகின்றனர்

பெண்கள் அணியும் உள்ளாடைகளை சந்தைப்படுத்த லைவ்ஸ்ட்ரீம் விளம்பரங்களுக்கு பெண்களுக்கு பதிலாக ஆண் மாடல்களை களமிறக்கியுள்ளன. இந்த வீடியோ சீனாவின் டிக் டாக் தளமான டொயின்-ல் படுவைரலாகி வருகிறது

"The light and luxurious boudoir of the wife and adults," என்கிற தலைப்பில் இந்த வீடியோக்கள் வெளியாகியுள்ளன. இந்த விளம்பரங்களின் இயக்குநர்கள் பெரும்பாலும் பெண்களாகவே இருக்கின்றனர்.

வீடியோ வெளியானதிலிருந்து 2000த்துக்கும் அதிகமான லைக்குகளையும் பல கமெண்ட்டுகளையும் பெற்றுவருகிறது இந்த விளம்பரம்.

சீனா: பெண்கள் உள்ளாடை விளம்பரங்களில் மாடலாக நடிக்கும் ஆண்கள் - என்ன காரணம்?
சீனா: சம்பளத்துடன் ஒரு மாதம் லீவ்! புதுமண தம்பதிகளுக்கு புதிய திட்டம் - என்ன காரணம்?

பலரும் இந்த தடைச் சட்டம் பெண்களுக்கான வேலைவாய்ப்பினை, அவர்களது முன்னேற்றத்தை தடுக்கும் நோக்கில் இருக்கிறது என்று கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த விளம்பரத்தில் நடித்த அந்த ஆண் மாடலோ, “இது ஏன் இவ்வளவு பெரிய பேசு பொருளாக இருக்கிறது என்று எனக்கு புரியவில்லை. எங்களது சக பெண் மாடல்கள் இந்த மாதிரியான விளம்பரங்களில் நடிக்க இயலாது.

அதனால் நாங்கள் நடித்து வருகிறோம். இந்த விளம்பரங்களை இயக்குபவர்கள் பெரும்பாலும் பெண்கள் தான். அப்படியானால் அவர்கள் ஆண்களின் வேலைவாய்ப்பை தட்டிப்பறிக்கின்றனரா?” என்று கேள்வியையும் எழுப்பியிருந்தார்.

சீனா: பெண்கள் உள்ளாடை விளம்பரங்களில் மாடலாக நடிக்கும் ஆண்கள் - என்ன காரணம்?
சீனா: ரூ.1800 திருடிவிட்டு 14 ஆண்டுகள் காட்டில் வாழ்ந்த நபர் - இப்போது வெளியேவர காரணமென்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com