China : சீனாவின் கடுமையான கோவிட் கட்டுப்பாடுகள் மாறுகிறதா?

இறப்புகளைப் பொறுத்த வரை 2019 இன் இறுதி வரையிலும் சீனாவில் 4,600 இறப்புகள் பதிவு செய்யப்பட்டன. இதே காலகட்டத்தில் அமெரிக்காவில் 9,70,000ம் பேரும், இங்கிலாந்தில் 1,60,000 பேரும் இறந்துள்ளனர்.

Covid
CovidChina

உலகிலேயே கோவிட் தொற்றுநோயைக் கையாள்வதற்கு மிகக் கடுமையான கட்டுப்பாடுகளைப் பின்பற்றும் நாடு சீனா மட்டும்தான். ஆனால் சமீபத்திய வாரங்களில் சீனாவில் உயர்ந்து வரும் கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை அந்நாட்டின் அணுகுமுறையில் சில மாற்றங்கள் தெரிவதைக் காட்டுகின்றது.

சீனாவில் தற்போதைய கோவிட் 19 அலையின் தீவிரம்?

நாடு முழுவதும் பரவலாகப் பரவியுள்ள கோவிட் தொற்று அலை பெரும்பாலும் ஒமிக்ரான் திரிபால் ஏற்படுகிறது. இதன் பொருட்டு வடகிழக்கு மாநிலமான ஜிலின் மற்றும் தெற்கில் உள்ள தொழில்நுட்ப மைய நகரமான ஷென்சென் உட்படச் சீனாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அவர்களது பகுதிகளுக்குள் முடக்கப்பட்டிருக்கின்றனர்.

சீனாவின் மிகப்பெரிய நகரமான ஷாங்காய் இந்தப் பட்டியலில் சமீபத்திய காலத்தில் இணைந்து ஏறக்குறைய ஒரு மாதமாக கோவிட் 19 ஐ எதிர்த்துப் போராடி வருகிறது. சீனாவில் நாடு முழுவதும் தற்காலிக மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இருப்பினும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுடன் ஒப்பிடும்போது, தொற்று விகிதம் குறைவாகவே உள்ளது. மார்ச் 24க்கு முந்தைய வாரத்தில் சீனா முழுவதும் 14,000 த்திற்கும் மேற்பட்ட மக்களுக்குத் தொற்று ஏற்பட்டது. இதே காலத்தில் இங்கிலாந்தில் 6,10,000 த்திற்கும் மேற்பட்ட புதிய தொற்றுகள் ஏற்பட்டன.

china
china

கோவிட் தொடர்பான சீனாவின் கொள்கையில் என்ன மாற்றம்?

இதற்கு முன்பு சீனாவில் ஓரிரு இடங்களிலிருந்த கொரோனா தொற்று தற்போது நாடு முழுவதும் பரவி வருகிறது. இதனால் முன்பு அமல்படுத்தப்பட்ட மிகக் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது கடினமாகி வருகிறது. அதில் தற்போது சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இருந்தாலும் முக்கிய கூறுகள் இப்போதும் அமலில் உள்ளன.

சீனாவிலிருந்து வெளிநாடுகளுக்கும், வெளிநாடுகளிலிருந்து சீனாவிற்கும் பயணம் செய்வது முற்றிலும் வரையறுக்கப்பட்டிருக்கிறது. உள்நாட்டில் பயணிப்பதற்கும் சில கட்டுப்பாடுகள் உள்ளன.

வெளிநாட்டுப் பயணிகள் சீனா வந்தால் அவர்களுக்கு கோவிட் பரிசோதனை செய்து கட்டாய தனிமைப்படுத்தலின் பொருட்டு அரசு சார்பிலான விடுதிகளுக்கு அனுப்பப்படுகின்றனர். இருவாரங்கள் அங்கிருக்க வேண்டும். பிறகு அவர்கள் கண்காணிப்பில் இருப்பர்.

தொற்றே இல்லை என்றாலும் சமூக குடியிருப்புகளில் வழக்கமான இடைவெளிகளில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தொற்று கண்டறியப்பட்டால் குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டுத் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பப்படுகிறார்கள். தொற்று ஏற்பட்ட பகுதி முற்றிலும் தனிமைப்படுத்தப்படுகிறது அல்லது பூட்டப்படுகிறது.

covid
covidTwitter

உணவுக் கடைகள் மற்றும் சில அத்தியாவசிய பொருட்கள் விற்கப்படும் கடைகளைத் தவிர மற்ற அனைத்து வணிக மையங்களும் மூடப்பட்டுள்ளன. பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. பொதுப்போக்குவரத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட அனைத்து வாகன போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. ஷாங்காய் நகரின் புறநகர்ப் பகுதியில் ஒரு தெருவே வெறிச்சோடிக் கிடக்கிறது.

எனினும் சீனாவின் சுகாதார பாதுகாப்பு முறையின் சுமை கூடி வருவதால் சில விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன.

லேசான அறிகுறிகளைக் கொண்டவர்கள் இனி மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டியதில்லை. ஆனால் அவர்கள் இன்னும் தனிமைப்படுத்த மையங்களுக்குச் செல்ல வேண்டும். தனிமைப்படுத்தப்படும் மையங்களில் இருப்பதற்கான காலம் குறைக்கப்பட்டுள்ளது.

இனி நகரம் முழுவதும் சோதனை நடைபெறாது. அதற்குப் பதில் பகுதியளவிலான சோதனை மேற்கொள்ளப்படும். நாடு முழுவதும் கடைகளில் சுயமாக கோவிட் பரிசோதனை செய்து கொள்ளப்படும் கருவி கிடைக்கும். ஆனால் அதில் தொற்று உறுதி எனத் தெரிந்தால் அவர்கள் பிசிஆர் சோதனை மேற்கொள்ள வேண்டும்.

Lock Down
Lock DownChina

சீனாவின் முந்தயை மிகக் கடுமையான கோவிட் கட்டுப்பாட்டு முறைகள் எந்த அளவிற்குப் பலனளித்தது?

தற்போதைய கொரோனா அலைக்கு முன்பு நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் சீனா குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளது.

இறப்புகளைப் பொறுத்த வரை 2019 இன் இறுதி வரையிலும் சீனாவில் 4,600 இறப்புகள் பதிவு செய்யப்பட்டன. இதே காலகட்டத்தில் அமெரிக்காவில் 9,70,000ம் பேரும், இங்கிலாந்தில் 1,60,000 பேரும் இறந்துள்ளனர்.

பத்து இலட்சம் மக்கள் தொகையில் கோவிட் இறப்புகள் அமெரிக்காவில் 2,922 ஆகவும், இங்கிலாந்தில் 2,402 ஆகவும் இருக்கும் போது சீனாவில் மூன்று பேர் மட்டும் இறந்திருக்கின்றனர். மேலும் கோவிட் பேண்டமிக் காலம் முழுவதிலும் சீனாவில் அறிவிக்கப்பட்ட தொற்றுகள் மிகக் குறைவாகவே உள்ளன.

அதே நேரம் சீனாவின் அதிகாரப்பூர்வ தரவுகள் துல்லியமானவையா என்று சிலர் சந்தேகம் கொண்டுள்ளனர். ஆனாலும் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது தொற்று மற்றும் இறப்பு விகிதம் இரண்டும் சீனாவில் குறைவாக இருப்பது தெளிவு.


Covid
கொரோனா: வேகமாக பரவும் ஒமிக்ரான், நடுங்கும் உலக நாடுகள், அஞ்சாத அரபு அமீரகம் - என்ன காரணம்?

மக்கள் தொகையில் 88% பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இதைத் தாண்டி சீனாதான் கோவிட் தொடர்பாக, சமரசமே இல்லாத கடுமையான கட்டுப்பாடுகளைப் பின்பற்றும் நாடாக உள்ளது.

மக்கள் தொகையில் பெரும்பாலானோருக்குத் தடுப்பூசி போடப்பட்டதால் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் 2021 இன் பிற்பகுதியில் தங்கள் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளன.

இருப்பினும் மேற்கண்ட மூன்று நாடுகளிலும் டெல்டா மற்றும் ஒமிக்ரான் கோவிட் திரிபுகள் பரவிய போது தொற்றும் அதிகரித்தது. ஆனால் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவுடன் ஒப்பிடும் போது இந்த மூன்று நாடுகளிலும் தொற்று குறைவாகவே உள்ளது.

எது எப்படியோ சீனாவில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதால் மக்களுக்குப் பல சிரமங்கள் இருப்பது உண்மை. ஆனால் அங்கேதான் தொற்று பரவலும், இறப்பு விகிதமும் குறைவு என்பதைப் பார்க்கும் போது கோவிட் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் சீனா முன்னணி நாடாக விளங்குகிறது.


Covid
டெல்டாகிரான்: புதிய ஹைபிரிட் கொரோனா வைரஸ் - நாம் தெரிந்து கொள்ள வேண்டியவை என்ன?

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com