சீனாவில் ஓடுதளத்தில் தயாராக இருந்த விமானம் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விமானத்திலிருந்த 113 பயணிகள் மற்றும் 9 குழுவினர் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.
திபெத் ஏர்லைன்ஸ் விமானம் சீனாவின் சோங்கிங் விமான நிலையத்திலிருந்து பயணிகளுடன் புறப்படத் தயாராகும் போது விமானத்தில் ஏதோ குழப்பமிருப்பது கவனிக்கப்பட்டது. இதனால் விமானம் பறக்கும் முன் நிறுத்தப்பட்டது.
பெரிய அளவிலான விபத்துகள் தடுக்கப்பட்டு பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர். சிலருக்கு மட்டும் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது. சீன ஊடகங்களால் பகிரப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்களில் விமானத்தின் வலது மூக்குப் பகுதி தீப்பிடித்து எரிவதைக் காண முடிகிறது. விமானம் ரன்வேயில் சருக்கியதனால் தீ பிடித்திருக்கலாம் எனவும் கூறுகின்றனர்.
இந்த விபத்தில் 40 பணிகளுக்கு மேல் காயமடைந்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. விமான விபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரிக்கப்படுவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கடந்த வாரங்களில் சீனாவில் நடைபெற்ற இரண்டாவது விபத்து இதுவாகும். முன்னதாக சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸின் போயிங் 737 ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 132 பேர் மரணித்தது குறிப்பிடத்தக்கது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp