சீனா உலகில் ஒரு புதிரான நாடாக திகழ்ந்து வருகிறது. இங்கு நடந்து வரும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரான சக்தியாக கருதப்படும் யாவரும், எந்த உயர் பதவியில் இருந்தாலும் தூக்கி எறியப்படுவதாக சர்வதேச அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கு கட்டுப்படாத யாவரும் களை எடுக்கப்படுவதாக ஊடகங்கள் சந்தேகிக்கின்றன. முதலில் காணாமல் போன வெளியுறவுத்துறை அமைச்சரும் சரி கடந்த ஆகஸ்ட் மாதம் காணாமல் போன பாதுகாப்புத்துறை அமைச்சரும் சரி, பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவித்துள்ளதே தவிர அவர்கள் பற்றிய எந்த தகவலும் கொடுக்கப்படவில்லை.
பாதுகாப்புத்துறை அமைச்சர் லீ ஷாங்ஃபுவும் சரி, முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் குவென் கேங்கும் சரி சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கு நெருக்கமாக இருந்துவந்தனர்.
சீனாவில் ஒரு கட்சி சர்வாதிகார ஆட்சி நடத்திவரும் நிலையில் அதிபரின் கண்காணிப்பிலேயே இருவரும் பணியாற்றி வந்தனர். ஆனால் அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையில் அல்லது அரசில் சில குழப்பங்களை ஏற்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களின் பதவி நீக்கத்துக்கு சீன அரசின் மூத்த உறுப்பினர்களும் நிலைக்குழுவும் ஒப்புதல் அளித்திருப்பதாக சீன ஊடகங்கள் கூறியிருக்கின்றன.
பாதுகாப்புத்துறை அமைச்சராக கடந்த மார்ச் மாதம் நியமிக்கப்பட்டார் லீ ஷாங்ஃபு. இவர் உபகரணம் வாங்கியதில் ஊழல் செய்ததற்காக சமீபத்தில் விசாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சீனாவின் செயற்கைகோள் மற்றும் ராக்கெட் ஏவுதள நிலையத்தில் பொறியாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர், சீன ராணுவத்தின் உபகரணங்கள் மேம்பாட்டுத் துறையின் தலைவராக இருந்திருக்கிறார்.
அப்போது ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்கியதற்காக அமெரிக்கா இவருக்கு தடைவிதித்துள்ளது. இவர் அமைச்சராக பொறுப்பேற்றது முதல் அமெரிக்கா-சீனா இடையிலான இராணுவ உறவு பலவீனமடைந்துவந்தது.
கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி பெய்ஜிங்கில் நடந்த ஆப்பிரிக்க நாடுகள் உடனான பாதுகாப்பு மாநாட்டில்தான் அவர் கடைசியாக பொதுவெளியில் தோன்றினார்.
இந்த வாரம் பெய்ஜிங்கில் நடக்கவுள்ள சர்வதேச இராணுவ அதிகாரிகள் கூட்டத்துக்கு சீனா தயாராகி வருகிறது. இந்த நிலையில் இராணுவ அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர் பொறுப்பில் இருந்தபோது ஏற்பட்ட குழப்பங்கள்தான் இவரது பதவி நீக்கத்துக்கு காரணமா? அல்லது பிற அரசியல் காரணங்கள் இருக்கக் கூடுமா என்பது தெரியவில்லை.
முன்னதாக காணாமல் போனவர் வெளியுறவுத் துறை அமைச்சர் குவென் கேங்க். இவரும் அதிபருக்கு நெருக்கமான அமைச்சராகவே இருந்துவருகிறார்.
இவர் அமெரிக்காவில் சீனாவுக்கான தூதராக இருந்துவருகிறார். சீன அரசில் பொறுப்பு வகிப்பவர்கள் திருமணம் தாண்டிய உறவில் இருக்கக் கூடாது என்பது விதிமுறை.
ஆனால் குவென் கேங்க் தொலைக்காட்சி தொகுப்பாளினி ஒருவருடன் தொடர்பில் இருந்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுவே அவரது பதவி நீக்கத்துக்கு காரணமாகக் கருதப்படுகிறது.
சீனாவின் அணுஆயுத கிடங்கை பராமரித்து வரும் குழுவின் இரண்டு தலைவர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் சில இராணுவ உயர் அதிகாரிகளும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருமே காணாமல் போவதன் பின்னணி யாராலும் புரிந்துகொள்ள முடியாததாக இருக்கிறது.
பதவி நீக்கத்தை அறிவிக்கும் அரசு அவர்களை பற்றி எந்த தகவலும் கொடுக்காதது ஏன்? ஜி ஜின்பிங்கின் மறுசீரமைப்புத் திட்டத்தின் பகுதிகள் தானா இவையெல்லாம்? என பல விடை தெரியாத கேள்விகள் எழுகின்றன.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust