India vs China : 60 ஆண்டுகளாக என்ன தான் பிரச்சனை ? - எளிமையான விளக்கம்

எல்லா நாடுகளுக்கும் அதனுடைய எல்லை இது என்பது தெளிவாக வரையறுக்கப்படும். ஆனால் இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு பெரிய நிலபரப்புகளைக் கொண்ட நாடுகளுக்கு இடையிலான சுமார் 3,440 கிலோ மீட்டர் எல்லை தெளிவாக வரையறுக்கப்படவில்லை.
India vs China : 60 ஆண்டுகளாக தொடரும் எல்லை பிரச்னை - தீர்வு இருக்கிறதா?
India vs China : 60 ஆண்டுகளாக தொடரும் எல்லை பிரச்னை - தீர்வு இருக்கிறதா?Twitter
Published on

இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையிலான எல்லை பிரச்சினை தொடர்ந்து மோசமாகி கொண்டே போகிறது. உலகின் மிகப்பெரிய பொருளாதார சக்திகள் மற்றும் ராணுவங்களாக திகழும் இந்தியா & சீனா இமயமலை பகுதியில் எல்லை பிரச்சனையில் தொடர்ந்து ஒருவரை ஒருவர் எதிர்க்கின்றனர்.

இந்திய சீன எல்லையை பிரச்சனை என்றால் என்ன?

எல்லா நாடுகளுக்கும் அதனுடைய எல்லை இது என்பது தெளிவாக வரையறுக்கப்படும். ஆனால் இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு பெரிய நிலபரப்புகளைக் கொண்ட நாடுகளுக்கு இடையிலான சுமார் 3,440 கிலோ மீட்டர் எல்லை தெளிவாக வரையறுக்கப்படவில்லை.

ஆறுகள், ஏரிகள், பணிபடர் பிரதேசங்கள் என பல இயற்கை அமைப்புகளைக் கொண்ட எல்லைப் பகுதிகள் வருவதால், எதுவரை தங்களுடைய எல்லை என்பது தெளிவாக வரையறுக்கப்படவில்லை. இதுதான் இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையிலான எல்லைப் பிரச்சனையின் கரு.

இரு நாடுகளும் தங்களுடைய line of actual control எல்லையாக கருதும்  இடங்களில் பல்வேறு கட்டமைப்புகளை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்தியாவின் தெளலத் பெக் விமானப் படைத் தளம்

கடல் மட்டத்திலிருந்து அதிக உயரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் விமானப்படைத்தளம் இந்தியாவின் எல்லைக்கு உட்பட்டுள்ள தெளலத் பெக் ஓல்டி (Daulat Beg Oldi) என்கிற இடத்தில் கட்டமைக்கப்பட்டது.

அந்த விமானப்படைத்தளத்தை சென்றடைய சுமார் 235 கிலோ மீட்டர் நீள டி பி ஓ சாலையும் (DBO road) இந்தியாவின் பார்டர் ரோட்ஸ் ஆர்கனைசேஷன் என்கிற அமைப்பு கடந்த 2019 ஆம் ஆண்டு கட்டி முடித்தது.

இதுவே கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு அடித்தளமாக அமைந்தது என்றும் கூறலாம்.

இந்தியா மற்றும் சீனா ஆகிய இருநாட்டு ராணுவ துருப்புகளுக்கு இடையில், பல கட்ட பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருந்தாலும் பிரச்சனையின் வீரியம் குறைந்ததாக தெரியவில்லை. 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கூட இரு நாட்டு துருப்புகளுக்கிடையில் கைகலப்பு ஏற்பட்டதாக செய்திகளை பார்க்க முடிகிறது.

இந்திய நாட்டில் உள்ள அருணாச்சல் பிரதேஷ் மாநிலத்தில் தவங் (Tawang) பகுதியில் இந்த கைகலப்பு நடந்ததாகவும், இதனால் சில இராணுவ வீரர்களுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டதாகவும் பிபிசி வலைதள கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

கல்வான் தாக்குதல்

கல்வான்  பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியா மற்றும் சீன ராணுவ வீரர்களுக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பில் துப்பாக்கி பயன்படுத்தப்படாமல் வேறு சில சாதாரண (மரக்கட்டை, கல்...) ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன. 

இதில் இந்திய தரப்பில் குறைந்தபட்சம் 20 பேரும், சீன தரப்பில் நான்கு பேரும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 1975 ஆம் ஆண்டுக்குப் பிறகு இப்படி இரண்டு நாடுகளும் நேருக்கு நேர் பெரிய அளவில் மோதிக் கொண்டு உயிரிழப்புகள் ஏற்பட்டது இதுவே முதல் முறை என்றும் பிபிசி வலைதளம் கூறுகிறது.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பூட்டான் மற்றும் நேபால் நாடுகளுக்கு இடையில் இருக்கும் இந்தியாவின் சிக்கிம் பகுதியில், இரு நாடுகளுக்கு இடையே மீண்டும் கைகலப்பு ஏற்பட்டு இருநாட்டு ராணுவ துருப்புகளுக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டன.

India vs China : 60 ஆண்டுகளாக தொடரும் எல்லை பிரச்னை - தீர்வு இருக்கிறதா?
பசிக்கொடுமை: பாகிஸ்தான், இலங்கையை விட பின்தங்கிய இந்தியா - பதறவைக்கும் GHI அறிக்கை!

துப்பாக்கிச் சூடு

கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியா தன் துருப்புகளை நோக்கி துப்பாக்கி சூடு (firing shots at its troops) நடத்தியதாக சீன தரப்பு குற்றம் சாட்டியது. சீனா தரப்பிலிருந்து வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக (firing into the air) இந்தியாவும் குற்றம் சாட்டியது.

ஒருவேளை இது உண்மையாக இருந்தால் கடந்த 45 ஆண்டுகளில் முதல் முறையாக இரு நாடுகளுக்கு இடையில் துப்பாக்கி சூடு நடந்ததாக கூறலாம். 1996 ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி வெடிபொருட்கள் மற்றும் துப்பாக்கிகள் எல்லைப் பகுதியில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கு இடையில் ஒரே ஒரு முறை மட்டுமே பெரிய போர் நடைபெற்றது. 1962 ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் இந்தியா மிக மோசமான தோல்வியைச் சந்தித்தது.

India vs China : 60 ஆண்டுகளாக தொடரும் எல்லை பிரச்னை - தீர்வு இருக்கிறதா?
Delhi, Mumbai, Madras : வெளிநாட்டு இடங்களுக்கு இந்திய நகரங்களின் பெயர்கள்- ஆச்சரியத் தகவல்

இன்றைய நிலை

இன்று இரு நாடுகளுமே மிகப்பெரிய பொருளாதார சக்திகளாகவும் சர்வதேச அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்த நாடுகளாகவும், மிக குறிப்பாக அணு ஆயுத பலம் கொண்ட நாடுகளாகவும் உருவெடுத்துள்ளனர். எனவே இரு நாடுகளுக்கு மத்தியில் உருவாகி வரும் பதற்றம் ஒரு நாள் பெரிதாக வெடிக்கும் அபாயமும் இருக்கிறது.

இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் பொருளாதார ரீதியில் பெரிய வர்த்தக கூட்டாளிகளாகவே இருக்கிறார்கள் என்பதையும் இங்கு மறுப்பதற்கில்லை.

India vs China : 60 ஆண்டுகளாக தொடரும் எல்லை பிரச்னை - தீர்வு இருக்கிறதா?
சீனா: கொரோனா ஊரடங்குக்கு எதிரான போராட்டம் அரசுக்கு எதிராக திரும்புகிறதா?- விரிவான தகவல்கள்

ஆனால் இரு நாடுகளுக்கு மத்தியிலான எல்லை பிரச்சினை & அரசியல் அழுத்தம், இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோதி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகிய இரு பெரும் தலைவர்களுக்கு இடையில் சிக்கலான உறவு நிலவுவதையே பிரதிபலிக்கிறது.

ஒருவேளை இரு நாடுகளுக்கு இடையில் நிலைமை மோசமானால் இந்த இரு நாடுகளுமே மிகப்பெரிய இழப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என இந்த விஷயத்தை கவனித்து வரும் பார்வையாளர்கள் கூறுகின்றனர். இரு நாடுகளும் தொடர்ந்து பேச்சு வார்த்தைகளை நடத்தி ஒரு தீர்வை காண்பது மட்டுமே ஒரே வழி என்றும் கூறுகிறார்கள்.

India vs China : 60 ஆண்டுகளாக தொடரும் எல்லை பிரச்னை - தீர்வு இருக்கிறதா?
சீனா - செளதி அரேபியா 1500 ஆண்டுகால நட்பு: வணிகமும், வரலாறும் - ஒரு விரிவான பார்வை

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com