கொரோனா : பாதிக்கப்பட்டது 4 பேர், அவதியில் 11 லட்சம் பேர் - இதுதான் சீனாவின் நிலை

சீனா கடைப்பிடிக்கும் ஜீரோ கோவிட் கொள்கை மக்கள் மற்றும் மனிதர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. சீன அரசு அறிவிக்கும் கட்டுப்பாடுகளால் இவர்கள் அதிக அழுத்தத்தை எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது.
Wuhan
WuhanCanva
Published on

சீனாவின் வூஹான் மாகாணத்தின் புறநகர்ப் பகுதி ஒன்றில், கிட்டத்தட்ட பத்து லட்சம் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். முதன்முதலில் கொரோனா கண்டுபிடிக்கப்பட்ட இந்த சீன மத்திய நகரத்தில் மீண்டும் கொரானா பெருந்தொற்றை முன்னிட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

ஜியாங்சியா (Jiangxia) மாவட்டத்தில் நான்கு பேருக்கு அறிகுறிகள் இல்லாத கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறது. எனவே அம்மாவட்டத்தில் உள்ள நகரவாசிகள் அனைவரும் மூன்று நாட்களுக்கு தங்கள் வீடு அல்லது வீடு இருக்கும் வளாகத்திற்கு உள்ளேயே இருக்குமாறு உள்ளூர் அரசு உத்தரவிட்டிருக்கிறது.

சீனா 'ஜீரோ கோவிட்' கொள்கையைக் கடைப்பிடித்து வருகிறது. இக்கொள்கையின் அடிப்படையில் பெருந்திரளான மக்களுக்கு கொரோனா நோய்த் தொற்று இருக்கிறதா இல்லையா என பரிசோதிப்பது, மிகக் கடுமையான தனிமைப்படுத்தல் விதிமுறைகள் அமல்படுத்தப்படுவது, உள்ளூரிலேயே ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பது... போன்ற கடுமையான நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது.

இதனால் மற்ற எந்த ஒரு நாட்டை விடவும், சீனாவில் குறைவான எண்ணிக்கையிலேயே கொரோனா மரணங்கள் நிகழ்ந்தன. ஆனால் இந்த ஜீரோ கோவிட் கொள்கை மக்கள் மற்றும் மனிதர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. சீன அரசு அறிவிக்கும் கட்டுப்பாடுகளால் இவர்கள் அதிக அழுத்தத்தை எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது.

சுமார் ஒரு கோடியே இருபது லட்சம் பேர் வாழும் வூஹான் நகரத்தில் தொடர்ந்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அப்படி இரு தினங்களுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் எந்தவித கொரோனா அறிகுறிகளின்றி இருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் இவர்களோடு தொடர்பில் வந்த இருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அப்பகுதியில் தடாலடியாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Wuhan
வடகொரியாவில் முதல் கொரோனா தொற்று உறுதி - ஊரடங்கு அமல்?

கடந்த 2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில், கொரோனாவைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட முதல் இடம் என்பதால், சீனாவின் வூஹான் மாகாணம் உலகம் முழுக்க பிரபலமானது. அப்போது அந்நகரத்தில் மிகக்கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

அக்கட்டுப்பாடுகளைப் பார்த்து பல நாட்டவர்களும் வியந்தனர், ஆனால் அடுத்த சில வாரங்களிலேயே உலகின் பல நாடுகளும் கொரோனா பிரச்சனையைச் சமாளிக்க, அதே போன்று பல கடுமையான கட்டுபாடுகளையும் ஊரடங்கு உத்தரவுகளையும் விதித்தன.

உலக நாடுகள் பல, கொரோனா வைரஸில் தத்தளித்துக் கொண்டிருந்த போதே சீனாவின் பல நகரங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. கொரோனா வைரஸை, சீனா வென்றுவிட்டது என வெற்றிக்கதைகள் உலவத் தொடங்கின.

தற்போது மீண்டும் சீனாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. உலகின் பல நாடுகளிலும் கொரோனா வைரஸ் ஒருபக்கம் மெல்லப் பரவினாலும், மறுபக்கம் வழக்கம் போல எல்லா பொருளாதார நடவடிக்கைகளும் நடக்கத் தொடங்கிவிட்டன.

ஆனால் சீனா 'ஜீரோ கோவிட்' கொள்கையைக் கடைப்பிடித்து வருவதால் அடிக்கடி உள்ளூரில் ஊரடங்கு உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறது.

சீனாவின் நிதித் தலைநகரமான ஷாங்காய் நகரம், கடந்த மாதம்தான் தன் கடுமையான இரண்டு மாத கட்டுப்பாட்டிலிருந்து வெளியே வந்தது. இப்போதும் அந்நகரத்தில் வாழும் மக்களுக்கு கொரோனா பரிசோதனைகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.

பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்படாமல் இருக்க, சீனாவில் உள்ள உற்பத்தி ஆலைகள் தங்கள் ஊழியர்களை தொழிற்சாலைகள் மற்றும் பணியிடங்களிலேயே தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர்.

இதனால் வேலைக்குச் செல்லும் ஊழியர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் இடையிலான கொரோனா பரவல் குறைக்கப்பட்டிருக்கிறது.

சீனாவில் இதுவரை 22 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 14,720 பேர் உயிரிழந்தனர் என்கிறது அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம்.

Wuhan
தமிழ்நாடு ஞாயிறு ஊரடங்கு ரத்து : கூடுதல் தளர்வுகள் இவைதான்! - விரிவான தகவல்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com