வடகொரியாவில் முதல் கொரோனா தொற்று உறுதி - ஊரடங்கு அமல்?

வடகொரியாவில் முதல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதனால் நாட்டின் முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய தலைவர் கிம் ஜாங் உன், அவசர கால ஊரடங்கை அறிவித்துள்ளார்
Kim Jong Un
Kim Jong UnTwitter

வட கொரியாவின் பியாங்யோங் நகரில் முதல் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொரியா மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கண்டறியப்பட்டது ஓமைக்ரான் வகை வைரஸ் என்பதால், நாட்டின் முக்கிய தலைவர்களோடு கூட்டம் நடத்திய தலைவர் கிம் ஜாங் உன், அவசரக்கால அடிப்படையில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.

2020ஆம் ஆண்டு பெருந்தொற்று ஆரம்பித்ததிலிருந்து, இன்றுவரை பாதிப்புகள் இல்லை என்று வடகொரியா தெரிவித்து வந்தது. கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் பாதிப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்று அந்நாடு அறிவித்து வந்த நிலையில், முதல் பாதிப்பு பதிவாகியுள்ளதாக வடகொரியாவின் மத்திய செய்தி நிறுவனம் செய்திகள் வெளியிட்டுள்ளது.

North Korea
North Korea Twitter

விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அமலில் இருந்த நிலையில், பியாங்யோங் நகரில் ஒமைக்ரான் வகை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவசர கூட்டம் நடத்திய தலைவர் கிம் ஜாங், "குறுகிய காலத்தில், கொரோனா பாதிப்பை வேரோடு அழித்துவிடுவது தான் அவர்களது நோக்கம் என்று கே சி என் ஏ-விற்கு தெரிவித்துள்ளார்.

மேலும் மக்களிடம் அதீத விழிப்புணர்வும் உள்ளதால், வெகு விரைவில் இந்த பாதிப்பிலிருந்து வடகொரியா வெளிவந்து விடும் என்றும், பொது மக்கள், தங்கள் நகரங்ககளில் கடும் கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து, அரசோடு ஒத்துழைக்கவேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

North Korea
North KoreaTwitter

முதல் தொற்று உறுதியாகியுள்ள நிலையில், மேலும் எத்தனை பாதிப்புகள் பதிவாகியுள்ளன என்பது குறித்த தகவல்கள் இல்லை. பாதிப்பு குறித்து வடகொரியா தொழிலாளர் கட்சி ஆலோசனை நடத்தியதாகவும், பாதிப்புகள் மேலும் அதிகரிக்காமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகளில் முதல் தொற்று கண்டறியப்பட்ட நிலையில், தலைவர் கிம் ஜாங் உன் பொது முடக்கத்தை அமல்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது

Kim Jong Un
வட கொரியா வரலாறு : ஏன் இந்த சிறிய நாட்டை கண்டு அஞ்சுகிறது அமெரிக்கா? - பகுதி 2

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com