சீனா : அழகிய நாய் என நினைத்து அரியவகை கரடியை வளர்த்த குடும்பம் - என்ன நடந்தது?

ஒவ்வொரு நாளும் இரண்டு கூடைகள் பழமும் இரண்டு பாக்கெட் நூடுல்ஸும் சாப்பிட்டுப் தெம்பாக வளர்ந்துள்ளது.
சீனா : அழகிய நாய் என நினைத்து அரியவகை கரடியை வளர்த்த குடும்பம் - என்ன நடந்தது?
சீனா : அழகிய நாய் என நினைத்து அரியவகை கரடியை வளர்த்த குடும்பம் - என்ன நடந்தது?ட்விட்டெர்
Published on

சீனாவைச் சேர்ந்த ஒரு குடும்பம் திபெத்திய மாஸ்திஃப் நாய் என நினைத்து கருத்த, அடர்த்தியான ரோமங்கள் இருந்த ஒன்றை வளர்த்து வந்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் தான் அது ஒரு கரடி என்பது அவர்களுக்கு தெரியவந்துள்ளது.

யூனானின் மாகாணத்தைச் சேர்ந்த அந்த குடும்பத்தினர் 2016ம் ஆண்டு விடுமுறைக்காக சென்ற இடத்திலிருந்து ஒரு நாயை தத்தெடுத்து வளர்ந்த்துள்ளனர்.

நன்றாக வளர்ந்த அது 114 கிலோ வரை எடை கூடினாலும் அவர்களுக்கு சந்தேகமே இல்லாமல் அதற்கு உணவு அளித்துள்ளனர்.

ஒவ்வொரு நாளும் இரண்டு கூடைகள் பழமும் இரண்டு பாக்கெட் நூடுல்ஸும் சாப்பிட்டுப் தெம்பாக வளர்ந்துள்ளது.

அதன் உரிமையாளர் மிசஸ்.யுன் சில நேரங்களில் அதற்கு சரியாக உணவு அளிக்காததால் தான் தாக்கப்பட்டதாக சீன செய்தி நிறுவனத்தில் கூறியுள்ளார்.

திபெத்திய மாஸ்திஃப் வகை நாய்கள் அடர்ந்த ரோமங்களுடன் 70 கிலோ வரை வளரும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அதன் அளவு குறித்து பெரிய சந்தேகங்கள் எழவில்லை.

சீனா : அழகிய நாய் என நினைத்து அரியவகை கரடியை வளர்த்த குடும்பம் - என்ன நடந்தது?
சீனா: ரூ.1800 திருடிவிட்டு 14 ஆண்டுகள் காட்டில் வாழ்ந்த நபர் - இப்போது வெளியேவர காரணமென்ன?

ஆனால் ஒருகட்டத்தில் அது இரண்டு கால்களால் நடக்கத்தொடங்கியிருக்கிறது. அதன் பின்னர் தான் தாங்கள் வளர்ப்பது நாய் இல்லை என அந்த குடும்பத்தினர் உணர்ந்தனர்.

உடனடியாக வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகளை அழைத்திருக்கின்றனர்.

அவர்களிடம் நடந்ததைக் கூறியதும் அவர்கள் அந்த அறியவகைக் கரடியை பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்த வினோத சம்பவம் 2018ம் ஆண்டு நடைபெற்றிருந்தாலும் இப்போது மீண்டும் வைரலாகி வருகிறது

சீனா : அழகிய நாய் என நினைத்து அரியவகை கரடியை வளர்த்த குடும்பம் - என்ன நடந்தது?
Taylor Swift: ரூ.800 கோடி சொத்து மதிப்பு கொண்ட பாப் பாடகியின் பூனை? ஒரு அடடே தகவல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com