ஆன்லைன் வகுப்பின் போது பூனை குறுக்கிட்ட காரணத்தால், பணி நீக்கம் செய்யப்பட்ட பெண்ணுக்கு, நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டுள்ளது சீன நீதிமன்றம்.
ஆன்லைன் வகுப்பின்போது வளர்ப்பு பூனை இடைமறித்ததால், சீன நிறுவனம் ஒன்று, ஆசிரியையை வேலை நீக்கம் செய்தது... அந்த நிறுவனத்தை எதிர்த்து அந்த பெண் தொடுத்த வழக்கில், நீதிமன்றம், அந்த பெண்ணுக்கு இழப்பீடாக ரூ 4.8 லட்சம் வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
சீனாவின் குவாங்க்சௌவ் என்ற நகரத்தில் ஓவிய ஆசிரியராக பணியாற்றிவந்தார் லூவோ என்ற பெண். இவர் ஒரு மெய் நிகர் (Virtual Reality) வகுப்புகள் நடத்தும், கல்விசார்ந்த தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை பார்த்து வந்திருக்கிறார்.
கடந்த வருடம் ஜூன் மாதத்தில், ஆன்லைன் வகுப்பு நடத்திக்கொண்டிருக்கும்போது, அவரது வளர்ப்புப் பூனை ஐந்து முறை கேமராவில் தோன்றியுள்ளது. இதை காரணம் காட்டி அவர் பணியாற்றிய நிறுவனம், லூவோவை வேலையிலிருந்து நீக்கியது.
பாடம் நடத்தும்போது, அதற்கு தொடர்பில்லாத நடவடிக்கைகளில் லூவோ ஈடுப்பட்டதாகவும், முன்னர் ஒருமுறை வகுப்பிற்கு 10 நிமிடம் தாமதமாக வந்ததாகவும் காரணம் காட்டி அவரை அந்த நிறுவனம் பணி நீக்கம் செய்ததாக குவாங்க்சௌவ் டெய்லி அறிக்கை தெரிவிக்கிறது.
இது நியாயமற்ற செயல் எனக் கூறி, நஷட் ஈடு கேட்டு லூவோவ் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்தார். ஆனால், நிறுவனம் இதை ஏற்க மறுத்தது... வழக்கை விசாரித்த டியோனெ மக்கள் நீதி மன்றத்தின் நீதிபதி யாஜிங் கூறுகையில், "நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலைப்பார்க்க சொல்லும்போது, அலுவலகத்தில் பணியாற்றுவது போல எதிர்பார்ப்புகளை வைக்க கூடாது" என தெரிவித்தார்.
மேலும், வேலையை விட்டு நியாயமற்ற காரணத்திற்காக நீக்கியதாகக் கூறி, லூவோவிற்கு, 40,000 யுவான் (சீன கரன்ஸி), இழப்பீடாக தர உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இது இந்திய மதிப்பில் 4.8 லட்சம் ரூபாய்!
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust