அமெரிக்கா முதல் ஸ்பெயின் வரை: குடியேற இடமும் கையில் பணமும் கொடுக்கும் வெளிநாட்டு நகரங்கள்!

சில நாடுகள் குடியேறுபவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கி வரவேற்கின்றன. அங்கு குடும்பத்துடன் குடியேறுபவர்களுக்கும், தொழில் தொடங்குபவர்களுக்கும் சலுகைகள் வழங்கப்படுகிறது.
அமெரிக்கா முதல் ஸ்பெயின் வரை: குடியேற இடமும் கையில் பணமும் கொடுக்கும் வெளிநாட்டு நகரங்கள்!
அமெரிக்கா முதல் ஸ்பெயின் வரை: குடியேற இடமும் கையில் பணமும் கொடுக்கும் வெளிநாட்டு நகரங்கள்!Twitter

உலகின் சிறந்த நாடுகளில், நெரிசலற்ற நகரங்களில் குடியேறி சிறப்பாக வாழவேண்டும் என்பது பலரது கனவு.

ஆனால் அப்படிக் குடியேற பல லட்சங்கள் பணம் செலவாகலாம். விசா, பாஸ்போர்ட் பிரச்னைகளைக் கடந்தால், நிலம், வீடு, தொழில் என ஏகப்பட்ட பிரச்னைகளை சந்திக்க வேண்டும்.

ஆனால் சில நாடுகள் குடியேறுபவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கி வரவேற்கின்றன. அங்கு குடும்பத்துடன் குடியேறுபவர்களுக்கும், தொழில் தொடங்குபவர்களுக்கும் சலுகைகள் வழங்கப்படுகிறது.

வெர்மான்ட், அமெரிக்கா - Vermont, USA

அமெரிக்காவின் வெர்மாண்ட் ஒரு மலைப்பிரதேசங்கள் மிகுந்த மாகாணம். இந்த மாகாணத்துக்கு பல சிறப்புகள் இருந்தாலும் இங்கு 6,20,000 பேர் மட்டுமே இங்கு வாழ்கின்றனர்.

வெர்மாண்டில் தங்கி பணியாற்ற விரும்புபவர்களுக்கு 10,000 அமெரிக்க டாலர்கள் இந்திய மதிப்பில் 8.23 லட்சம் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Alaska, United States
Alaska, United States

அலாஸ்கா, அமெரிக்கா

அலாஸ்கா மாகாணத்தில் மக்கள் தொகை சரிந்து வருவதனால் புதிதாக குடியேறும் நபர்களுக்கு ஒரு ஆண்டுக்கு 2,072 அமெரிக்க டாலர்கள் இந்திய மதிப்பில் 1.7 லட்சம் வழங்கப்படும்.

பனி மிகுந்த இந்த மாகாணத்தில் குறைந்தது 1 ஆண்டு வசிக்க வேண்டும் என்பது நிபந்தனை.

Albinen, Switzerland
Albinen, Switzerland

அல்பினென், சுவிட்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் வாலைஸ் என்ற இடத்தில் அமைந்துள்ளது அல்பினென் என்கிற மலை நகரம்.

இங்கு முன்னர் வாழ்ந்த மக்கள் எல்லோரும் பெரிய நகரங்களுக்கு குடிப்பெயர்ந்து சென்றுவிட்டதனால், இந்த மலை நகரத்தின் மக்கள் தொகையை அதிகரிக்க நகர நிர்வாகம் முயற்சிகளை எடுத்து வருகிறது.

இந்த மலை நகரத்தில் குடியேறுபவர்களுக்கு ரூ.50 லட்சம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளது.

Ponga, Asturias, Spain
Ponga, Asturias, Spain

போங்கா, அஸ்டூரியாஸ், ஸ்பெயின்

இயற்கையுடன் பிணைந்திருக்கும் இந்த அமைதியான கிராமத்தில் 1000 பேர் மட்டுமே வசிக்கின்றனர்.

இங்கு புதிதாக குடியேறுபவர்களுக்கு 300 யூரோக்கள் வழங்கப்படுமாம். இந்திய மதிப்பில் 2.6 லட்சம்.

Ireland, Dublin
Ireland, Dublin

துப்ளின், அயர்லாந்து

இதுவரை கிராமங்கள், மலைப்பிரதேசங்களை மட்டுமேப் பார்த்தோம். துப்ளின் அயர்லாந்தின் தலைநகரம்.

இங்கு புதிதாக தொழில்முனைவோர்கள் வரவேற்கப்படுகின்றனர். உங்களது ஐடியா அதிகாரிகளைக் கவர்ந்தால் உங்களுக்கு பணமும் கொடுத்து தங்களது குடியேறியாகவும் மாற்றிக்கொள்ள தயாராக இருக்கிறது அயர்லாந்து.

அமெரிக்கா முதல் ஸ்பெயின் வரை: குடியேற இடமும் கையில் பணமும் கொடுக்கும் வெளிநாட்டு நகரங்கள்!
கத்தார்: இந்திய இளைஞர்களின் சொர்க்கபுரியாக இருப்பது ஏன்? - வியக்க வைக்கும் தகவல்கள்
6. Candela, Italy
6. Candela, Italy

காண்டெலா, இத்தாலி

இத்தாலியில் உள்ள இந்த ஊரில் பல காலி வீடுகள் இருக்கின்றன. 2022ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, இங்கு 2,700 பேர் வசிக்கின்றனர்.

மக்கள்தொகையை மீண்டும் 8000-ஆக உயர்த்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இங்கு குடியேறுபவர்களுக்கு 70,000 முதல் 1,77,000 ரூபாய் வரை வழங்கப்படுகிறது.

Santiago, Chile
Santiago, Chile

சாண்டியாகோ, சிலி

சிலி நாட்டின் தலைநகரில் குடியேறுபவர்களுக்கு மானியமாக 50,000 டாலர்கள் வழங்கப்படுகிறது. இந்திய மதிப்பில் 41 லட்சம்.

இந்த தொகையுடன் வேலைசெய்ய இடம், வீசா எல்லாமும் பெற உங்களிடம் நல்ல ஸ்டார்ட்-அப் ஐடியா இருந்தால் போதுமானது!

Mauritius
Mauritius

மொரீஷியஸ்

உங்களிடம் புதுமையான தொழில்நுட்பம் சார்ந்த ஸ்டார்ட்-அப் ஐடியா இருந்தால் மொரீஷியஸில் நீங்கள் முதலீடு இல்லாமல் தொழில் தொடங்கலாம்.

ஆரம்பத்தொகையாக 20,000 மொரீஷியன் ரூபாய் வழங்கப்படும்.

அமெரிக்கா முதல் ஸ்பெயின் வரை: குடியேற இடமும் கையில் பணமும் கொடுக்கும் வெளிநாட்டு நகரங்கள்!
நீங்கள் வேறு நாடுகளுக்கு குடியேற விரும்புகிறீர்களா? - அப்படியானால் இது உங்களுக்கான கட்டுரை
New Haven City
New Haven City

நியூ ஹெவன் சிட்டி, அமெரிக்கா

கனக்டிகட் மாகாணத்தில் உள்ள இந்த சிறிய நகரம் யேல் பல்கலைக்கழகத்துக்கு பெயர் பெற்றது.

இங்கு குடியேற விரும்பும் மாணவர்களுக்கு அரசு 10,000 அமெரிக்க டாலர்கள் கடனாக வழங்குகிறது.

இந்த நகரத்தில் 5 ஆண்டு வாழ்பவர்கள் அந்த கடனையும் திருப்பி செலுத்த வேண்டிய தேவையில்லை.

அமெரிக்கா முதல் ஸ்பெயின் வரை: குடியேற இடமும் கையில் பணமும் கொடுக்கும் வெளிநாட்டு நகரங்கள்!
41 லட்சம் பணமும் கொடுத்து, குடியேற இடமும் தரும் நாடு குறித்து தெரியுமா?
antikythera, greece
antikythera, greece

ஆன்டிகிதெரா, கிரீஸ்

கிரீஸில் உள்ள இந்த தீவில் 40 பேர் மட்டுமே வசிக்கின்றனர். இங்கு புதிதாக குடியேறினால் வீடும் நிலமும் வழங்கப்படும்.

அதுமட்டுமின்றி, முதல் மூன்று ஆண்டுகளுக்கு 565 அமெரிக்க டாலர்கள் மாதாமாதம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.

இதில் கிரீஸ் நாட்டு மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. இந்த பட்டியலில் உள்ள மேலும் சில இடங்களும் உள்நாட்டு மக்களுக்கே முன்னிரிமை அளிக்கிறது.

அமெரிக்கா முதல் ஸ்பெயின் வரை: குடியேற இடமும் கையில் பணமும் கொடுக்கும் வெளிநாட்டு நகரங்கள்!
Presicce : புதிதாக குடியேறுபவர்களுக்கு ரூ.25 லட்சம் கொடுக்கும் ஒரு ஊர் - ஏன் தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com