சீனா: புற்றுநோய் மருந்து; பசிக்கு விருந்து; ஆண்டுக்கு 600 கோடி கரப்பான்பூச்சிகள் உற்பத்தி!

சீனா முழுவதும் இருக்கும் 100க்கு மேற்பட்ட கரப்பான்பூச்சி வளர்ப்பு பண்ணைகளில் உலக மக்கள் தொகையை விட பல மடங்கு அதிக கரப்பான் பூச்சிகள் வசிக்கின்றன. இந்த கோடிக்கணக்கான கரப்பான் பூச்சிகளுக்கு என்ன உணவு வழங்கப்படுகிறது? இவற்றை வளர்க்க AI பயன்படுகிறதா?
சீனா: புற்றுநோய் மருந்து; பசிக்கு விருந்து; ஆண்டுக்கு 600 கோடி கரப்பான்பூச்சிகள் உற்பத்தி!
சீனா: புற்றுநோய் மருந்து; பசிக்கு விருந்து; ஆண்டுக்கு 600 கோடி கரப்பான்பூச்சிகள் உற்பத்தி!Twitter
Published on

சீனா: 21ம் நூற்றாண்டில் மிகப் பெரிய அளவில் ஒரு ஆர்கானிக் பிசினஸ் வாளர்ந்து வருகிறது. அது தான் கரப்பான் பூச்சி வளர்ப்பு.

சீனர்கள் கண்டதையும் திங்கும் பழக்கம் கொண்டவர்கள் கரப்பான் பூச்சி என்ன விதிவிலக்கா என நீங்கள் நினைக்கலாம்.

ஆனால் இந்த கரப்பான் பூச்சி வளர்ப்பு நாம் நினைக்கும் அளவைக் கடந்து பல மடங்கு பெருகிவிட்டது.

சீனா முழுவதும் இருக்கும் 100க்கு மேற்பட்ட கரப்பான்பூச்சி வளர்ப்பு பண்ணைகளில் உலக மக்கள் தொகையை விட பல மடங்கு அதிக கரப்பான் பூச்சிகள் வசிக்கின்றன.

( Also Read

சீனா மக்களின் ஆயுள் இரகசியம் இது தான் - ஆரோக்கியத்துக்கு கேரண்டி கொடுக்கும் ஒரு உணவு!

சீனா, மெக்சிகோ : பூமிக்கு பல நூறு அடிகளுக்கு கீழே இயங்கும் அற்புத உலகம் குறித்து தெரியுமா?

பொங்கல்: குழந்தைகள், பெரியவர்கள், கர்ப்பிணிகள் கரும்பு சாப்பிடலாமா?- விரிவான தகவல்கள் )

குறிப்பாக ஒரு ஆலையில் ஆண்டுக்கு 600 கோடி கரப்பான் பூச்சிகளை உற்பத்தி செய்கின்றனர். அங்கு இவற்றை பராமரிக்க மனிதர்களுக்கு பதிலாக ஆர்டிஃபீசியல் இன்டலிஜென்ஸ் எனப்படும் ஏ.ஐ தொழில்நுட்பம் கொண்ட ரோபோட் பயன்படுத்தப்படுகிறது.

இதனை செய்வது குட்டாக்டர் என்ற மருந்து நிறுவனம்.

ஆம், சீனாவில் கரப்பான் பூச்சிகள் மருந்துகள் தயாரிக்கவும், அழகு சாதனபொருட்கள் உற்பத்தி செய்யவும், விலங்குகளுக்கு உணவாகவும் பயன்படுத்தப்படுகிறது.

கரப்பான் பூச்சிகளை நெருக்கடியாக பண்ணையில் வளர்ப்பது அருவருப்பானதாக தோன்றலாம். ஆனால் இதிலிருந்து தயாரிக்கும் மருந்துகள் ஆயிரம் கோடிகளை கொட்டிக்கொடுக்கின்றன.

பொதுவாக சுவாசப் பிரச்னைகள் மற்றும் இரைப்பை பிரச்னைகளுக்கு சிறந்த மருந்தாக இந்த கரப்பான்பூச்சிகள் பயன்படுத்தப்படுகின்றன.

தவிர, வழுக்கை, வடுக்கள் ஏன் புற்றுநோய் கட்டிகளுக்கு எதிராக கூட கரப்பான் பூச்சி மருந்துகள் பயன்படுகின்றன.

விலங்குகளுக்கு கொடுக்கபடும் அதிக புரதம் கொண்ட உணவாக கரப்பான் பூச்சி இருக்கிறது. சில நேரங்களில் மனிதர்களும் இதனை உண்கின்றனர்.

சீனா: புற்றுநோய் மருந்து; பசிக்கு விருந்து; ஆண்டுக்கு 600 கோடி கரப்பான்பூச்சிகள் உற்பத்தி!
சீன கடன் வலையில் சிக்கிய பாகிஸ்தான், இலங்கை - எப்படி நடந்தது?

பெரும்பாலும் பறவைகளுக்கும் பன்றிகளுக்கும் இது பயன்படுகிறது. விலங்குகள் அதிகம் புரதம் இருக்கிற உணவை உட்கொள்ளும் போது மொத்த உணவு சங்கிலியும் புரதச் செறிவடைகிறது எங்கின்றனர்.

ஒரு சிறிய கரப்பான் பூச்சி பண்ணை வைத்திருப்பவர் கணக்குப் படி, கரப்பான் பூச்சியில் 20 யுவான் முதலீடு செய்தால் 150 யுவான் திரும்ப கிடைக்கும்.

ஏனெனில் கரப்பான் பூச்சிகளுக்கு பராமரிப்பு செலவு மிகக் குறைவு. அவற்றை எந்த நோயும் எளிதில் தாக்குவதில்லை.

கொஞ்சம் ஈரப்பதமான இருண்ட இடத்தில் எவ்வளவு நெருக்கடியையும் எளிதாக சமாளித்து வாழ்ந்துவிடும்.

அதனால் தான் 28 கோடி ஆண்டுகளாக பல இயற்கை அழிவுகளையும் கடந்து பூமியில் அவை நிலைத்திருக்கின்றன.

இந்த கோடிக்கணக்கான கரப்பான் பூச்சிகளுக்கு என்ன உணவு வழங்கப்படுகிறது? இவற்றும் எத்தனை அளித்தாலும் பத்தாது என்பது உண்மை தான்.

இதனால் தான் இதற்கு வீணாகும் உணவுக் கழிவுகளை அளிக்கின்றனர்.

ஒரு பண்ணைக்கு தினமும் 50,000 கிலோவுக்கு மேல் வீடுகள் மற்றும் உணவகங்களில் இருந்து கழிவுகள் கிடைக்கின்றன.

ஒருவேளை இந்த கோடிக்கணக்கான கரப்பான் பூச்சிகள் தொழிற்சாலையில் தப்பித்து விட்டால் என்னாவது.

சீனா: புற்றுநோய் மருந்து; பசிக்கு விருந்து; ஆண்டுக்கு 600 கோடி கரப்பான்பூச்சிகள் உற்பத்தி!
பாகிஸ்தான் நாட்டில் பட்டையை கிளப்பும் சீன தேசத்து பீர் - இதுதான் அந்த அடிபொலி காரணம்

கரப்பான் பூச்சிகள் தொழிற்சாலையை விட்டு வெளியே சென்றால் அது நிலநடுக்கத்தை விட மோசமான பேரழிவை ஏற்படுத்தும்.

பொதுமக்களைப் பொருத்தவரையில் கரப்பான்பூச்சிகள் இந்த உலகில் இருக்கவே கூடாத நோய் பரப்பும் ஜீவன்கள் தானே.

இதனால் எளிதாக எல்லாரும் கரப்பான் பூச்சிகள் தொழிற்சாலையை அல்லது பண்ணையை வைத்துவிட முடியாது. குறிப்பாக மக்கள் வசிக்கும் பகுதிகளில்!

சீனா: புற்றுநோய் மருந்து; பசிக்கு விருந்து; ஆண்டுக்கு 600 கோடி கரப்பான்பூச்சிகள் உற்பத்தி!
குட்டி எலிகளை கொண்டு தயாரிக்கப்படும் சீன ஒயின் - ஒரு விசித்திர தகவல்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com