டோமினோஸ் மீது வழக்கு தொடுத்த பெண் - இண்டர்வியூவில் கேட்ட கேள்வியால் 3 லட்சம் இழப்பீடு

இந்த நிகழ்வுக்காக ஸ்ட்ராபேன் நகர டோமினோஸ் உரிமையாளர் ஜஸ்டின் குயிர்க் மீது பாகுபாடு பார்ப்பதாக புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது.
Interview
InterviewTwitter
Published on

நார்தன் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் புகழ்பெற்ற உணவு நிறுவனமான டோமினோஸில் டெலிவரி ஏஜென்ட் பணிக்காக நேர்காணலுக்குச் சென்றுள்ளார் ஜானிஸ் வால்ஷ் என்ற பெண்.

அந்த நிறுவனம் அவரது வயது மற்றும் பாலினம் கருதி அவரை வேலையில் சேர்த்துக்கொள்ளவில்லை என்பதைக் கண்டறிந்த அவர், நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து 3 லட்சம் இழப்பீடு பெற்றுள்ளார்.

அங்கு நேர்காணலுக்கு தொடர்பில்லாமல் அவரது வயது பற்றி கேட்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்த நிகழ்வுக்காக ஸ்ட்ராபேன் நகர டோமினோஸ் உரிமையாளர் ஜஸ்டின் குயிர்க் மீது பாகுபாடு பார்ப்பதாக புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதனால் அவர் 4,250 யூரோ இழப்பீடு வழங்கியதுடன் அந்த சம்பவத்துக்கு மன்னிப்பும் கேட்டுள்ளார்.

நேர்காணலில் தனது விண்ணப்பம் வெற்றிகரமாக இருந்ததை அறிந்த வால்ஷ், நேர்காணலில் சம்பந்தம் இல்லாமல் தன் வயது கேட்கப்பட்டது குறித்து சந்தேகித்திருக்கிறார். நேர்காணலுக்கு பிறகு பணிக்கு எடுத்துக்கொள்ளப்படாததால் நிறுவனத்தின் இந்த முடிவு தனது வயது சார்ந்து எடுக்கப்பட்டிருக்கக் கூடும் என்று கருதியுள்ளார்.

அந்த நிறுவனத்தின் ஃபேஸ்புக் பக்கத்துக்கு மெசேஜ் செய்த அவர் நேர்காணலில் வயது பாகுபாட்டுக்கு ஆளனதாக எண்ணுவதாக கூறியுள்ளார். அதற்கு நிறுவனத்தின் சார்பில் அவர்கள் நேர்காணலின் போது தேவையில்லாமல் வயதைக் கேட்கக் கூடாது என்பதை அறிந்திருக்கவில்லை என பதில் கூறியுள்ளனர்.

Interview
வேலையை விட்டு நீக்கும் போது அழுத CEO, ஊழியருக்கு குவிந்த வேலை வாய்ப்பு - என்ன நடந்தது?

பின்னர் 18 முதல் 30 வயது வரையிலான நபர்கள் தான் அந்த வேலைக்கு பொருத்தமானவர்கள் என்று கருதப்படுவதாக மற்றொரு மெக்டொனால்ட்ஸ் ஊழியர் மூலம் அறிந்துகொண்டார் வால்ஷ்.

பின்னர் தான் பெண் என்பதாலும் தனக்கு வேலை மறுக்கப்பட்டதை அறிந்திருக்கிறார் வால்ஷ்.

இந்த விவகாரம் தொடர்பான சட்டப் போராட்டத்தில் வடக்கு அயர்லாந்து சமத்துவ ஆணையம் வால்ஷ்க்கு துணை நின்றிருக்கிறது.

இறுதியாக வால்ஷ் தனக்கு நேர்ந்த தவறுக்கு 3 லட்சம் இழப்பீடு வாங்கியிருக்கிறார்.

Interview
வாழ்நாள் சம்பளத்தை ஒரே தவணையில் அனுப்பிய நிறுவனம் - ராஜினாமா செய்துவிட்டு தலைமறைவான ஊழியர்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com