ஏலத்தில் வென்ற சோபா; ரசிகர்களிடம் அழுதபடி பண உதவி கேட்ட Content Creator- ஏன்?

அந்த வகையில் Quenlin Blackwell என்ற கன்டன்ட் கிரியேட்டர் ஒருவர் ஆன்லைன் ஏலத்தில் சிக்கி பணத்தை இழந்துள்ளார். அவர் வெளியிட்ட வீடியோ ஒன்றில் அழுதவாறே நடந்ததை கூறினார்.
sofa
sofacanva
Published on

தவறுதலாக ஆன்லைன் ஏலத்தில் 82 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சோபாவை வாங்கியுள்ளார் Quenlin Blackwell என்ற பெண் ஒருவர். இவ்வளவு தொகை தன்னிடம் இல்லை என்றும், தனக்கு பண உதவி செய்யுமாறும் தன் ரசிகர்களிடம் கண்ணீர் மல்க கேட்டுள்ளார் அவர்.

ஆன்லைன் பண மோசடி தற்போது அதிகரித்து வருகின்றன. எச்சரிக்கைகள் கொடுக்கப்பட்டாலும், இவை தொடர்ந்துக் கொண்டு தான் இருக்கிறது. இருப்பினும் சிலர் பண மோசடியில் சிக்கிகொள்வதும் உண்டு.

அந்த வகையில் Quenlin Blackwell என்ற கன்டன்ட் கிரியேட்டர் ஒருவர் ஆன்லைன் ஏலத்தில் சிக்கி பணத்தை இழந்துள்ளார். அவர் வெளியிட்ட வீடியோ ஒன்றில் அழுதவாறே நடந்ததை கூறினார்.

sofa
தவறுதலாக 82 கோடி ரூபாய் Refund செய்த நிறுவனம்; வட்டியுடன் திருப்பி கேட்டு வழக்கு

ஆன்லைனில் ஏலம் ஒன்று நடந்திருக்கிறது. அதில் ஒரு சோபாவுக்கான ஏலத்தில் இவர் பங்கேற்றுள்ளதாக தெரிகிறது. விளையாட்டாக ஏலம் கூறியுள்ளார். மேலும், விளையாட்டாக தன் கார்டின் தகவல்களை பதிவேற்றியுள்ளார் க்வென்லின். ஆனால், அதன் ஆபத்தை அவர் உணரவில்லை.

சில மணி நேரங்களிலேயே, அவர் அந்த சோபாவை ஏலத்தில் வென்றதாக அவருக்கு செய்தி வந்துள்ளது. மேலும் அவரது வங்கிக் கணக்கிலிருந்து பணமும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் செய்தி வந்துள்ளது. அந்த சோபாவின் விலை $1,00,00. அதாவது இந்திய மதிப்பில் 82 லட்சம் ரூபாய்.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த க்வென்லின், தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை எனவும், தனக்கு பணம் கொடுத்து உதவுமாறும் தன் ரசிகர்களிடம் கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை அவர் அழுதுகொண்டே பதிவிட்டிருந்தார்.

இந்த வீடியோவை பார்த்த அவரது ரசிகர்களில் சிலர் அவருக்கு உதவுவதாக தெரிவித்தனர். ஆனால் ஒரு சிலரோ, இவர் ஏன் இவ்வாறு செய்தார் என கேள்வி எழுப்பியுள்ளார்.

sofa
தவறுதலாக 1.42 கோடி account-ல் போட்ட நிறுவனம், தலைமறைவான ஊழியர் : ஓர் அடடே சம்பவம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com