தவறுதலாக 82 கோடி ரூபாய் Refund செய்த நிறுவனம்; வட்டியுடன் திருப்பி கேட்டு வழக்கு

சிங்கப்பூரை மையமாகக் கொண்ட நிறுவனம் ஒன்று, கிரிப்டோ கரன்சி மூலம் 100 டாலர் அனுப்புவதற்கு பதிலாக 10 மில்லியன் டாலர் டிரான்ஸ்ஃபர் செய்துள்ளது.
Cash
CashCanva
Published on

ஆஸ்திரேலியாவில் ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு, 8000 ரூபாய்க்கு பதிலாக 82 கோடி ரூபாய் refund கிடைத்துள்ளது. ஆனால், இது தவறுதலாக நடந்த சம்பவம் எனக் கூறி, மொத்த பணத்தையும் திரும்பத் தர, நிறுவனம் இப்போது கோரிக்கை விடுத்துள்ளது.

ஆஸ்திரேலியா, மெல்போர்ன் நகரத்தைச் சேர்ந்தவர் தேவமனோகரி மணிவேல். இவருக்கு வங்கி கணக்கில் திடீரென 10.4 மில்லியன் டாலர்கள் வந்து சேர்ந்துள்ளது. இந்திய மதிப்பில் ரூ.82 கோடி.

Cash
வங்கி கணக்கிற்கு தவறுதலாக வந்த பணம் : தர மறுக்கும் நபர் - இத்தனை லட்சமா? | அடடா நிகழ்வு

இதனால் சந்தோஷத்திலிருந்த தேவமனோகரி மற்றும் அவரது சகோதரி, கிடைத்த பணத்தை வைத்து விமர்சையாக ஷாப்பிங் செய்துள்ளனர்.

ஆனால், நிகழ்ந்தது ஒரு பெரும் தவறு எனக் கூறி, தவறுதலாக அளித்த மொத்த பணத்தையும் வட்டியுடன் சேர்த்து திருப்பி கொடுக்குமாறு கேட்டிருக்கிறது நிறுவனம்.

சிங்கப்பூரை மையமாகக் கொண்ட Crypto நிறுவனம் ஒன்று கிரிப்டோ கரன்சி மூலம் 100 டாலர் அனுப்புவதற்கு பதிலாக 10 மில்லியன் டாலர் டிரான்ஸ்ஃபர் செய்துள்ளது. இந்த பிழையை அந்த நிறுவனம் 7 மாதங்கள் கழித்து தான் கண்டுபிடித்துள்ளது.

மேலும், அந்நிறுவனம் தேவமனோகரி மற்றும் அவரது சகோதரி இந்த பணத்தை திருப்பித்தர வேண்டும் எனக் கூறி நீதி மன்றத்தில் வழக்கும் தொடுத்திருக்கிறது. ஆனால், சகோதரிகள் இருவரும் இந்த ஏழு மாத இடைவெளியில் பணத்தை வைத்து, சொத்துக்கள் வாங்கியதாகவு, மேலும் ஆறு பேருக்கு அன்பளிப்பாக தந்துவிட்டதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.

வழக்கு தொடரப்பட்ட நிலையில், அப்பெண்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. மேலும், டெய்லி மெய்ல் ஆஸ்திரேலியா என்ற பத்திரிக்கையின் அறிக்கைப் படி, விக்டோரியா உச்ச நீதிமன்றம், நிறுவனத்திற்குச் சாதகமாக தீர்ப்பளித்துள்ளது. இதனால் தற்போது சகோதரிகள் அவர்களுக்கு கிடைத்த பணத்தை விட அதிகமாகவே திருப்பி தரும் சூழலில் இருக்கின்றனர்.

Cash
தவறுதலாக 1.42 கோடி account-ல் போட்ட நிறுவனம், தலைமறைவான ஊழியர் : ஓர் அடடே சம்பவம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com