துபாய், போர்த்துகல், சுவிட்சர்லாந்து, கனடா போன்ற நாடுகள் மற்ற நாட்டவர்களுக்கு கோல்டன் விசா என்ற ஒரு வகை விசாவை வழங்குகிறது.
கோல்டன் விசா என்பது ஒரு நாட்டில் வசிப்பதற்காக கணிசமான தொகையை முதலீடு செய்து குடியுரிமை பெறுவது எனலாம். இது பெரும்பாலும் பணக்காரர்களுக்கு வழங்கப்படும் ஒரு வகையான மானியமாகும். அரசாங்கங்கள் தங்களுடைய வரி தளத்தை விரிவுபடுத்த கோல்டன் விசாவைப் பயன்படுத்துகின்றன.
பணக்காரர்கள் மட்டும் என்றில்லாமல், எல்லாருமே இந்த கோல்டன் விசாவை பெறும் படி, சில நாடுகள், மிகவும் குறைவான தொகையை வசூலிக்கின்றன. அவை என்னென்ன நாடுகள்? எவ்வளவு தொகை? விசா வாங்குபவர்களுக்கு என்ன லாபங்கள்? இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்
இங்கு பல விதமான தாய்லாந்து எலீட் விசாக்கள் உள்ளன (Elite Visa), ஒவ்வொன்றிற்கும் ஒரு ஒரு விதமான வி ஐ பி சலுகைகள் உள்ளன. அவற்றில் ஒன்று, 13 லட்சம் ரூபாய் கொடுத்து நாம் பெறக்கூடிய விசா. இது ஐந்து ஆண்டுகள் Multiple-entry விசா ஆகும். மேலும் ஒவ்வொரு நுழைவுக்கும் ஒரு வருடம் வரை நீட்டித்துக்கொள்ளலாம்.
Multiple-entry Visa:
மல்டிபிள்-என்ட்ரி விசா என்பது, புதிய விசா அல்லது பயணப் பதிவுக்கு விண்ணப்பிக்காமலேயே அது செல்லுபடியாகும் காலத்தில் அந்த நாட்டுக்கு பலமுறை சென்று வெளியேற அனுமதிக்கிறது.
கரீபிய நாடான கிரெனெடா இரண்டு விதமான கோல்டன் விசா ஆப்ஷன்களை நமக்கு வழங்குகிறது.
ரூ.1.24 கோடி செலுத்தி நாம் இங்கு கோல்டன் விசாவுக்கு விண்ணப்பித்தால், மூன்று முதல் நான்கு மாதங்களில் நமக்கு விசா கைக்கு வந்துவிடுகிறது.
இதனை பயன்படுத்தி 140 நாடுகளுக்கு பயணிக்கலாம், உடன்பிறந்தவர்கள், நமது குறிப்பிட்ட குடும்பத்தினரை அழைத்துச் செல்லலாம் போன்ற வசதிகள் உண்டு
இங்கு கோல்டன் விசா பெற ரூ.35 லட்சம் கட்டணம் செலுத்தவேண்டும். செலுத்தி நாம் விசாவை பெற்றால், ஆஸ்த்ரியா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஷென்கென் ஏரியா போன்ற இடங்களுக்கு இலவசமாக செல்லலாம். அதன் பிறகு 10 ஆண்டுகள் கழித்து அந்த ஊரின் குடியுரிமையை பெறலாம்
இங்கு நாம் கோல்டன் விசா பெற ரூ.69,69,733 ரூபாய் செலுத்தவேண்டும். அப்படி பெறுகிற விசாவை பயன்படுத்தி ஐரோப்பிய ஒன்றியத்தின் ஷென்கென் ஏரியாவில் இலவசமாக பயணிக்கலாம். 10 ஆண்டுகள் தங்கியிருந்த பின்னர் குடியுரிமைக்கு விண்ணப்பம் செய்ய நாம் தகுதி பெறுகிறோம்
ரூ.83,19,590 செலுத்தி இங்கு கோல்டன் விசா பெற்று குடியுரிமையை நாம் பெறலாம். இங்கு நம்முடன் சேர்த்து நமது இணை (spouse), குழந்தைகள், 18 வயதுக்கு கீழ் இருக்கும் உடன்பிறந்தவர்கள், 55 வயதுக்கு மேல் இருக்கும் பெற்றோர்களை நமது சார்ந்தவர்கள் என்ற பட்டியலில் வைத்து சலுகைகள் பெறலாம். இரட்டை குடியுரிமை பெறும் வாய்ப்பும் உள்ளது
இங்கு குடியுரிமை பெற நாம் எந்தவிதமான கட்டணமும் செலுத்த தேவையில்லை. நமக்கும், நமது இணைக்கும், 18 வயதுக்கு கீழ் இருக்கும் நமது திருமணமாகாத குழந்தைகளுக்கும் சலுகைகளை நாம் பெறலாம். நாம் தேர்ந்தெடுக்கும் குடியுரிமை வகையை பொறுத்து வேலை மற்றும் கல்விக்கான உரிமையும் நாம் இங்கு பெற்றுக்கொள்ளலாம்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust