பூடான் to பிரான்ஸ்: இந்தியர்கள் எந்தெந்த நாடுகளில் UPI மூலம் பணம் செலுத்தலாம்தெரியுமா?

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களும் தங்களின் சர்வதேச எண்களைப் பயன்படுத்தி விரைவில் யுபிஐ மூலம் பண வரித்தனை மேற்கொள்ளலாம். எந்தெந்த நாடுகளில் என்று இங்கே தெரிந்துகொள்ளலாம்.
countries where indian travellers can pay through upi
countries where indian travellers can pay through upiTwitter
Published on

சிறிய கடைகளில் கூட டிஜிட்டல் பண பரிமாற்றம் தான் நடக்கிறது. மக்கள் கையில் பணம் செலுத்துவதை விட டிஜிட்டல் முறையை தான் அதிகம் பயன்படுத்துகின்றனர்.

வங்கிகளின் வாசலிலும், ஏடிஎம் வாசல்களிலும் லையனில் நிற்காமல் நொடி பொழுதில் பணத்தை அனுப்புவதற்கும், பெறுவதற்கும் சிறந்த வழியாக உள்ளது டிஜிட்டல் பண பரிவர்த்தனை.

கூகுள் பே, போன் பே என யுபிஐ பரிமாற்றத்தின் மூலம் பணத்தை எளிதில் அனுப்பி கொள்கிறோம்.

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களும் தங்களின் சர்வதேச எண்களைப் பயன்படுத்தி விரைவில் யுபிஐ மூலம் பண வரித்தனை மேற்கொள்ளலாம். எந்தெந்த நாடுகளில் என்று இங்கே தெரிந்துகொள்ளலாம்.

BHIM செயலி மூலம் UPI ஐ ஏற்றுக்கொண்ட முதல் நாடுகளில் பூடானும் ஒன்றாகும்.

சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், வியட்நாம், கம்போடியா, ஹாங்காங், தைவான் உட்பட வடக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள 10 நாடுகளில் QR-அடிப்படையிலான UPI கட்டணங்களை அனுமதிப்பதற்காக NPCI இன்டர்நேஷனல் பேமெண்ட்ஸ் (NIPL) லிக்விட் குழுமத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது.

தென் கொரியா மற்றும் ஜப்பான் விரைவில் இதில் இணையவுள்ளது.

countries where indian travellers can pay through upi
உலகம் முழுவதும் பயணிக்க இவர்களுக்கு மட்டும் பாஸ்போர்ட் தேவையில்லையா? யாருக்கு இந்த சலுகை?
France
FranceCanva

அக்டோபர் 2022 முதல் ஓமன் UPI ஐ ஏற்கத் தொடங்கியது. UPI ஐ அதன் கட்டண முறைகளுடன் இணைக்க NPCI உடன் கைகோர்த்தது.

சமீபத்தில் பிரான்ஸில் இருந்த பிரதமர் மோடி, இதை அறிவித்தார். இந்திய பயணிகள் பிரான்சில் UPI மூலம் பணம் செலுத்த முடியும். இந்தியர்கள் விரைவில் ஈபிள் கோபுரத்தில் கூட ரூபாய்களில் பணம் செலுத்த முடியும் என்று அவர் கூறினார்.

countries where indian travellers can pay through upi
1 ரூபாய்க்கு இவ்வளவு மவுசா? இந்திய ரூபாய்க்கு அதிக மதிப்பு கொடுக்கும் நாடுகள் தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com