பூமியில் கிடைத்ததா ஏலியன் கைகள்? - மர்ம பொருளின் பின்னணி என்ன?

அவர்கள் அந்த கையை வீடியோவாக வெளியிட்டனர். அந்த வீடியோவில் அதனை இல்ஹா காம்ப்ரிடா கடற்கரையில் கண்டெடுத்ததாகவும் அது ஏலியனின் கைகளாக இருக்கலாம் என்றும் பேசியிருந்தனர்.
பூமியில் கிடைத்ததா ஏலியன் கைகள்? - மர்ம பொருளின் பின்னணி என்ன?
பூமியில் கிடைத்ததா ஏலியன் கைகள்? - மர்ம பொருளின் பின்னணி என்ன?Twitter
Published on

லெடிசியா கோம்ஸ் சன்டியாகோ (Leticia Gomes Santiago) என்ற பெண்ணும் அவரது காதலரான டெவனைர் சாவ்சா என்பவரும் கடற்கரையில் கண்டெடுத்த கையின் எலும்புக்கூடு இணையத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ரொமான்டிக்காக கடற்கரையில் சுற்றித்திரிந்த போது பயங்கரமான அந்த எலும்புக்கூட்டைக் கண்டெடுத்துள்ளனர் அந்த தம்பதி. அது மிக நீளமான கைகளைப் போல இருந்தது.

அவர்கள் அந்த கையை வீடியோவாக வெளியிட்டனர். அந்த வீடியோவில் அதனை இல்ஹா காம்ப்ரிடா கடற்கரையில் கண்டெடுத்ததாகவும் அது ஏலியனின் கைகளாக இருக்கலாம் என்றும் பேசியிருந்தனர்.

அந்த கை நம் உலகத்தைச் சார்ந்த உயிரினத்துடையது தானா? அல்லது ஆழ்கடலில் வாழும் அரியவகை உயிரினமா? என்ற கேள்வி அந்த ஜோடிக்கும் எழுந்தததால் இது குறித்து விளக்கம் தருமாறு சமூக வலைத்தளத்தில் கேட்டுக்கொண்டனர்.

நெட்டிசன்கள் தங்களது கற்பனைக் குதிரையைத் தட்டிவிட இது டைனோசர் எலும்பு, எட்டியின் எலும்பு என பலரும் பல கருத்தைக் கூறினர்.

அந்த கை வினோதமாக இருக்கிறது இதனை உயிரியல் ஆராய்ச்சியாளர்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்றும் சிலர் கூறினர்.

பூமியில் கிடைத்ததா ஏலியன் கைகள்? - மர்ம பொருளின் பின்னணி என்ன?
மரணமே இல்லாத உயிர்கள் 1: வயதாவதால் இறப்பது உறுதியா?- மரணத்தை கடந்து வாழும் ஜெல்லி மீன்கள்!

எரிக் கோமின் (Eric Comin) என்ற கடல்வாழ் உயிரியல் ஆய்வாளர், இது டால்பினின் எலும்பு என்று உறுதியாகக் கூறினார். அத்துடன் இது இறந்து 18 மாதங்கள் இருக்கும் என்றும் தெரிவித்தார்.

மேலும் இது போன்ற விலங்குகளின் எச்சங்களைப் பார்க்கும் போது அந்த நாட்டின் ஆய்வு மையமான Cananéia Research Institute (IPEC)-க்கு தகவல் கொடுக்கலாம் என்றும் கூறினார்.

IPEC செய்தி தொடர்பாளர் ஹென்ரிக் சுபில், "இதுபோன்ற எலும்புகளைக் கடற்கரையிலேயே விட்டுவிடலாம். இது அந்த சுற்றுசூழலின் ஊட்டச்சத்துக்களை சீராக வைத்திருக்க உதவும்" என்றார்.

பூமியில் கிடைத்ததா ஏலியன் கைகள்? - மர்ம பொருளின் பின்னணி என்ன?
குரங்களுக்கு சொத்துரிமை அளித்துவரும் வினோத கிராமம்! - பாரம்பரியத்தை இழக்கிறதா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com