மரணமே இல்லாத உயிர்கள் 1: வயதாவதால் இறப்பது உறுதியா?- மரணத்தை கடந்து வாழும் ஜெல்லி மீன்கள்!

மனிதர்கள் குழந்தை பருவத்துக்கு திரும்பிச் செல்ல விருப்பப்படுவது போல இது தன்னுடைய வாழ்க்கையை முடித்துக்கொள்ளாமல் மீண்டும் முதல் பகுதிக்கு திரும்புகிறது.
மரணமே இல்லாத உயிர்கள் 1: மரணம் நிச்சயமானதா?- மரணத்தை கடந்து வாழும் அதிசய ஜெல்லி மீன்கள்!
மரணமே இல்லாத உயிர்கள் 1: மரணம் நிச்சயமானதா?- மரணத்தை கடந்து வாழும் அதிசய ஜெல்லி மீன்கள்!Twitter
Published on

நாம் அதிகபட்சமாக 20 வயது வரை இன்னும் வளரவும், பெரிய மனிதராகவும் விரும்பியிருப்போம். அதற்கடுத்த ஒவ்வொரு ஆண்டும் வரும் பிறந்தநாட்கள் வயதாகிறதே என்ற கவலையை தான் ஏற்படுத்தும்.

குழந்தை பருவத்துக்கோ அல்லது இளமைப் பருவத்துக்கோ திரும்ப வேண்டும் என்பது நம்மில் பலரது நிறைவேறாத ஆசையாகும்.

வயது முதிர்வு குறித்து நாம் சலித்துக்கொள்ள முக்கியக் காரணம் மரணம். யாரு மரணத்தை விரும்புவதில்லை தானே!

மரணம் பல வழிகளில் ஏற்படுகிறது. இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலான மரணங்கள் நோய் தாக்கத்தால் தான் நடக்கின்றன. விபத்துகள், கொலைகள் என காரணங்கள் நீளுகின்றன. ஆனால் வயது மூப்பு மனிதர்களில் மரணத்துக்கு ஒரு காரணமாக இருப்பது ஏன் எனத் தெரியுமா?

வயது மூப்புக்கு அறிவியலில் senescence என்று பெயர். நம் உடல் குறிப்பிட்ட அளவு வளரும் வரை நம் செல்கள் பிரிந்து பெருகுகின்றன. இந்த பிரிதல் நிகழ்வு நின்ற பின்னர் செல்கள் ஒவ்வொன்றாக தேய்மானமடைந்து இறக்கின்றன.

இதனால் மொத்த செல்களும் அல்லது ஒரு குறிப்பிட்ட உறுப்பு அல்லது குறிப்பிட்ட தசை செயலிழக்கிறது. இப்படியாக வயது மூப்புக்கு பின்னர் மரணம் நிகழ்கிறது.

வயது முதிர்வதை நம்மால் தள்ளிப்போட நிசசயம் முடியும் ஆனால் அது சுலபமானதும் அல்ல, அதனால் பெரிய பயன்களும் கிடைக்கப் போவதில்லை.

மனிதர்கள் வயது மூப்பிலிருந்து தப்பிக்க முடியாத அளவு அதிர்ஷடமற்றவர்களாக உள்ளனர். சில உயிர்கள் வயது முதிர்ந்து மரணிப்பதில்லை. சிரஞ்சீவிகளாக இந்த உலகத்தில் என்றென்றும் வாழும் உயிர்களை பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

மரணமே இல்லாத உயிர்கள் 1: மரணம் நிச்சயமானதா?- மரணத்தை கடந்து வாழும் அதிசய ஜெல்லி மீன்கள்!
பூச்சிகளை உண்ணும் அரிய வகை தாவர இனம் : பல ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிப்பு - எங்கு? எப்படி?

Turritopsis dohrnii - மரணமே இல்லாத ஜெல்லி மீன்

 Turritopsis dohrnii - மரணமே இல்லாத ஜெல்லி மீன்
Turritopsis dohrnii - மரணமே இல்லாத ஜெல்லி மீன்

இது ஒரு நிறமற்ற ஜெல்லி வகை மீன் ஆகும். அளவில் சிறியதான இது ஆழ்கடலில் திரிந்துகொண்டிருக்கும். உயிரியல் ரீதியில் மரணமே இல்லாத உயிரினம் இதுதான்! மனிதர்கள் குழந்தை பருவத்துக்கு திரும்பிச் செல்ல விருப்பப்படுவது போல இது தன்னுடைய வாழ்க்கையை முடித்துக்கொள்ளாமல் மீண்டும் முதல் பகுதிக்கு திரும்புகிறது.

சிறிய கருவாக இதன் வாழ்க்கை தொடங்குகிறது. அந்த லார்வா நிலைக்கு லனுலா (planula) என்று பெயர். இந்த லார்வா வண்ணத்துப்பூச்சி உருவாவதற்கு முன்னர் புழு குளத்தில் அடைபடுவது போல தரையில் மூடிக்கொள்கிறது. அங்கிருந்து benthic polyps உருவாகிறது. இது தரையில் நிலைத்திருக்கும், இதன் உச்சியில் வாய் இருக்கும். தாவரம் போன்ற இதிலிருந்து தான் ஜெல்லி மீன்கள் வாழ்வின் அடுத்த கட்டமான ephyra உருவாகிறது. ephyra வளர்ந்து medusa என்ற மூப்பான இனப்பெருக்கம் செய்யும் திறன் கொண்ட ஜெல்லி மீன்கள் உருவாகிறது.

Turritopsis dohrnii -யின் வாழ்க்கை சுழற்சி
Turritopsis dohrnii -யின் வாழ்க்கை சுழற்சி

medusa நிலையை மனிதர்களுக்குப் பொருத்தினால் இதன் பின்னர் தேய்மானம் அடைந்து மரணம் ஏற்பட்ட வேண்டும். ஆனால் இவற்றுக்கு அவ்வாறு ஏற்படுவதில்லை! மாறாக இவை அதற்கு மேல் வளராமல் நிலைத்திருக்கும். காயம் காரணமாகவோ அல்லது உணவு இல்லாமல் போகும் சூழலியல் அழுத்தம் காரணமாகவோ இவை பாதிக்கப்படடால் மீண்டும் சிறிய திசுவாக மாறி லார்வா நிலைக்குத் திரும்புகின்றன.

இவ்வாறு இந்த ஜெல்லி மீன்கள் மரணமற்றவையாக இருக்கின்றன. இவற்றை மற்ற உயிரினங்கள் தாக்கி கொல்லலாம், ஆனாலும் மீண்டும் லார்வாவாக மாறும் திறனால் இவை அழியாமலிருக்கின்றன.

மரணத்தை கடந்த உயிர்கள் பிரபஞ்ச்சத்தின் பிரமிப்புகள்! அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் தங்களை தக்கவைத்துக்கொள்கின்றன.

மரணமே இல்லாத உயிர்கள் 1: மரணம் நிச்சயமானதா?- மரணத்தை கடந்து வாழும் அதிசய ஜெல்லி மீன்கள்!
உணவகத்திற்கு சென்றவருக்கு கிடைத்த அதிசய பொருள் - டைனோசர் கால்தடமா? ஆராய்ச்சி சொல்வதென்ன?

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com