Harry Potter: ஏலத்திற்கு வரும் ஹாரி பாட்டர் கண்ணாடி; விலை என்ன தெரியுமா?

கதையின்படி கண்ணாடி அணிந்திருக்கும் இவருக்கு கிட்ட தட்ட 100 கண்ணாடிகள் சோதிக்கப்பட்டது. அவற்றிலிருந்து 57 கண்ணடிகள் முதல் பாகமான ஹாரி பாட்டர் அண்ட் தி சர்சரர்ஸ் ஸ்டோன் படத்திற்கு ஆர்டர் செய்யப்பட்டது.
Harry Potter
Harry Potter Twitter
Published on

பிரபல குழந்தைகள் ஃபேன்ட்டசி படமான ஹாரி பாட்டரில், கதாநாயகனாக வந்த டேனியல் ராட்க்ளிஃப் அணிந்த கண்ணாடி வரும் நவம்பர் 11ஆம் தேதி ஏலத்திற்கு வருகிறது. 

ஹாரி பாட்டர் திரைப்படம் எழுத்தாளர் ஜே கே ரவுலிங் எழுதிய ஹாரி பாட்டர் புத்தகத்தை மையமாக  கொண்டு எடுக்கப்பட்டது. அவர் எழுதிய 6 பாகங்கள் மொத்தம் 7 படங்களாக வெளியானது. 

நடிகர்கள் டேனியல் ராட்க்ளிஃப், ரூபர்ட் கிரின்ட், எம்மா வாட்சன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 

Harry Potter
ஏலத்தில் வென்ற சோபா; ரசிகர்களிடம் அழுதபடி பண உதவி கேட்ட Content Creator- ஏன்?
Harry Potter - Ron Weasley - Hermoine Granger
Harry Potter - Ron Weasley - Hermoine GrangerTwitter

இந்த திரைப்படம், இன்றளவும் குழந்தைகள் மனதை கவரும் வகையில்  மாயாஜால மந்திர தந்திரங்கள் நிறைந்திருக்கும்.  ஹாரி பாட்டர் என்ற சிறுவனை,  வோல்டர்மோர்ட் என்பவன் கொலை செய்ய முயற்சிப்பதும்,  ஹாரியை சுற்றியுள்ள அனைவரும் அவனை காப்பாற்ற முன்வருவதும் தான் கதை. 

தாய் தந்தையை இழந்த 11 வயது சிறுவன், எப்படி ஹாக்வார்ட்ஸ் ஸ்கூல் ஆஃப் மேஜிக்கில் இணைகிறான், வோல்டர்மோர்ட்டை வெல்கிறானா என்பது தான் 7 பாகங்களின் கதை

Harry Potter
Harry PotterTwitter

இதில் டேனியல் ரேட்க்ளிஃப் ஹாரி பாட்டர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கதையின்படி கண்ணாடி அணிந்திருக்கும் இவருக்கு கிட்ட தட்ட 100 கண்ணாடிகள் சோதிக்கப்பட்டது. அவற்றிலிருந்து 57 கண்ணடிகள் முதல் பாகமான  ஹாரி பாட்டர் அண்ட் தி சர்சரர்ஸ் ஸ்டோன் படத்திற்கு ஆர்டர் செய்யப்பட்டது.

அந்த 57 கண்ணாடிகளில் ஒன்று தான் தற்போது ஏலத்திற்கு வரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கண்ணாடி 20,000 பிரிட்டிஷ் பவுண்ட் அல்லது 22 ஆயிரம் அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்படும்  என  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த ஹாரி பாட்டர் தொடர் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அதனை அங்கீகரிக்கும் விதமாக  50 பவுண்ட் ஹாரி பாட்டர் நாணயங்கள் வெளியிடப்பட்டது  குறிப்பிடத்தக்கது

Harry Potter
Harry Potter வெள்ளி விழாவைக் கொண்டாட நாணயம் வெளியிட்டு அசத்திய அரசு!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com