கல்லறைகள் மட்டும் இருக்கும் கிராமம்; மர்மத்தால் மறைந்திருக்கும் மலைப்பகுதி - பின்னணி என்ன?

இங்கு சில கல்லறைகளில் படகுகள் இருப்பதை ஆரய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இறந்தவர்கள் சொர்க்கத்தை அடைய இந்த படகு உதவியதாக இந்த மக்கள் நம்பியுள்ளனர். ஆகவே இறந்த மக்களை படகில் வைத்து புதைத்துள்ளனர்.
Dargavs Village:  the eerie City of the Dead located in Russia
Dargavs Village: the eerie City of the Dead located in RussiaTwitter

இந்த உலகம் பல மர்மங்கள், அதிசயங்கள் நிறைந்தது. அப்படி ஒரு மர்மமான பகுதியை பற்றித்தான் தெரிந்துகொள்ளபோகிறோம்.

ரஷ்யாவில் இறந்தவர்களின் கிராமம் என ஒரு பகுதி உள்ளது பற்றி உங்களுக்கு தெரியுமா? வாருங்கள் விரிவாக படிக்கலாம்.

ரஷ்யாவின் வடக்கு ஒசேஷியாவில் உள்ள மலைப்பகுதி தற்போது மிகவும் வெறிச்சோடி காணப்படுகின்றது. இங்கு நிலவும் பயத்தாலும் மர்மத்தாலும் யாரும் வருவதில்லை.

இந்த உயரமான மலைகளுக்கு நடுவே 99 கல்லறைகள் உள்ளதாக கூறப்படுகிறது. உள்ளூர் மக்கள் இறந்துபோன தங்கள் உறவினர்களை இங்கு அடக்கம் செய்ததால் இங்கு கல்லறை உருவானதாக கூறப்படுகிறது.

இந்த இடத்தை அடைவதற்கான வழியும் மிகவும் கடினம். மலைகளுக்கு இடையிலான குறுகிய பாதைகள் வழியாக இங்கு செல்ல சுமார் மூன்று மணி நேரம் ஆகும்.

இங்கு எப்போதும் மோசமான வானிலை நிலவும். இது பயணத்திற்கு பெரும் தடையாக இருக்கிறது.

Dargavs Village:  the eerie City of the Dead located in Russia
Roopkund: மனித எலும்புக்கூடுகளால் நிறைந்திருக்கும் ஏரி- மர்ம பின்னணி என்ன? திக்திக் வரலாறு

இங்கு உள்ள கல்லறைகளுக்கும் ஒரு கதை உள்ளது. ஒவ்வொரு கல்லறைகளும் ஒரு குடும்பம் அல்லது குலத்திற்காக அர்ப்பணிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

மேலும் இங்கு உள்ள மக்களிடையே ஒரு பொதுவான நம்பிக்கை உள்ளது. அதன்படி இறந்தவர்கள் சொர்க்கத்தை அடைய நதி வழியே செல்ல வேண்டும் என இந்த மக்கள் நம்புகின்றனர்.

இங்கு சில கல்லறைகளில் படகுகள் இருப்பதை ஆரய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இறந்தவர்கள் சொர்க்கத்தை அடைய இந்த படகு உதவியதாக இந்த மக்கள் நம்பியுள்ளனர். ஆகவே இறந்த மக்களை படகில் வைத்து புதைத்துள்ளனர்.

அதே போல் ஆரய்ச்சியாளர்கள் பல கல்லறைகள் முன்பும் ஒரு கிணறு இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். கல்லறையில் தங்கள் உறவினர்களை அடக்கம் செய்த பின்னர் கிணற்றில் நாணயங்களை வீசுவார்களாம்.

நாணயங்கள் கீழே இருக்கும் கற்களுடன் மோதினால் அவர்களின் ஆன்மா சொர்க்கத்தை அடையும் என நம்புகின்றனர்.

ரஷ்யாவிலிருக்கும் இந்த வித்தியாசமான கலாச்சாரம் குறித்து வெளியுலகிற்கு பெரிய அளவில் தெரிவதில்லை எனவே, உலகின் மிக மர்மமான பகுதியாக இது கருதப்படுகிறது.

Dargavs Village:  the eerie City of the Dead located in Russia
சென்னை : தனியாக செல்ல கூடாத Spots - அமானுஷ்யங்கள் நிறைந்த இடங்கள் பற்றி தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com