அமெரிக்காவின் மரணப் பள்ளத்தாக்கு தேசிய பூங்கா பற்றி நாம் அனைவருமே அறிந்திருப்போம்.
பயணங்களையும், புதிய இடங்களை அறிதலையும் விரும்புபவர்கள் வாழ்வில் ஒருமுறை பார்த்துவிட வேண்டும் என நினைக்கும் மரணப்பள்ளத்தாக்கில் தான் இந்த தானாக நகரும் வினோத பாறைகள் இருக்கின்றன.
கலிபோர்னியாவில் உள்ள மரணப்பள்ளத்தாக்கு உலகிலேயே வெப்பமான இடங்களில் ஒன்று. வட அமெரிக்காவிலேயே வறண்ட இடமென்றும் இதனைக் குறிப்பிடுகின்றனர்.
இங்கு பிளேயா என அழைக்கப்படும் வறண்ட ஏரி உள்ளது. இதற்கு ரேஸ்ட்ராக் என்ற பெயரும் இருக்க காரணம் இருக்கிறது.
இவற்றையும் வாசித்து பாருங்கள்
இதுவும் நம் பூமி தான் : ’நம்புங்க மக்கா’ வேற்று கிரகம் போல தோற்றமளிக்கும் 5 இடங்கள்
Travel: டார்ஜிலிங் முதல் சுந்தர்பன்ஸ் வரை - மேற்கு வங்கத்தில் மிஸ் செய்யக் கூடாத இடங்கள்
Himachal Pradesh : குளிர் காலத்தில் சுற்றிப் பார்க்க வேண்டிய 10 அட்டகாச இடங்கள்
வறண்ட அந்த நிலத்தில் பந்தையம் செய்யும் பாறைகளை பின்னிருந்து தள்ளவோ அல்லது முன்னிருந்து இழுக்கவோ எந்த விசையும் கிடையாது. ஆனால் இந்த பாறைகள் எப்படி நகர்கின்றன?
200 கிலோ வரை எடைக்கொண்ட கற்கள் கூட இந்த ரேஸில் பங்கேற்கின்றன. 1000 அடி வரை கற்கள் நகர்ந்த தடயத்தை விட்டுச் செல்கின்றன.
இந்த நகரும் பாறைகளுக்கு பின்னால் பல புராண கதைகள் கட்டப்பட்டன. பலரும் இந்த பாறைகளை ஏலியன்களுடன் தொடர்புபடுத்தினர்.
இந்த பாறைகள் நகருவதை 2014ம் ஆண்டு வரை கண்ணால் பார்த்தவர்கள் யாருமில்லை.
ஏனென்றால் இந்த பாறைகள் எப்போதும் நகர்வதில்லை. சில சிறப்பு தருணங்களில் மட்டுமே இவை அசைகின்றன.
குறிப்பாக மழைக்கு அடுத்த குளிர்காலத்தில் இந்தப் பாறைகள் அதிகமாக நகருகின்றன. அந்த காலத்தில் பிளேயா ஆற்றின் மேல் பனிப் பொழிவு ஏற்பட்டிருக்கும்.
அப்போது பலத்த காற்று வீசினாலும் அதனால் பெரும்பாறையை நகர்த்த முடிகிறது.
ஏதாவது ஒரு ஆண்டில் காலநிலைத் தவறினாலும் இந்த பாறைகள் ஒரு இன்ச் நகர்த்துவது கூட முடியாத காரியமாகிவிடும்.
டிசம்பர் மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு இடைப்பட்ட நாட்களில் பிளேயா ஏரியைப் பார்வையிடலாம்.
பாறைகள் நகருவதைக் கண்கூடாக பார்ப்பதற்கான வாய்ப்புகள் குறைவு தான் என்றாலும், அந்த பாறைகள் நகர்ந்து வந்த அழகான பாதையைக் காணமுடியும்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust