டென்மார்க் : ஒரே இடத்தில் சேமிக்கப்பட்டிருக்கும் 10,000 மனித மூளைகள் - ஏன் தெரியுமா?

அந்த காலத்தில் மனநல நோயாளிகளுக்கு எந்த உரிமையும் இல்லாததால் இறந்த பின்னர் அவர்களது உறுப்பு எடுக்கப்படுவது குறித்து அவர்களிடம் தெரிவிக்கப்படவில்லை. எந்த அனுமதியும் பெறவில்லை.
10000 மனித மூளைகள் வைக்கப்பட்டிருக்கும் ஒரு இடம் - ஏன் தெரியுமா?
10000 மனித மூளைகள் வைக்கப்பட்டிருக்கும் ஒரு இடம் - ஏன் தெரியுமா?Twitter
Published on

மனித மூளை இயற்கையின் அதிசயங்களில் ஒன்று.

மனிதன் யானையைப் போல சக்தி வாய்ந்தவனாக, புலியைப் போல ஆற்றல் மிக்கவனாக இல்லாமல் இருந்தாலும் அனைத்து உயிர்களையும் கட்டுப்படுத்தும் சக்திக்கொண்டவனாக இருக்க காரணம் அந்த மூளை தான்.

இந்த அதிசயமான மூளை ஒன்றல்ல இரண்டல்ல கிட்டத்தட்ட 9,479 மூளைகள் டென்மார்க்கில் உள்ள தெற்கு டென்மார்க் பல்கலைக்கழகத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.

மனித மூளைகள் பற்றி ஆராய்ச்சி செய்ய பெரிய தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத காலத்தில் வருங்கால ஆராய்ச்சிகளுக்கு பயன்படுத்தப்படலாம் என இந்த மூளைகள் சேமித்து வைத்திருக்கின்றனர்.

பார்மால்டிகைடு என்ற வேதிப்பொருள் மூலம் இதைக் கெடாமல் பாதுகாக்கின்றனர்.

இந்த மூளைகள் 1945 ஆம் ஆண்டு முதல் 1980 வரை சேமிக்கப்பட்டிருக்கின்றன. பிரேதப் பரிசோதனை முடிந்த உடன் இந்த மூளைகள் தனியாக எடுத்துவைக்கப்பட்டிருக்கின்றன.

இந்த மூளைகளை நோயாளிகளிடம் இருந்து தனியாக எடுத்து வைக்க எந்த அனுமதியும் பெறவில்லையாம்.

குறிப்பாக இந்த மூளைகள் மனநல நோயாளிகளினுடையதாக இருக்கின்றன.

ஏனெனில் மனநல நோயாளிகளுக்கு அந்த காலத்தில் எந்த உரிமையும் இல்லை. ஆய்வகத்தின் உள்ளே நடப்பது குறித்து யாரும் வெளியில் யாருக்கும் தெரியாது. இப்போது இருக்கும் விழிப்புணர்வும் அப்போது கிடையாது.

நோயாளிகளுக்கு அனுமதி இல்லாமலே பல சிகிச்சைகள் வழங்கப்பட்டன.

இறந்தவர்களின் மூளைகளை வெள்ளை வாளியில் போட்டு சேமித்திருக்கின்றனர்.

10000 மனித மூளைகள் வைக்கப்பட்டிருக்கும் ஒரு இடம் - ஏன் தெரியுமா?
சாவதற்கு முன்பு நம் மூளை என்ன நினைக்கும் தெரியுமா? - புதிய ஆய்வு

இப்படி மூளையை சேமிப்பது கேள்விகளை எழுப்பியது மிகவும் சர்ச்சைக்குரியதாகவும் இருந்தது. 1990ம் ஆண்டு மனித மூளைகளை ஆராய்ச்சிக்கு பயன்படுத்தலாம் என டேனிஷ் நெறிமுறைகள் கவுன்சில் தீர்பளித்தது.

இந்த தீர்ப்பு மூலம் மூளையை பயன்படுத்தி ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

டிமென்ஷியா, மன அழுத்தம் போன்ற பல்வேறு நோய்கள் தொடர்பாக ஆராய்ச்சி செய்வதற்கு இந்த மூளைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும், தற்போது 4 ஆய்வுகளுக்கு இந்த மூளைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

10000 மனித மூளைகள் வைக்கப்பட்டிருக்கும் ஒரு இடம் - ஏன் தெரியுமா?
Health: மீன், முட்டை, நட்ஸ் - மூளை நலனைக் காக்க எந்த உணவுகள் சிறந்தது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com