ரூ.74 கோடி ஸ்காலர்ஷிப்; 170 கல்லூரிகள் வரவேற்கும் 16 வயது சிறுவன் - யார் இந்த டென்னிஸ்?
ரூ.74 கோடி ஸ்காலர்ஷிப்; 170 கல்லூரிகள் வரவேற்கும் 16 வயது சிறுவன் - யார் இந்த டென்னிஸ்?Twitter

ரூ.74 கோடி ஸ்காலர்ஷிப்; 170 கல்லூரிகள் வரவேற்கும் 16 வயது சிறுவன் - யார் இந்த டென்னிஸ்?

டென்னிஸ் அதிக பல்கலைக்கழங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதனால் அவரது இந்த சாதனை கின்னஸ் உலகசாதனைகள் பட்டியலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
Published on
நம் பள்ளிக்கும் கல்விக்கும் முன்னுரிமை அளித்து கடவுளுக்கு நெருக்கமாக இருந்தால் எல்லாமும் நன்றாகவே நடக்கும்

பள்ளியில் கல்லூரிக்கு செல்வது உலகம் முழுவதுமுள்ள மாணவர்களுக்கு கடினமான சூழலாகதான் இருக்கும்.

எந்த பாடத்தைத் தேர்ந்தெடுப்பது? எந்த கல்லூரியைத் தேர்ந்தெடுப்பது? என்பதில் குழப்பம் இருக்கும். பெரும்பாலான மாணவர்களுக்கு அவர்களின் கனவு கல்லூரியில் படிக்க முடியாமல் போகக்கூடும்.

ஆனால் டென்னிஸ் மாலிக் பார்ன்ஸின் கதை வேறுவிதமானது.

லூசியானாவில் உள்ள பள்ளியில் படிக்கும் டென்னிஸின் விண்ணப்பத்தை 170 கல்லூரிகள் வரவேற்றுள்ளன.

இதுதவிர, அவருக்கு 9 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஊக்கத் தொகையும் கிடைத்துள்ளது. இந்திய மதிப்பில் 74 கோடி ரூபாய்.

"நான் அதிகமான கல்லூரிகளுக்கு விண்ணப்பித்திருந்தேன். என்னுடைய எண் மேலே வந்தது. எனக்கு வந்த நிதி உதவிகளும் பல்கலைக்கழகங்களின் அனுமதியும் ஆர்வமூட்டியது" என ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் டென்னிஸ் கூறியுள்ளார்.

ரூ.74 கோடி ஸ்காலர்ஷிப்; 170 கல்லூரிகள் வரவேற்கும் 16 வயது சிறுவன் - யார் இந்த டென்னிஸ்?
18 வயதில் MBBS, 22-ல் IAS அதிகாரி, இப்போது கோடிகளில் சம்பாதிக்கும் தொழிலதிபர்- யார் இவர்?

டென்னிஸ் அதிக பல்கலைக்கழங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதனால் அவரது இந்த சாதனை கின்னஸ் உலகசாதனைகள் பட்டியலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

டென்னிஸ் பார்ன்ஸுக்கு அதிகமான வரவேற்பு இருப்பதைப் பார்த்து பள்ளி நிர்வாகம் பெருமைப்படுவதாக பள்ளியின் சார்பில் கிளார்க் கேஸ்டல் தெரிவித்துள்ளார்.

டென்னிஸ் இறுதியாக, "நம் பள்ளிக்கும் கல்விக்கும் முன்னுரிமை அளித்து கடவுளுக்கு நெருக்கமாக இருந்தால் எல்லாமும் நன்றாகவே நடக்கும்" எனக் கூறியுள்ளார்.

ரூ.74 கோடி ஸ்காலர்ஷிப்; 170 கல்லூரிகள் வரவேற்கும் 16 வயது சிறுவன் - யார் இந்த டென்னிஸ்?
கணிதத்தில் 31 மார்க், மற்ற பாடங்களில் ஜஸ்ட் பாஸ் - வைரலாகும் IAS அதிகாரியின் மார்க் ஷீட்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com