உலகம் முழுவதும் பரபரப்பான பேசு பொருளாக உருவாகியிருக்கிறது டைட்டானிக் கப்பலைக் காணச் சென்ற 5 பேரின் மரணம்.
ஓஷன் கேட் என்ற நிறுவனத்தின் டைட்டன் என்ற கப்பலில் 2.5 கோடி ரூபாய் கட்டணம் செலுத்தி சுற்றுலா சென்றனர் இந்த கோடீஸ்வரர்கள்.
இறந்து போன 5 பேரில் ஓஷன் கேட் நிறுவனத்தின் சிஇஓ-வான ஸ்டாக்டன் ரஷ் என்பவரும் அடக்கம். டைட்டன் நீர்மூழ்கி கப்பல் வெடிப்பை "பேரழிவு" எனக் கூறுகிறது தேடுதல் வேட்டையில் ஈடு பட்டிருந்த அமெரிக்க கடலோர காவல்படை. இந்த கப்பல் வெடித்திருக்கும் என்று முன்னரே கணித்துள்ளார் டைட்டானிக் பட இயக்குநரான ஜேம்ஸ் கேமரூன்.
டைட்டான் நீர்மூழ்கியில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது, அது சென்ற வழி ஆகியவற்றைக் கொண்டு இதனை கணித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
" நீர்மூழ்கியின் மின்னணு அமைப்பு செயலிழந்து அதன் தகவல் தொடர்பு அமைப்பு துண்டிக்கப்பட்டது, அதன் டிராக்கிங் டிரான்ஸ்பாண்டர் செயலிழந்தது ஆகியவற்றை தெரிந்து கொண்டபோதே அது போய்விட்டது என்று தெரிந்தது" எனக் கூரியுள்ளார் ஜேம்ஸ் கேமரூன்.
"ஆழ்கடலில் மூழ்கக்கூடிய குழுக்களில் எனக்கு தெரிந்தவர்கள் சிலருக்கு நான் உடனடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். சுமார் ஒரு மணி நேரத்திற்குள் எனக்கு பின்வரும் உண்மைகள் கிடைத்தன. அவர்கள் 3500 மீட்டர் ஆழத்தில் வழிதவறினர். 3800 மீட்டர் தரையை நோக்கிச் சென்றனர்
"அவர்களின் தொடர்பு சாதனங்களும் வழிசெலுத்தும் அமைப்பும் தொலைந்துவிட்டன. ஒரு தீவிர பேரழிவு இல்லாமல் இவை இரண்டும் ஒரே நேரத்தில் செயலிழக்காது என நான் உடனடியாக கூறினேன். அப்போது நிச்சயம் அந்த நீர்மூழ்கி பேரழிவு தரக் கூடிய 'வெடிப்பை' சந்தித்திருக்கும் என கணித்தேன் " எனக் கூறியுள்ளார்.
1500க்கும் மேற்பட்டோர் மரணத்துக்கு காரணமாக இருந்த டைட்டானிக் கப்பலை பார்க்கும் ஆர்வம் இன்றும் மக்களுக்கு இருக்கிறது என்றால் அதற்கு ஜேம்ஸ் கேமரூன் எடுத்த டைட்டானிக் படம் தான் காரணம் என்றே சொல்லலாம்.
கேமரூன் இதுவரை 33 முறை ஆழ்கடலுக்குள் சென்று டைட்டானிக் கப்பலின் சிதைவுகளைப் பார்வையிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust