ரிஷி சுனக் புகைப்படத்துடன் வெளியான விளம்பரம் : வெடித்த சர்ச்சை - என்ன நடந்தது?

தற்போது தேர்தலில் தோல்வியுற்ற ரிஷி சுனக்கின் புகைப்படத்தை பயன்படுத்தி அந்நாட்டு நிறுவனம் ஒன்று விளம்பரம் வெளியிட்டுள்ளது.
ரிஷி சுனக்கை பயன்படுத்தி விளம்பரம் செய்த நிறுவனம்
ரிஷி சுனக்கை பயன்படுத்தி விளம்பரம் செய்த நிறுவனம்டிவிட்டர்
Published on

ரிஷி சுனக்கை பயன்படுத்தி லண்டனை சேர்ந்த நிறுவனம் ஒன்று வேலைக்கு ஆள் எடுக்க விளம்பரம் செய்துள்ளது.

பிரிட்டன் நாட்டின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகிய பிறகு, அடுத்த பிரதமர் யார் என்ற மிகப் பெரிய கேள்வி உலக நாடுகளால் வைக்கப்பட்டது. இறுதியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் என்பவருக்கும், பிரிட்டனை சேர்ந்த லிஸ் டிரஸ் என்பவருக்கும் தான் போட்டி இருந்தது. அதில் 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் லிஸ் வெற்றி பெற்று பிரிட்டனின் பிரதமராக பதவி ஏற்று கொண்டார்.

ரிஷி சுனக்
ரிஷி சுனக்டிவிட்டர்

தற்போது தேர்தலில் தோல்வியுற்ற ரிஷி சுனக்கின் புகைப்படத்தை பயன்படுத்தி அந்நாட்டு நிறுவனம் ஒன்று விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

சி வி லைப்ரேரி என்ற அந்த நிறுவனம் வேலைக்கு ஆட்களை தேடி வருகிறது. இதனை விளம்பரப்படுத்த பில் போர்ட் ஒன்றை பயன்படுத்தியுள்ளது. அதில் ரிஷி சுனக்கின் புகைப்படம், அதனருகில் , "வேலை கிடைக்கவில்லையா?" என்ற கேள்வி இருக்கிறது

ரிஷி சுனக்கை பயன்படுத்தி விளம்பரம் செய்த நிறுவனம்
Liz Truss UK PM : யார் இவர்? பிரிட்டனின் புதிய பிரதமர் முன்னிருக்கும் சவால்கள் என்ன?

அதற்கு கீழே, "கவலை வேண்டாம்...எங்களிடம் எல்லோருக்கும் வேலை இருக்கிறது. உங்களுக்கு பொருத்தமானதை நீங்கள் தேர்வு செய்துகொள்ளலாம்" என எழுதியிருந்தது.

இந்த பில்போர்டை தாங்கிய வாகனம் லண்டனின் Parliament Square என்ற இடத்தில் வலம் வந்துக் கொண்டிருக்கும்போது இதனை புகைப்படம் எடுத்துள்ளனர். இது இணையத்தில் பகிரப்பட்டதிலிருந்து கடும் விமர்சனங்கள் வரத் துவங்கியுள்ளது.

ரிஷி சுனக்கின் தோல்வியை, நிறுவனம் கேளிக்கையாக பயன்படுத்தியுள்ளது குறித்து பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், இக்காலத்தில் இவ்வாறு பயன்படுத்தப்படும் விளம்பர யுக்திகள் சற்று அச்சமூட்டும் வகையிலும், சுற்றுச் சூழலுக்கு ஆபத்து ஏற்படுத்து வகையிலும் அமைந்திருப்பதாகவும் சிலர் தெரிவித்தனர்.

ரிஷி சுனக்கை பயன்படுத்தி விளம்பரம் செய்த நிறுவனம்
ரிஷி சுனக்: பிரிட்டன் பிரதமர் ஆக பதவி ஏற்கவிருக்கும் இவர் யார்? இவர் இந்திய பின்னணி என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com