வளைகுடாவுக்கும் விரிகுடாவுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா?

வளைகுடா மற்றும் விரிகுடா புவியியல் மற்றும் சூழலியலை (Ecology ) பொறுத்து மாறுபடுகிறது. இதற்கும் கடலின் அமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது, பூமியின் மேற்பரப்பில் சுமார் 71% கடல்நீரால் சூழப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
வளைகுடாவுக்கும் விரிகுடாவுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா?
வளைகுடாவுக்கும் விரிகுடாவுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா?NewsSense
Published on

இந்த உலகம் அதிக அளவில் நீரால் தான் சூழப்பட்டுள்ளது. இதற்கு கடல் முக்கிய பங்கு வகிக்கிறது. கடலில் இருக்ககூடிய விரிகுடா மற்றும் வளைகுடா பகுதி குறித்த வித்தியாசங்களை தற்போது இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.

வளைகுடா மற்றும் விரிகுடா புவியியல் மற்றும் சூழலியலை (Ecology ) பொறுத்து மாறுபடுகிறது. இதற்கும் கடலின் அமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது, பூமியின் மேற்பரப்பில் சுமார் 71% கடல்நீரால் சூழப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

விரிகுடா

விரிகுடா என்பது நிலப்பரப்பைச் சுற்றி அகல வாக்கில் மிகவும் பரந்த அளவில் காணப்படும் கடல் பரப்பு ஆகும். உலகின் மிகவும் பெரிய விரிகுடா வங்காள விரிகுடா என கூறப்படுகிறது. விரிகுடா பொதுவாக ஆழமானதாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்தவையாக இவை உள்ளன. புகழ்பெற்ற துறைமுகங்கள் விரிகுடாவில் தான் உள்ளது.

இந்தியாவை பொறுத்தவரை விரிகுடாவில் பல நதிகள் இணைகின்றன. கங்கை நதி, பிரம்மபுத்திரா நதி, மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, காவேரி, மெக்னா, ஐராவதி ஆகியவை வங்காள விரிகுடாவில் கலக்கும் நதிகளாகும்.

வளைகுடா

ஒரு வளைகுடாவின் வரையறை விரிகுடாக்களுடன் மாறுபடுகிறது. உலகின் மிக முக்கியமான மற்றும் நன்கு அறியப்பட்ட வளைகுடாக்கள் இவைதான், மெக்சிகோ வளைகுடா, அலாஸ்கா வளைகுடா மற்றும் செயின்ட் லாரன்ஸ் வளைகுடா.

ஒரு வளைகுடா, கடல் அல்லது கடலின் பெரும் பகுதி நிலத்திற்குள் கொண்டு வரப்பட்டதால் உருவானது. அதாவது இரண்டு தீபகற்பங்களுக்கு இடையில் இருப்பது. அவை பொதுவாக விரிகுடாக்களை விட பெரியதாகவும் ஆழமாகவும் மூன்று பக்கங்களிலும் நிலத்தால் சூழப்பட்டு இருக்கும். மேலும் அவை கடலுடன் இணைக்கும் குறுகியபாதையினை கொண்டிருக்கும்.

இது கடலோர பொருளாதாரத்தை அதிகரிக்க துறைமுகங்கள் மற்றும் பாதைகளை அமைக்க உதவுகின்றது இதனால் வளைகுடா கடற்பகுதியில் உள்ள சில நாடுகள் கொஞ்சம் பொருளாதரத்தில் உயர்ந்துள்ளது.

வளைகுடா நாடுகள் (வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில்) - யுஏஇ, பஹ்ரைன், கத்தார், குவைத், சவுதி அரேபியா மற்றும் ஓமன் போன்றவை அடங்கும்.

வளைகுடாவுக்கும் விரிகுடாவுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா?
பூமிக்கு அடியில் கடல் இருப்பதை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnews

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com