உலகின் பயங்கரமான ஏரி இதுதான்! விலங்குகளை கல்லாக மாற்றும் நேட்ரான் ஏரியின் பின்னணி என்ன?

இந்த ஏரி விலங்குகளை ‘கல்’ அல்லது ‘மம்மி’யாக மாற்றுகிறது என பல செய்திகள் உலா வந்தன. ஒரு திகில் திரைப்படத்தின் கதை போல் தெரிகிறது இல்லையா? ஆனால் இந்த கோட்பாட்டின் பின்னால் அறிவியலும் புவியியலும் இருப்பதால் அது உண்மைதான்.
Does Lake Natron really turn animals into stone? Mystery of world’s scariest lake
Does Lake Natron really turn animals into stone? Mystery of world’s scariest lakeTwitter

நேட்ரோன் ஏரி ஒரு உப்பு நீர் ஏரியாகும். இது கிழக்கு ஆப்பிரிக்காவின் தான்சானியா நாட்டின் அருஷா பிரதேசத்தில் கென்யாவின் எல்லைப்புறத்தில் அமைந்துள்ளது.

3 மீட்டர் ஆழம் கொண்ட இது வழக்கமான ஏரி போன்றல்லாமல் அதன் வித்தியாசமான தோற்றம், புவியியல் வரலாற்றுக்கு பெயர் பெற்றதாக இருக்கிறது.

இந்த ஏரியின் வெப்ப நிலை 40 °C க்கு அதிகமாக காணப்படுமாம். இந்த அதிகமான வெப்ப நிலை காரணமாக இந்த ஏரியின் நீர் ஆவியாகி சோடியம் கார்பனேட் எனும் உப்பு ஏரியில் தங்கி விடுகிறது.

இதனால் இந்த ஏரி நீரின் காரத்தன்மை-10.5 ஐ விட அதிகமாக உள்ளது. இதனால் இந்த ஏரியின் நீரை மக்களும், விலங்குகளும் குடிக்கும் தன்மை அற்றதாக உள்ளது. காரத்தன்மை அதிகம் இருக்கும் இந்த ஏரி மர்மத்தில் மறைக்கப்பட்டுள்ளது.

இந்த ஏரியைச் சுற்றியுள்ள மலைகளில் எரிமலைகள் வெடிக்கும் போது செந்நிறம் கொண்ட சோடியம், கார்பனேட் மற்றும் சிறிய அளவில் கால்சியம் மற்றும் மக்னீசியம் கொண்ட எரிமலைக் குழம்பு வெளியாகி எரியின் நீரில் கலப்பதால் அதன் நிறம் அடர் சிவப்பாக காட்சியளிக்கிறது.

Does Lake Natron really turn animals into stone? Mystery of world’s scariest lake
இந்தியா: எலும்புக்கூடு ஏரி முதல் செல்லுலார் சிறை வரை - எங்கெல்லாம் திகில் பயணம் செல்லலாம்?

கல்லாக மாறிய விலங்குகளுக்கு பின்னால் உள்ள மர்மம்

இந்த ஏரி விலங்குகளை ‘கல்’ அல்லது ‘மம்மி’யாக மாற்றுகிறது என பல செய்திகள் உலா வந்தன.

ஒரு திகில் திரைப்படத்தின் கதை போல் தெரிகிறது இல்லையா? ஆனால் இந்த கோட்பாட்டின் பின்னால் அறிவியலும் புவியியலும் இருப்பதால் அது உண்மைதான். ஏனெனில் ஏரியின் தண்ணீரில் உப்பு உள்ளடக்கம் மிக அதிகமாக உள்ளது.

சுற்றியுள்ள மலைகளில் இருந்து ஏரியில் சேரும் சோடியம் கார்பனேட் மற்றும் பிற தாதுக்கள் தண்ணீரை காரமாக்குகின்றன.

சோடியம் கார்பனேட், எகிப்திய மம்மிஃபிகேஷன் செயல்முறையிலும் பயன்படுத்தப்பட்டதாக ஒரு தகவலும் உள்ளது. இந்த ஏரி நீரின் காரத்தன்மை-10.5 ஐ விட அதிகமாக உள்ளதால் விலங்குகளின் தோல் மற்றும் கண்களை எரிக்கக்கூடும். ஆனால் காரத் தன்மை கொண்ட இந்த ஏரி நீரில் குறிப்பிட்ட வகை மீன்கள் மட்டும் வாழ்வதாக சொல்லப்படுகிறது.

Does Lake Natron really turn animals into stone? Mystery of world’s scariest lake
Roopkund: மனித எலும்புக்கூடுகளால் நிறைந்திருக்கும் ஏரி- மர்ம பின்னணி என்ன? திக்திக் வரலாறு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com