Ukraine : Viktor Yanukovych அதிபராக்க விரும்பும் ரசியா - யார் இவர் ?

உக்ரைன் ஆக்கிரமிப்பில் முன்னேறி வரும் ரசியாவின் அடுத்த திட்டம் என்ன? உக்ரைனின் முன்னாள் அதிபர் விக்டர் யோனுகோவிச்சை அதிபராக்குவதற்கு மாஸ்கோ விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Viktor Yanukovych

Viktor Yanukovych

Twitter

Published on

உக்ரைன் ஆக்கிரமிப்பில் முன்னேறி வரும் ரசியாவின் அடுத்த திட்டம் என்ன? உக்ரைனின் முன்னாள் அதிபர் விக்டர் யோனுகோவிச்சை அதிபராக்குவதற்கு மாஸ்கோ விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விக்டர் யோனுகோவிச் ஏற்கனவே இரண்டு முறை உக்ரைன் அதிபராக இருந்து மக்கள் போராட்டத்தால் அகற்றப்பட்டவர். இது குறித்து உக்ராய்ன்ஸ்கா பிராவ்தா என்ற இணைய தளம் ரசியாவின் கிரம்ளின் மாளிகை அதற்கான ஆயத்தப் பணிகளை செய்து வருவதாக செய்தி வெளியிட்டிருக்கிறது.உக்ரைன் ஆக்கிரமிப்பில் முன்னேறி வரும் ரசியாவின் அடுத்த திட்டம் என்ன? உக்ரைனின் முன்னாள் அதிபர் விக்டர் யோனுகோவிச்சை அதிபராக்குவதற்கு மாஸ்கோ விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விக்டர் யோனுகோவிச் ஏற்கனவே இரண்டு முறை உக்ரைன் அதிபராக இருந்து மக்கள் போராட்டத்தால் அகற்றப்பட்டவர். இது குறித்து உக்ராய்ன்ஸ்கா பிராவ்தா என்ற இணைய தளம் ரசியாவின் கிரம்ளின் மாளிகை அதற்கான ஆயத்தப் பணிகளை செய்து வருவதாக செய்தி வெளியிட்டிருக்கிறது.

Viktor Yanukovych

Viktor Yanukovych

Facebook

விக்டர் யானுகோவிச் அதிகாரத்திற்கு வந்த வரலாறு

உக்ரைனின் கிழக்கு பகுதியான டொனெட்ஸ்க் தற்போது ரசியாவால் தனிநாடாக அங்கீக்கரிக்கப்பட்டிருக்கிறது. இந்த நகரின் புறநகரப் பகுதியான யெனாகியேவோவில் 1950 இல் விக்டர் பிறந்தார். அவரது தந்தை ஒரு தொழிலாளி, தாய் ஒரு செவிலியர். தனது இளவயதில் அவர் இரண்டு முறை வன்முறை குற்றங்களுக்கா சிறை வைக்கப்பட்டார். அவரது அதிகாரப்பூர்வ வரலாற்றின் படி இந்தக் குற்றச்சாட்டுகள் இறுதியில் ரத்து செய்யப்பட்டன.

அப்போது சோவியத் யூனியனின் முக்கியமான நிலக்கரி சுரங்கத்துறை கிழக்கு உக்ரைனில் இருந்தது. அதில் ஒரு போக்குவரத்து அதிகாரியாக விக்டர் தனது இளவயதில் பணியாற்றினார். 2000 ஆம் ஆண்டில் அவர் பொருளாதாரத் துறையில் முனைவர் பட்டம் முடித்தார்.

முப்பது இலட்சம் மக்கள் வசித்த கிழக்க உக்ரைனின் டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் விக்டர் டொனெட்ஸ்க் ஆளுநராக பதவியேற்றார். இப்படியாக அவர் அதிகார மையத்தில் நுழைந்து பயணித்தார். ஒரு வருடத்திற்குள் 2002 ஆம் ஆண்டில் அப்போதைய அதிபர் லியோனிட் குச்மா, விக்டரை பிரதமராக நியமித்தார்.

Viktor Yanukovych

ரஷ்யா : பழைய சோவியத்திற்கு எதிராக கிளர்ச்சி செய்த ஒற்றை ஆஃப்கன் பெண்

தனது அரசியல் பயணத்தில் விக்டர் அதிவேகமாக பயணித்து 2004 ஆம் ஆண்டு உக்ரைன் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார். இந்தத் தேர்தல் ஒரு மோசடி என்று தலைநகர் கியேவில் பெரும் போராட்டம் நடைபெற்றது. இது ஆரஞ்சு புரட்சி என்று அழைக்கப் படுகிறது. இருப்பினும் விக்டர் 2006 முதல் 2007 வரை மீண்டும் இரண்டாவது முறையாக பிரதமராக பணியாற்றினார். இப்படி அதிபர், பிரதமர் என்று மாறி மாறி பதவிகளில் இருந்த விக்டர், உக்ரைனில் ஒரு பிரபலமான அரசியல்வாதியாகவும் மாறினார்.

அவர் 2010 ஆம் ஆண்டில் நடந்த அதிபர் தேர்தலில் தனது போட்டியாளரான யூலியா திமோஷென்கோவைத் தோற்கடித்தார். விக்டர் யானுகோவிச் அதிபராக இருந்த போது ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கமாவதற்கு முயன்றார்.

இருப்பினும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவதற்கான நேரம் வந்த போது அவர் அந்த இணைப்பை நவம்பர் 2013 இல் நிராகரித்தார். அதிபரின் முடிவை எதிர்த்து உக்ரைன் வீதிகள் எங்கும் ஆரஞ்ச புரட்சி எனும் எதிர்ப்புப் போராட்டம் 2004 ஆம் ஆண்டிற்கு பிறகு பல மாதங்கள் நடைபெற்றது. பிப்ரவரி மாதத்தில் இந்தப் போராட்டத்தில் பெரும் இரத்தம் சிந்தப்பட்டது. ஸ்னைப்பர் எனும் தொலைவில் இருந்து குறிபார்த்து சுடும் இராணுவ – போலீசு வீரர்களால் 48 பேர் உள்ளிட்டு மொத்தம் 88 பேர்கள் கொல்லப்பட்டனர். இந்த ஆரஞ்சு புரட்சி அதிபர் விக்டர் யானுகோவிச்சை வீழ்த்தியது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நெருக்குதலின் கீழ் அவர் தனது அதிகாரத்தை பாராளுமன்றத்திற்கு மாற்றுவதற்கும், முன்கூட்டியே தேர்தலை நடத்துவதற்கும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். ஆனால் அப்படி அவர் கையெழுத்திட்ட சில மணி நேரங்களில் தலைநகரை விட்டு வெளியேறினார். அவரது ஆட்சி நிர்வாகம் சிதைந்துபோனது.

Viktor Yanukovych

Kiran Rathod Latest Trending Photos Will Make You Crazy About Her | Visual Story

Viktor Yanukovych with Vladimir Putin

Viktor Yanukovych with Vladimir Putin

Twitter

விக்டர் யானுகோவிச்சின் ரசிய உறவு

2004 ஆம் ஆண்டில் விக்டர் யோனுகோவிச்சை ரசிய அதிபர் விளாடிமிர் புடின் வெளிப்படையாக ஆதரித்தார். எனினும் விக்டர் தான் ஒரு மாஸ்கோ ஆதரவாளர் எனும் பிம்பத்தை மாற்ற முயன்றார். ஆனால் உக்ரைனின் நிதி நிலைமை அதற்கு இடம் கொடுக்கவில்லை. விக்டரின் வாதப்படி உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தின் சுதந்திர வர்த்தகத்தோடு இணைக்கப்பட்டால் தற்போது ரசியாவுடன் நடைபெறும் வர்த்தக உறவு பாதிக்கப்படும்.

ஷக்தர் டொனெட்ஸ்க் கால்பந்து கிளப்பின் உரிமையாளரான பில்லியனர் ரினாட் அக்மெடோவ், விக்டரின் அரசியல் கூட்டாளியாக இருந்தார். அடுத்து ரசிய அதிபர் புடினோடு இருந்த நெருக்கமான உறவு மற்றும் அதிபர் பதவியில் இறந்து விலகி புகலிடம்தேடி அவர் ரசியாவிற்கு தப்பிச் சென்றது இவையெல்லாம் விக்டர் ஒரு மாஸ்கோ ஆதரவாளர் என்பதை தெளிவாகக் காட்டியது.

உக்ரைனை விட்டு அவர் வெளியேறிய பிறகு ரசிய நகரமான ரோஸ்டோவ் ஆன் டானில் தனது முதல் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார். அப்போது தனது நாட்டில் இராணுவத் தலையீடு மற்றும் நாடு பிரிவினைக்கு உள்ளாக்கும் முயற்சிகளுக்கு எதிராகப் பேசினார். அதாவது ஐரோப்பிய ஒன்றியத்தை மறைமுகமாக சுட்டிக் காட்டி அவர்களால் உக்ரைனில் பிரச்சினைகள் ஏற்படும் என்பதைக் கூறினார். மேலும் தனக்கும் தனது குடும்பத்திற்கும் பாதுகாப்பு உத்திரவாதம் இல்லாத நிலையில் உக்ரைன் திரும்பமாட்டேன் என்றும் அறிவித்தார்.

இப்போது ரசியாவில் வாழும் விக்டர் யானுகோவிச்சைத்தான் உக்ரைன் போருக்குப் பிறகு உக்ரைனின் அதிபராக நியமிப்பதற்கு ரசியா விரும்புகிறது.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com