7 வருடங்களாக தப்பிய திருடன் - நொடியில் மாட்டிக்கொண்ட வேடிக்கை - என்ன நடந்தது?

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பது போல, கையுங்களவுமாக மாட்டிக்கொண்ட தாமஸை தற்போது சிறைக்காவலில் வைத்திருக்கின்றனர் காவல் துறையினர்.
தாமஸ்
தாமஸ்டிவிட்டர்
Published on

தென் ஆப்ரிக்காவில் பல வருடங்களாக தேடப்பட்டு வந்த குற்றவாளி ஒருவர், நொடிபொழுதில் தானாக வந்து மாட்டிக்கொண்ட சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இணையவாசிகள் இவரை தென் ஆப்ரிக்காவின் Dumbest Criminal எனக் கூறிவருகின்றனர்

கடந்த 7 வருடங்களாக தேடப்பட்டு வந்த தாமஸ் கோபோ என்ற நபர், தானாக சென்று காவல் துறையினரிடம் சிக்கிக்கொண்ட சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. தாமஸ் சுமார் 91,000 ரூபாய் மதிப்புள்ள ஹார்ட்வேர் பொருட்களை திருடிய குற்றத்திற்காக தேடப்பட்டு வந்தவர்

தான் டெலிவர் செய்யவிருந்த ஹார்ட்வேர் பொருட்களை குறிப்பிட்ட வாடிக்கையாளருக்கு அனுப்பாமல், வெவ்வேறு விலாசங்களுக்கு அனுப்பி அதன் மூலம் வந்த பணத்தை அவர் கொள்ளையடித்தாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார் தாமஸ்.

நிறுவனம் சார்பாக புகார் அளித்து தேடப்பட்டு வந்தார் தாமஸ். இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 15 அன்று, பெத்தல் காவல் நிலையத்திற்கு தாமஸ் வந்ததாக அறியப்படுகிறது. அவர் தான் விண்ணப்பித்திருந்த ' போலீஸ் வேலை குறித்து தெரிந்துகொள்வதற்காக' காவல் நிலையம் சென்றிருக்கிறார். அப்போது தான் அவர் தேடுதல் பட்டியலில் இருக்கும் ஓஎர் முக்கிய குற்றவாளி என கண்டுபிடிக்கப்பட்டது.

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பது போல, கையுங்களவுமாக மாட்டிக்கொண்ட தாமஸை தற்போது சிறைக்காவலில் வைத்திருக்கின்றனர் காவல் துறையினர். விரைவில் இவரது குற்றங்களுக்கான தண்டனை வழங்கப்படும் எனவும் தெரிவித்திருக்கின்றனர்

தாமஸ்
கரடி பொம்மைக்குள் ஒளிந்திருந்த திருடன் - மாட்டிக்கொண்டது எப்படி?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com