The Rock: 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறாரா ஹாலிவுட் நடிகர்?

2021ம் ஆண்டு ஒரு மேடையில் அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்து "ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு" செய்வதற்கு சிலரை பணியமர்த்தியிருப்பதாக டுவைன் குறிப்பிட்டார்.
தி ராக்: 2024 அமெரிக்க அதிர்பர் தேர்தலில் போட்டியிடுகிறாரா ஹாலிவுட் நடிகர்?
தி ராக்: 2024 அமெரிக்க அதிர்பர் தேர்தலில் போட்டியிடுகிறாரா ஹாலிவுட் நடிகர்?Twitter
Published on

தி ராக் என்று அறியப்படும் நடிகர் டுவைன் ஜான்சன் (Dwayne Johnson) 2024ம் ஆண்டு நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலில் பங்கெடுக்கப் போவதாக வந்த சலசலப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

CBS Sunday Morning நிகழ்ச்சிக்கு பேட்டியளித்த அவர், தான் அமெரிக்க அதிபர் தேர்தலில் பங்கேற்பது நடக்கப்போவதில்லை என்று கூறியுள்ளார். இப்போது அவர் அவரது குழந்தைகளுக்கு நல்ல தந்தையாக இருப்பதில் மட்டுமே கவனம் செலுத்தப்போவதாகவும் கூறியுள்ளார்.

"நான் நாட்டை நேசிக்கிறேன், இங்குள்ள ஒவ்வொருவரையுமே. ஆனால் இப்போது நான் ஒரு அப்பாவாக இருக்க வேண்டியதிருக்கிறது. என்னுடைய இரன்டு பெண் குழந்தைகளுடனும் என் நேரத்தை செலவிட விரும்புகிறேன். என் மூத்த மகள் வளரும் போது நான் அவளுடன் இல்லை. ஆனால் இப்போது இந்த கடின சூழலில் நான் அவளுடன் இருக்க விரும்புகிறேன்.

தலைவராக இருப்பது சிறந்தது தான் ஆனால் என்னுடைய முன்னுரிமை ஒரு தந்தையாக இருப்பதற்குத்தான்" என்று அவர் கூறியுள்ளார்.

கடந்த 2017ம் ஆண்டு முதல் பல தருணங்களில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதில் உள்ள ஆர்வத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் டுவைன் ஜான்சன்.

2021ம் ஆண்டு ஒரு மேடையில் அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்து "ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு" செய்வதற்கு சிலரை பணியமர்த்தியிருப்பதாக டுவைன் குறிப்பிட்டார். ஆனால் இப்போது எல்லா சர்ச்சைகளும் முடிவுக்கு வந்துள்ளது.

வரும் அக்டோபர் 21ம் தேதி அவர் நடித்த ப்ளாக் ஆதாம் படம் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் ரஜினிகாந்த் போல அமெரிக்க சூப்பர் ஸ்டாரும் அரசியல் போக்கு காட்டி வருகிறார்!

தி ராக்: 2024 அமெரிக்க அதிர்பர் தேர்தலில் போட்டியிடுகிறாரா ஹாலிவுட் நடிகர்?
650 குழந்தைகள் விருப்பத்தை நிறைவேற்றிய ஜான் சீனா- குத்துசண்டை வீரரின் கின்னஸ் சாதனை!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com