துருக்கி, சிரியா நிலநடுக்கம் : முன்பே கணித்தாரா இவர்? - விரிவான விளக்கம்

நில அதிர்வு நடவடிக்கைகளை ஆய்வு செய்யும் சோலார் சிஸ்டம் ஜியோமெட்ரி சர்வேயின் (SSGEOS) ஆராய்ச்சியாளரான ஃபிராங்க் ஹூகர்பீட்ஸ், பிப்ரவரி 3 அன்று ட்வீட் செய்துள்ளார்.
Turkey and Syria earthquake predicted days ago?
Turkey and Syria earthquake predicted days ago?Twitter

நேற்று காலை துருக்கி மற்றும் சிரியா பகுதிகளில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது.

நாட்டின் தென்கிழக்கு பகுதியில் காஜியன்டப் நகரில் நேற்று அதிகாலை 4.17 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

பூமிக்கு அடியில் 24 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. இதில் துருக்கியின் 10 மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

குறிப்பாக காஜியன்டப், சன்லிஉர்பா, தியார்பக்கிர், அடியாமன், மலாட்யா, உஸ்மானியா, ஹதே, கில்லிஸ் ஆகிய மாகாணங்களில் 2,000-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து விழுந்தன.

இதனால் துருக்கியில் 4000க்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 15,000க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளனர். 10க்கும் மேற்பட்ட நகரங்கள் இதில் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் சிரியாவில் 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலநடுக்கத்தின் மீட்பு பணிகள் முழுமையாக நிறைவடையும் முன்னரே துருக்கி மற்றும் சிரியாவில் மீண்டும் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இது நாட்டின் வரலாற்றில் மிக மோசமான பேரழிவாக கருதப்படுகிறது. ஆனால் இவ்வாறு நிகழும் என்று சில நாட்களுக்கு முன்பே கணிக்கப்பட்டதா?

நில அதிர்வு நடவடிக்கைகளை ஆய்வு செய்யும் சோலார் சிஸ்டம் ஜியோமெட்ரி சர்வேயின் (SSGEOS) ஆராய்ச்சியாளரான ஃபிராங்க் ஹூகர்பீட்ஸ், பிப்ரவரி 3 அன்று ட்வீட் செய்துள்ளார்.

விரைவில் தென்-மத்திய துருக்கி, ஜோர்டான், சிரியா மற்றும் லெபனானைச் சுற்றியுள்ள பகுதியில் 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்படும்.

அவரது ட்வீட்டில், அவர் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளைக் குறிக்கும் வரைபடத்தையும் பகிர்ந்துள்ளார்.

அந்த ட்விட்டர் பதிவு தற்போது இணையதளத்தில் வைரலாகி, நெட்டிசன்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது..

Turkey and Syria earthquake predicted days ago?
துருக்கி: ஏலியன்களா? அடுத்த பிரபஞ்சத்துக்கு செல்லும் வழியா? வானில் தோன்றிய UFO மேகங்கள்!

பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ சர்வதேச அளவில் நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. இந்தியா உட்பட பல நாடுகள் உதவி மற்றும் மீட்புப் பணியாளர்களை அனுப்ப முன் வந்துள்ளன.

துருக்கிய ஜனாதிபதி தையிப் எர்டோகன், இந்த பூகம்பங்களை ஒரு வரலாற்று பேரழிவு என்றும் 1939 க்குப் பிறகு நாட்டைத் தாக்கிய மிக மோசமான நிலநடுக்கம் என்றும் கூறியிருக்கிறார்.

Turkey and Syria earthquake predicted days ago?
துருக்கி முதல் இலங்கை வரை : பெயர் மாற்றம் செய்து கொண்ட 7 நாடுகள் - காரணம் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com