Elon Musk ட்விட்டர் தலைவர் பதவியிலிருந்து விலகல்? மௌனத்தை உடைத்த மஸ்க் - என்ன நடக்கிறது?

கருத்துக்கணிப்பின் முடிவுகள் கடந்த திங்களன்று வெளியிடப்பட்டது. அதில் கிட்டத்தட்ட 58 சதவிகிதம் பேர் அவர் அந்த பதவியை விட்டு விலகவேண்டும் என்று பதிலளித்திருந்தனர். அவருக்கு பாதமாக இந்த கருத்துக்கணிப்பின் முடிவுகள் வந்துள்ளன.
Elon Musk
Elon MuskTwitter
Published on

கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று ”தான் ட்விட்டர் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டுமா? “ எனக் கேட்டு கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தினார் ட்விட்டர் தலைவர் எலான் மஸ்க்

அதன் முடிவுகள் கடந்த திங்களன்று வெளியிடப்பட்டது. அதில் கிட்ட தட்ட 58 சதவிகிதம் பேர் அவர் அந்த பதவியை விட்டு விலகவேண்டும் என்று பதிலளித்திருந்தனர்.

அவருக்கு பாதமாக இந்த கருத்துக்கணிப்பின் முடிவுகள் வந்துள்ள நிலையில், ஒரு சில பயனர்களின் பரிந்துரைகள் மஸ்க்கிற்கு நேர்மறையாக வந்துள்ளதும் கவனிக்கப்படவேண்டியதாக உள்ளது.

மஸ்க்கின் பதில் என்ன?

கருத்துக்கணிப்பை பதிவிட்ட மஸ்க், அதன் முடிவுகளுக்கு ஒத்துப்போவேன் என முன்னர் உறுதியளித்திருந்தார்.

ஆனால், கருத்துக்கணிப்பில், 57.5 சதவிகித பயனர்கள், அவர் ட்விட்டர் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும் எனக் கூறியிருந்த நிலையில் அதற்கு உடனடியாக அவர் எந்த பதிலையும் அளிக்கவில்லை.

கருத்துக்கணிப்பின் முடிவுகள் வெளியாகி பல மணி நேரம் கடந்த நிலையில், பயனர்கள் முன்வைத்த ஒரு சில பரிந்துரைகளுக்கு “Interesting" என பதிலளித்திருந்தார்.

முக்கியமாக ஒரு பயனர், “கொள்கைகள் சார்ந்த கருத்துக்கணிப்புகளுக்கு ப்ளூ டிக் வைத்திருப்பவர்கள் மட்டுமே வாக்களிக்க வேண்டும்” என்று கேட்டிருந்தார்.

அதற்கு பதிலளித்த மஸ்க், “நல்லது. ட்விட்டர் இந்த மாற்றத்தை மேற்கொள்ளும்” என்று கூறியிருந்தார்.

Elon Musk
Elon Musk : நிருபர்களின் ட்விட்டர் கணக்குகளை முடக்கிய நிறுவனம் - என்ன காரணம்?

ஆதரவாளர்கள் கருத்து:

இந்நிலையில், மஸ்க்கை ஆதரிக்கும் சிலர் கூறுகையில், இந்த கருத்துகணிப்பு, மனிதர்கள் அல்லாமல், ட்விட்டரில் இருக்கும் பாட்களின் விளைவு எனக் குற்றசாட்டியுள்ளனர்.

“மஸ்க், நீங்கள் பலரின் முதன்மை எதிரியாக திகழும் தருணத்தில், இது போன்ற கருத்துக்கணிப்பை ட்விட்டரில் நடத்துவது புத்திசாலித்தனமற்றது.

உங்களுக்கு எதிரானவர்கள் ஒரு பெரும் பாட் (bot) படையையே உருவாக்கி வைத்துள்ளனர். கிட்ட தட்ட 1 லட்சம் ‘analysts’ 30 முதல் 40 கணக்குகளை வைத்துக்கொண்டு உங்களுக்கு எதிராக வாக்களிக்கின்றனர். ஆகையால், இந்த கருத்துக்கணிப்பை புறந்தள்ளிவிட்டு மீண்டும் ஒரு போல் நடத்தலாம். பெரும்பாலானோருக்கு உங்கள் மீது நம்பிக்கை இருக்கிறது” என்று மற்றொரு பயனர் கூறியிருந்தார்.

Twitter

பதவி விலகும் மஸ்க்?

ஆனால், மஸ்க்கின் நடவடிக்கைகளை கவனிக்கும்போது, இந்த கருத்துக்கணிப்பை அவர் பாதமாக பார்க்கவில்லையோ என்ற சந்தேகமும் மனதில் எழுகிறது.

ஒரு ட்வீட்டில், “நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள். ஒருவேளை நீங்கள் நினைப்பது கிடைத்துவிடலாம்” என்ற பொன்மொழியை பதிவிட்டிருந்தார்.

மேலும், கடந்த நவம்பர் 16 அன்று நடந்த வழக்கு ஒன்றில், நீதிபதியிடம், ட்விட்டரை வழிநடத்தும் நேரத்தை குறைத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும், “விரைவில், தலைமை பொறுப்பில் அமர்த்த வேறொருவரை தேர்ந்தெடுப்பேன்” எனவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

எனில் ட்விட்டர் தலைமை பொறுப்பிலிருந்து விலகும் நோக்கில் தான் இருக்கிறாரா எலான் மஸ்க்? கருத்துக்கணிப்பின் இந்த முடிவுகள் அவர் எதிர்பார்த்தது தானா?

Elon Musk
நான் ட்வீட்டர் CEO பதவியில் இருந்து விலக வேண்டுமா? Poll போட்டு Fun செய்யும் எலான் மஸ்க்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com