நான் ட்வீட்டர் CEO பதவியில் இருந்து விலக வேண்டுமா? Poll போட்டு Fun செய்யும் எலான் மஸ்க்!

சமீபத்தில் கூட அமெரிக்காவின் பல்வேறு செய்தி நிறுவனங்களை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர்களின் கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் முடக்கியது.
Elon Musk
Elon MuskTwitter
Published on

டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் போன்ற புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் நிறுவனங்களை நடத்தி வருகிறார் எலான் மஸ்க்.

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை கடந்த அக்டோபர் மாதம் வாங்கினார்.

அதன் பிறகு, நிறுவனத்தில் நிறைய மாற்றங்களை கொண்டு வந்த மஸ்க், லே ஆஃப் , புளு டிக்கான கட்டணம் என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

Twitter
TwitterCanva

அவ்வபோது ட்விட்டரில் எதாவது ஒரு விஷயத்தை கூறி அவரின் ஃபலோவர்களை வைபிலே வைத்திருப்பார்.

இந்நிலையில் எலான் மஸ்க், தனது ட்வீட்டில் 'ட்வீட்டர் தலைவர் பதவியில் இருந்து நான் விலக வேண்டுமா?' என்று ஒரு கேள்வியைக் கேட்டு கருத்துக் கணிப்பை ( poll) தொடங்கிருக்கிறார்.

முன்னதாக, ட்வீட்டரின் தலைமை நிர்வாக அதிகாரியாக நீண்ட காலம் பணியாற்ற விரும்பவில்லை என்று மஸ்க் கூறியிருந்தார்.

இதற்கிடையில் நிறுவனம் தொடர்பான அவரின் செயல்பாடுகள் திருப்திகரமானதாக இல்லாததால், கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார் மஸ்க்.

Elon Musk
எலான் மஸ்குக்கு 10 குழந்தைகள்: எத்தனை மனைவிகள்? - மஸ்க் குடும்பம் பற்றிய சுவாரசிய தகவல்கள்

சமீபத்தில் கூட அமெரிக்காவின் பல்வேறு செய்தி நிறுவனங்களை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர்களின் கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் முடக்கியது.

இப்படி ட்விட்டர் நிர்வாகத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வரும் எலான் மஸ்க், தன் மீதே நடவடிக்கை எடுக்க வேண்டுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

எலான் மஸ்க்கின் இந்த கேள்விக்கு 57.6 சதவீதத்திற்கும் அதிகமான பயனர்கள் 'ஆம்' என்றும், சுமார் 42.4 சதவீதம் பேர் 'இல்லை' என்பதையும் கிளிக் செய்துள்ளனர்.

Elon Musk
"நான் தற்கொலை செய்துகொண்டால்..." Twitter Space-ல் என்ன பேசினார் எலான் மஸ்க்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com