
ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களின் தலைமை நிர்வாக செயல் அதிகாரியான எலான் மஸ்க், உலகின் முதல் நிலை பணக்காரராக வலம் வருகிறார்.
டிவிட்டர் நிறுவனத்தின் 9.2% பங்குகளை எலான் மஸ்க் வாங்கி, அமெரிக்கப் பங்குச் சந்தையில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் டிவிட்டர் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் சேர விரும்பவில்லை என்று எலான் மஸ்க் தெரிவித்திருப்பதாக அந்நிறுவனம் வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
சமீபத்தில் தான், டிவிட்டர் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் ஒருவராக எலான் மஸ்க் நியமிக்கப்படுவார் என்று அந்நிறுவனம் அறிவித்திருந்தது. ஆனால் தற்போது எலான் மஸ்க்கின் இந்த திடீர் முடிவால் அந்நிறுவனம் அதிர்ச்சியடைந்துள்ளது.
இதுகுறித்து டிவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வால் வெளியிட்டுள்ள பதிவில்,
டிவிட்டர் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் எலான் மஸ்க் இணைவதை பற்றி, அனைத்து குழு உறுப்பினர்களிடம் பேசப்பட்டது. எலான் மஸ்க் நிறுவனத்தில் முக்கிய பங்கு வகித்து, அனைத்து குழு உறுப்பினர்களையும் போல நிறுவனத்தின் நலன்களுக்காக செயல்பட வேண்டும் என்று நம்பினோம்,
அதற்காக அனைத்து பங்குதாரர்களையும் போல பயணிக்க அவருக்கு இடம் ஒதுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
ஆனால் டிவிட்டர் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் எலான் மஸ் இணைய விரும்பவில்லை என தெரிவித்துவிட்டதாக கூறிய பராக், எங்கள் பங்குதாரர்கள் எங்கள் குழுவில் சேர்ந்திருந்தாலும், சேராவிட்டாலும், அவர்களின் கருத்துக்களை உநாங்கள் எப்போதும் மதித்து இருக்கிறோம், என்றும் மதிப்போம் என்றார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.